வராக அவதாரம்

வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் பன்றி (வராகம்) அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற இரணியனின் தம்பி இரண்யாட்சன் என்ற அசுரனுடன், வராக அவதாரத்தில், விஷ்ணு, ஆயிரம் ஆண்டுகள் போர் செய்து வென்றார் என்பது ஐதிகம்.[1]சடபாதபிராமணம், தைத்தர்ய ஆரண்யகம் மற்றும் இராமாயணம் போன்ற இலக்கியங்களில் இந்த அவதாரத்தினைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. [1] வராகப் படிமம் என்பதை ஆதிவராகம், யக்ஞவராகம், பிரளய வராகம் என்று மூன்றாகப் பிரித்துள்ளனர். இந்தப் பிரிவு, அதன் வடிவத்திற்கேற்ற படி பிரிக்கப்பட்டுள்ளது. [1] திருமால் பன்றி உருவில் ஏழு உலக மண்ணையும் இடறிப் பார்த்தும், சிவன் அடிகளைக் காண முடியவில்லை.[2]

வராக அவதாரம்

கோயில்களில் தொகு

ஏரான் எனும் இடத்தில் குப்தர்கள் காலத்து வராகப் படிமம் உள்ளது. இதுவே தற்போது இருக்கும் படிமங்களில் தொன்மையானது.[1] மாமல்லபுரத்தில் ஆதிவராக வடிவம் குடவரையாக செதுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருப்பது பொ.ஊ. 7 மற்றும் பொ.ஊ. 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.[1]

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், திருப்பரங்குன்றம் ஆகியவற்றில் குடவரையாக உள்ளது. இவை பல்லவர்கள் மற்றும் சோழர்கள் காலத்தில் அமைக்கப்பட்டதாகும்.[1]

கருவி நூல் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 http://www.tamilvu.org/tdb/titles_cont/sculpture/html/varaha.htm
  2. நான்முகன் முதலா வானவர் தொழுது எழ
    ஈர் அடியாலே மூவுலகு அளந்து
    நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப்
    போற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்று
    அடிமுடி அறியும் ஆதரவு அதனில்
    கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து
    ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து
    ஊழி முதல்வ சயசய என்று
    வழுத்தியும் காணா மலர்அடி இணைகள் - திருவாசகம் - போற்றித் திரு அகவல் - அடி 1-9

"https://ta.wikipedia.org/w/index.php?title=வராக_அவதாரம்&oldid=3608373" இலிருந்து மீள்விக்கப்பட்டது