வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்

மதுரை மாவட்டத்திலுள்ள கோயில் தெப்பக்குளம்

வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் என்பது மதுரை மாவட்டத்தின் வண்டியூர் புறநகர்ப் பகுதியில் வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில் அருகில் அமையப் பெற்றுள்ளது . இந்தத் தெப்பக்குளம் 304. 8 மீட்டர் நீள அகலம் கொண்டது. தெப்பக்குளத்தின் நான்குபுறமும் 12 நீளமானப் படிக்கட்டுகளும், சுமார் 15 அடி உயரத்துக்கு கல்லினால் சுவரும் கட்டப்பட்டிருக்கின்றன. இதன் நடுவிலுள்ள நீராழி மண்டபத்தில் தோட்டத்துடன்கூடிய விநாயகர் கோயில் ஒன்றுள்ளது. சுரங்கக் குழாய்களின் மூலமாக வைகை நதி நீர் தெப்பத்திற்குள் வருமாறு இணைப்பு உள்ளது.[1] இது தமிழ்நாட்டிலுள்ள பெரிய தெப்பக்குளமாகும்.

வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்
அமைவிடம்வண்டியூர், மதுரை, தமிழ்நாடு - 625009
ஆள்கூறுகள்9°54′39″N 78°08′53″E / 9.9108°N 78.1481°E / 9.9108; 78.1481
வகைகுளம்
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச நீளம்1000 அடி
அதிகபட்ச அகலம்950 அடி
மேற்பரப்பளவு16 ஏக்கர்
சராசரி ஆழம்29 அடி
கடல்மட்டத்திலிருந்து உயரம்188 மீட்டர்
தெப்பத் திருவிழாவின் போது வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், மதுரை

வரலாறு தொகு

 

திருமலை நாயக்கர் அரண்மனை கட்டுவதற்காக வேண்டிய மணலை மதுரை மன்னராக இருந்த திருமலை நாயக்கரால் இங்கு தோண்டப்பட்டது. மணல் தோண்டியதால் பள்ளமாக இருந்த அப்பகுதியை சீரமைக்க எண்ணிய மன்னன் அப்பகுதியை சதுர வடிவில் வெட்டி, 1645ல்[2] தெப்பக்குளமாக மாற்றி அதன் நடுவே வசந்த மண்டபம் ஒன்றினையும் கட்டினார்.[3]

சிறப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Madurai.org
  2. "வண்டியூர்". Archived from the original on 2012-04-18. பார்க்கப்பட்ட நாள் 2012-03-28.
  3. தினமலர் தகவல்
  4. தெப்பத் திருவிழா