வண்ணத்தீட்டுக்கோல்

வண்ணக்கட்டி அல்லது வண்ணத்தீட்டுக்கோல் (crayon) என்பது ஒரு வண்ணக் குச்சி ஆகும். இது மெழுகு, கரி, சுண்ணாம்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்பட்டது இது குழந்தைகள் வரைய அல்லது வண்ணம்தீட்ட பயன்படுத்தப்படும் பொருள் ஆகும்.

பலவண்ணத் தீட்டுக்கோல்கள்

இவை விலை மலிவாகவும், நச்சுத் தன்மை அற்றதாகவும் (பென்சில் அல்லது பேனா பயன்படுத்தும் போது அதன் கூர்மைபோன்ற ஆபத்து அற்றது) உள்ளவை. வண்ணப்பூச்சுகள் செய்ய குறிப்பான் எழுதுகோல்களை விட எளிதானதாக உள்ளவை, மேலும் பலவேறு நிறங்களில் கிடைக்கக்கூடியது. இந்தப் பண்புகளால் மாணவர் மற்றும் தொழில்முறை கலைஞர்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கூடுதலாக சிறிய குழந்தைகள் வரைந்து பழக எளிதான பொருளாக உள்ளது.

தற்கால கிரேயான்களின் வரலாறு தொகு

அமெரிக்காவைச் சேர்ந்த சகோதரர்களான எட்வின் பின்னி, ஹெரால்டு ஸ்மித் ஆகியோர் சாயப்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திவந்தனர். இவர்கள் நிறுவனத்தில் இரண்டு நிறங்களில் கிரேயான்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. சிவப்பு கிரேயான்கள் வண்ணம் பூசவும், கறுப்பு கிரேயான்கள் டயர் என்னும் வட்டகைகளுக்கு வண்ணம் சேர்ப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுவந்தது. 1900ஆம் ஆண்டில் இவர்கள் பென்சில்கள் தயாரித்து விற்கத் துவங்கினர். ஒரு நாள் அவர்கள் பெனிசில் விற்பனை பொருட்டு ஒரு பள்ளிக்குச் சென்றனர். அங்கு கிரேயான்களைக் கொண்டு சிறுவர்கள் படம் வரைந்து வண்ணம் பூசிக்கொண்டிருந்தார்கள். அது சிறுவர்களுக்கு கடினமாக இருப்பதையும், அந்த வண்ணக் கிரேயான்கள் நச்சுத்தன்மை கொண்டுள்ளதையும் கண்டு குழந்தைகளுக்கு எளிதாகவும், நச்சுத்தன்மை அற்றதாகவும் இருக்கும்வகையில் கிரேயான்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் 1903இல் இப்போது உள்ள மாதிரியான கிரேயான்களான அவை விற்பனைக்கு வந்தன.[1]

பெயர் காரணம் தொகு

பின்னியின் மனைவி ஆலிஸ்தான் இந்த வித்தியாசமான கலர் பென்சிலுக்குக் கிரேயான் என்று பெயர் சூட்டியவர். சாக்பீஸ் போன்று இதன் வடிவம் இருப்பதால் இதற்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டது. கிரேயான் என்பது பிரெஞ்சு சொல். சாக்பீஸுக்கு பிரெஞ்சு மொழியில் கிரை என்று பெயர். ஓலா என்றால் எண்ணெய். இந்த இரண்டு வார்த்தைகளையும் சேர்த்துதான் கிரேயானோ அல்லது கிரேயான் என்ற பெயரை ஆலிஸ் உருவாக்கினார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்ணத்தீட்டுக்கோல்&oldid=3206432" இலிருந்து மீள்விக்கப்பட்டது