வடக்கு தெற்கு சிறப்பு சரக்கு பாதை (இந்திய இரயில்வே)

வடக்கு தெற்கு சிறப்பு சரக்கு பாதை யானது  டெல்லி மற்றும் சென்னையை இணைக்கும் வகையில் முன்மொழியப்பட்டது. இது தோராயமான நீளமாக  2343 கிலோமீட்டர் மற்றும் 43 நிலையங்களுடன் முன்மொழியப்பட்டது.  ரயில்வே அமைச்சகமானது நான்கு சிறப்பு சரக்கு பாதைகளிலும்  பூர்வாங்க பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வினை மேற்கொள்ள DFCCIL-யை நியமித்துள்ளது:

  • கிழக்கு-மேற்கு சரக்கு பாதை(கொல்கத்தா-மும்பை) சுமார். 2,330 கி. மீ.
  • வடக்கு-தெற்கு சரக்குபாதை(தில்லி-சென்னை) சுமார். 2,343 கி. மீ.
  • கிழக்கு கடற்கரை சரக்குபாதையில் (கரக்குபூர்-விஜயவாடா) சுமார். 1100 கி. மீ.
  • தெற்கு சரக்கு பாதை (சென்னை-கோவா) சுமார். 899 கி.மீ.[1]

இது 2016-17 இரயில்வே நிதிஅறிக்கை சமர்பிக்கப்படும்பொழுது இரயில்வே நிதி அமைச்சர் திரு.சுரேசுபிரபுவினால் அறிவிக்கப்பட்டது.[2] இந்த திட்டத்திற்காக எதிர்பார்க்கப்படும் தோராயமான தொகை 13பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்த திட்டம் அன்னிய நேரடி முதலீட்டு திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் PPP (Public Private Partnerships) அடிப்படையில் செயற்படுத்தப்படும். .[3]


சான்றுகள் தொகு

  1. "Progress in Dedicated Freight Corridor". பார்க்கப்பட்ட நாள் 2016-04-18.
  2. "Rail Budget 2016: Railways to develop three dedicated freight corridors". www.businesstoday.in. பார்க்கப்பட்ட நாள் 2016-04-18.
  3. "Rail Budget 2016: Govt plans 3 more freight corridors through PPP". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-04-18.