வண்டுத் தேனீ

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Bombus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

வண்டுத் தேனீ அல்லது வண்டுத்தேனீ அபிடேயே பெருங்குடும்பத்தில் உள்ள தேனீ குடும்பத்தில் உள்ள பாம்பஸ் இனத்தைச் சேர்ந்தது. பாம்பினி மலைவாழ் பேரினத்தில் இந்த ஒரு இனம் தான் தற்போது நடப்பில் உயிரோடு உள்ளது. சிலவகை அழிந்த இனங்கள் அவற்றின் புதை படிவத்தின் மூலம் கண்டறியப் பட்டுள்ளது. 250 வகையான வண்டுத் தேனீ இனம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. முக்கியமாக இவைகள் உயரமான இடங்களிலும் வடதுருவ அட்சரேகை பகுதிகளிலும் காணப்படும். இவைகள் தென் அமெரிக்காவிலும் காணப் படுகிறது. இங்கு தாழ்நில வெப்பமண்டல தேனீ இனம் காணப் படுகிறது. ஐரோப்பிய வண்டுதேனீகள் நியூசிலாந்து மற்றும் டாஸ்மனியா நாடுகளிலும் அறிமுகப் படுத்தப் பட்டது. ஒட்டுண்ணி தேனீக்கள் அல்லது குயில் தேனீக்கள் (இவைகள் தங்கள் குஞ்சுகளை வளர்க்க அடுத்த உயிரிகளை குயில் போல நம்பி இருப்பதால் இந்த பெயர்) சித்ரஸ் (Psithrus) இனத்தின் உப சிற்றினமாகக் கருதப் பட்டது ஆனால் தற்போது பாம்பஸ் இனத்தின் அங்கமாகக் கருதப் படுகிறது.

வண்டுத் தேனீ
புதைப்படிவ காலம்:Eocene–Present
பந்துவால் துளைபோடும் தேனீ (பாம்பஸ் டெர்ரஸ்ட்ரீஸ்)
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Bombus
உயிரியற் பல்வகைமை
> 250ற்கும் மேற்பட்ட சிற்றினங்கள் மற்றும் பேரினங்கள்
Natural distribution shown in red.
Introductions to New Zealand, spread to Tasmania not shown

இவ்வகைத் தேனீக்களில் அநேகம் சமூக பூச்சிகளாகும். இவைகள் ஒரே இராணித் தேனீயோடு குழுக்களாக அல்லது கூட்டமாக வாழ்பவை. இந்த குழுக்கள் சதாரண தேனீக்களை விட சிறியவை. இவைகள் ஐம்பது தேனீக்கள் மட்டுமே உள்ள கூட்டமாக வாழும். பெண் வண்டுத் தேனீக்கள் மறுபடியும் மறுபடியும் கொட்டக்கூடியவை ஆனால் பொதுவாக இவை மனிதரையும் மிருகங்களையும் கண்டு கொள்வதில்லை. குயில் இன தேனீக்கள் தாங்களாகக் கூடு கட்டுவதில்லை ஆனால் அவற்றின் இராணித் தேனீக்கள் மற்ற இன தேனீக்களின் கூட்டில் ஆக்ரோஷமாக நுழைந்து அவற்றின் இராணித் தேனியை கொன்று தன் முட்டைகளை அக்கூட்டில் இடும்.

