வடக்கன் பாட்டு

கேரளத்தின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த வீரர்களின் வரலாற்றைப் பற்றிய பாடல்களை வடக்கன் பாட்டுகள் என்பர், இதில் மலபாரின் கடத்தனாடு, கோலத்துனாடு, வயனாடு உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்த வீர்ர்களைப் பற்றிய பாடல்கள் இடம் பெறும். இவற்றைப் பாணர்கள் பாடுவர். வடக்கன் பாட்டுகள் வாய்வழிப் பாட்டுகளாகவே பல ஆண்டுகளாக தலைமுறைகள் கடந்து நிற்கின்றன.


தச்சோளி ஒதேனன், ஆரோமல் சேகவர், உண்ணியார்ச்ச, பாலாட்டு கோமன், பாலாட்டு குஞ்ஞிக்கண்ணன், ஆரோமலுண்ணி, பய்யம்பிள்ளி சந்து உள்ளிட்ட வீரர்களைப் பற்றிய கதைகள் இந்த பாடல்களின் வழியே அறியப்பட்டன.

திரைப்படங்கள் தொகு

வடக்கன் பாட்டுகளைப் பற்றி பல மலையாளத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. இவற்றில் 1961ல் வெளியான திரைப்படமே வடக்கன் பாட்டு பற்றிய முதலாவது திரைப்படம். இது உண்ணியார்ச்ச என்பதாகும். பின்னர் வெளிவந்த திரைப்படங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கன்_பாட்டு&oldid=2225243" இலிருந்து மீள்விக்கப்பட்டது