வரைபலகை என்பது பொதுவாகத் தொழில்நுட்ப வரைபடங்களை வரைவதற்கான ஒரு பலகை ஆகும். பல்வேறு அளவுகளிலுள்ள வரை தாள்களைப் பொருத்தி வரைவதற்கு ஏற்ற வகையில் வரைபலகைகளும் பல்வேறு அளவுகளில் உள்ளன. கணினி உதவு வரைதல் முறைமை பரவலாகப் புழக்கத்துக்கு வருமுன் தொழில்நுட்ப வரைபடங்களை வரைவோர்க்கான முக்கியமான பொருளாக இது இருந்துவந்தது. இப்பொழுது பல இடங்களில் வரைபலகைகளின் இடங்களைக் கணினிகள் எடுத்துக்கொண்டு விட்டன.


ஒரு எளிமையான வரைபலகை பலகையையும், கிடையான இணைகோடுகளை வரைவதற்கான T-மட்டையையும் உள்ளடக்கியதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரைபலகை&oldid=1349694" இலிருந்து மீள்விக்கப்பட்டது