வம்சதாரா ஆறு

வம்சதாரா ஆறு (Vamsadhara or Bansadhara River) என்பது இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களின் வழியே கிழக்கு நோக்கிப் பாயும் ஒரு முக்கியமான ஆறு ஆகும். இது ருசிகுல்யா ஆறு மற்றும் கோதாவரி ஆறுகளுக்கிடையே பாய்கிறது.

இந்த ஆறு ஒடிசா மாநிலத்தின் களாஹாண்டி மாவட்டம் மற்றும் ராயகடா மாவட்டம் ஆகிய இடங்களில் தொடங்கி கிழக்கு நோக்கி 254 கி.மீ தூரம் ஓடி வருகிறது. பின்னர் ஆந்திரப்பிரதேச மாநிலம் கலிங்கப்பட்டினம் என்ற இடத்தில் வங்காள வரிகுடாவில் கலக்கிறது. இந்த ஆற்றின் மொத்த நீர்பிடிப்புப் பகுதி 10,830 சதுர கிலோமீட்டர் ஆகும்

சிறீகாகுளம் மாவட்டத்தின் கலிங்கப்பட்டினம் இந்த ஆற்றின் ஓரத்தில் அமைந்துள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாகும்.

மகேந்திர தனாயா [1] வம்சதாரா ஆற்றின் முக்கிய துணை ஆறாகும். இது ஒடிசா மாநிலத்தின் கஜபதி மாவட்டத்தில் உருவாகிப் பின்னர் ஆந்திர மாநிலம் கோட்டா அணைக்கட்டில் இணைகிறது. இந்த ஆற்றின் குறுக்கே ரேகுலப்பாடு என்ற இடத்தில் ஆற்றைத் தடுத்து பாசனத்திற்குப் பயன்படுத்த புதிய அணைக்கட்டு ஒன்று கட்டப்பட்டுவருகிறது.[2]

வம்சதாரா திட்டம் தொகு

பொட்டெபள்ளி ராஜகோபால ராவ் செயல்திட்டம் இந்த வம்சதாரா ஆற்றில் கட்டப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Mahendra Tanaya River of Odisha]
  2. Four years after laying stone river projects fail to take off - The Hindu August 19, 2012
  3. "The Hindu on Vamsadhara project". Archived from the original on 2013-01-03. பார்க்கப்பட்ட நாள் 2021-08-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வம்சதாரா_ஆறு&oldid=3570818" இலிருந்து மீள்விக்கப்பட்டது