வண்டுத்தேனீக்கள் வட்ட வடிவமும் அவற்றில் மென்மையான முடியும் கொண்டவை. இம்முடிக்கு பைல் என்று பெயர். இந்த முடியானது இவைகளுக்கு ஒரு தெளிவற்ற உருவத்தைக் கொடுக்கிறது. இத்தேனிக்களின் வண்ணம் அவைகளைக் கொல்ல வரும் அவைகளின் எதிரிகளுக்கு எச்சரிப்பைக் கொடுக்கும்.(எச்சரிப்பு என்பது தன்னை உண்பதால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளைக் குறிக்கும்). அநேக வேளைகளில் முரண்பாடான வண்ணங்களைக் வரிவரியாகக் கொண்டிருக்கும். சில வேளைகளில் ஒரே இடத்தில் உள்ள வேறு வேறு இனத்தைச் சார்ந்த தேனீக்கள் தங்களைக் காத்துக் கொள்வதற்காக ஒன்று மற்றொன்றைப் போல மாறி கொள்ளும். இதனால் இவற்றின் எதிரிகள் இவற்றை தங்களின் எச்சரிப்பாக எடுத்துக் கொண்டு அவற்றை விட்டு விலகி சென்று விடும். இந்த நிகழ்வுக்கு ஜெர்மன் இயற்கை ஆராய்ச்சியாளர் பெயரால் முல்லெரியன் மிமிக்ரி(போலி வண்ண நடிப்பு) என்று அழைக்கப் படுகிறது. சில வேளைகளில் தீங்கில்லாத பூத் தேனீக்கள் அவைகளைப் போன்று தோற்றமளிக்கும் வண்டுத் தேனீகளிடம் பாதுகாப்பைத் தேடிக்கொள்ளும். கூடு கட்டும் வண்டுத் தேனீக்கள் அவற்றைப் போல் தோற்றமளிக்கும் கூடுகட்டாத குக்கூ தேனீயிடமிருந்து அவற்றின் பின்னங்கால்கள் மூலம் வேறு படுத்தி அறிய முடியும். கூடுகட்டும் தேனீக்களின் பின்னங் கால்கள் மகரந்தக் கூடையாக மாறுபாடடைந்துள்ளது. இது வழவழப்பான் வெற்றிடத்தில் ஒரங்களில் முடியால் சூழப்பட்டு மகரந்தத்தை கடத்த உதவுகிறது. ஆனால் குக்கூ தேனீயில் பின்னங் கால்கள் முழுவதும் முடியால் மூடப் பட்டிருக்கும் அவற்றிற்கு இடையில் மகரந்தம் காணப்படும்.

வண்டு தேனீக்கள் தங்கள் உறவினர் தேனீக்களைப் போல பூக்களின் மதுரத்தை உண்டு உயிர் வாழும். தங்களின் முடி நிறைந்த நாவினால் மதுரத்தை நக்கும். இவைகள் பறக்கும் போது தங்களின் உறிஞ்சுக் குழலை அவற்றின் தலைக்கு அடியில் வைத்துக் கொள்ளும். இவைகள் மதுரத்தை கூட்டில் சேமித்து வைக்கவும் மகரந்தத்தை தங்கள் குஞ்சுகளுக்கு உணவூட்டவும் உபயோகப் படுத்துகிறது. இவைகள் தங்களின் உணவை மல்ர்கள் காணப் படும் இடம் மற்றும் வண்ணத்தை வைத்து கண்டுபிடித்து தேடிக் கொள்ளும். சில வண்டுத் தேனீக்கள் மலர்களின் அடியில் துளையிட்டு அவற்றின் மதுரத்தை திருடி விடும் அதாவது மகரந்ததூளின் பரிமாற்றம் இல்லாமல் தேனை உறிஞ்சும். பொதுவாக தேனீக்கள் மிகச் சிறந்த மகரந்த சேர்க்கையாளர்கள். எனவே அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இவைகளின் அழிவு கவலைப் படக்கூடிய ஒன்று ஆகும். இவைகளின் அழிவிற்கு முக்கிய காரணம் வாழ்விடமின்மை, விவசாயத்தில் உப்யோகப்படுத்தப் படும் அதி நவீன எந்திரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் ஆகும்.

இனவரலாறு தொகு

இந்த வண்டுத் தேனீயின் இனக் குழு பாம்பினி ஆகும்.இது அபிடே குடும்பத்திலுள்ள கார்பிகுலேட் (மகரந்தக் கூடை உடையவை) குழுமத்திலுள்ள நான்கு குழுக்களில் ஒன்றாகும். மற்றவை அபினி (தேனீக்கள்). யூக்லோஸினி(ஆர்கிட் தேனீக்கள்) மற்றும் மெலிபொனினி ஆகும்(கொடுக்குகள் இல்லாதவை).கார்பிகுலேட் தேனீக்கள் ஒற்றை மரபு வரிசை உடையவை ஆகும்.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்டுத்_தேனீ&oldid=3362170" இலிருந்து மீள்விக்கப்பட்டது