வளர் உருமாற்றம்

உயிாியலில், உதிர்தல், சிந்துதல் எனப்படுவது சிறகு உதிர்த்தல் அல்லது மேற்தோலுாித்தல் எனப்படுகிறது. பொதுவாக முதுகெலும்பற்ற உயிாிகளில் தோலுாித்தல் என்றே அழைக்கப்படுகிறது. தோலுாித்தலானது, விலங்குகளின் உடலின் பாகங்களில் நடக்கக் கூடிய வழக்கமான பணியாகும். இப்பணியானது, எப்பொழுதுமே அல்லமல் எப்பவாவது நடக்கக் கூடியதாகும், இது வெளிப்புற அடுக்கில் அல்லது வெளிச்சுவாில் ழுறையாக நடக்கிறது. இந்நிகழ்வானது, வருடத்தின் குறிப்பிட்ட நேரங்களில் அல்லது குறிப்பிட்ட வாழ்க்கை சுழற்சியில் நடக்கிறது.

தட்டான் பூச்சியின் வளர்உருமாற்றத்தின் இறுதி நிலை , நிம்ப்பிலிருந்து முழுஉயிாியாதல்

தோலுாித்தல் என்பது புறத்தோலை உதிர்த்தல் (தோல்), ரோமங்கள் (முடி, இறகுகள், உரோமங்கள், கம்பளி உரோமங்கள்), அல்லது வேறு புற அடுக்குகளை உதிர்த்தலாகும். இன்னும் சில வகைகளில் உடல் உறுப்புகள் கூட உதிர்கின்றது. எடுத்துக்காட்டாக, இறக்கைகள் சில வகைகளிலும், கணுக்காலிகளில் புறச்சட்டகமும் உதிர்கின்றன.

பறவைகளில் தொகு

பறவைகளில், புதிய இறகுகள் முளைக்கும் போது பழைய இறகுகளை அவ்வப்போது உதிர்ப்பது உருமாற்றம் ஆகும். இறகுகள் முதிர்ச்சியடையும் போது இறந்த கட்டமைப்பைக் கொண்டிருக்கும், அவை படிப்படியாகக் குறைக்கப்பட்டு மாற்றப்பட வேண்டிய ஒன்றாகும்..முதிர்ச்சியடைந்த பறவைகள் வருடத்திற்கு ஒரு முறையாவது இறகுகளை உதிர்க்கின்றன, இருந்த போதிலும் பல பறவைகள் வருடத்திற்கு இருமுறையும் மற்றும் சில மூன்று முறை இறகுகளை உதிர்க்கின்றன. .[1]

 
பென்குயின் இழந்த தன் இறகுகளை மாற்றீடு செய்தல்

பறவைகள் எப்பொழுதும் தங்கள் இறகுகளை அரிதாகவே சிந்துவதால் இது பொதுவாக மெதுவான செயல்முறையாகும்; பறவை அதன் உடல் வெப்ப நிலையைச் சீராக்க மற்றும் ஈரப்பதத்தை தவிர்க்க போதுமான இறகுகளை வைத்திருக்கின்றது. உடல் பாகத்திற்கு ஏற்ப உதிர்க்கின்ற இறகுகளின் எண்ணிக்கையும் மாறுபடும். சில உருமாற்றம் அடையும் காலங்களில், ஒரு பறவை தலை மற்றும் உடலில் உள்ள இறகுகளை மட்டுமே புதுப்பிக்கக்கூடும், உருமாறுதலின் இறுதி கட்டத்தில் இறக்கை மற்றும் வால் இறகுகளை உதிர்க்கும். சில சிற்றினங்களில் பறவைகள் வருடாந்திர "இறக்கை உதிர்வின்" போது பறக்கமுடியாது, அந்த நேரத்தில் நம்பகமான உணவு கிடைக்கும் இடத்தையும் பாதுகாக்கப்பட்ட வாழ்விடத்தை நாடுகின்றது. இறகுகள் உதிர்த்தலின் போது தழும்புகள் மெல்லியதாகவோ அல்லது சீரற்றதாகவோ தோன்றினாலும், இறகுகளை இழந்த போதிலும் கூட பறவையின் பொதுவான வடிவம் பராமரிக்கப்படுகிறது; வழுக்கை புள்ளிகள் காணப்பட்டால் பொதுவாக நோய்களின் அறிகுறிகளாகும், அவையாவன,உடல் முழுவதும் காயங்கள், ஒட்டுண்ணிகள், இறகுகள் கொத்தாக உதிர்தல் (குறிப்பாக வணிக கோழிகளில்) அல்லது (செல்லப் பறவைகளில்) இறகு பறித்தலாகும். சில பறவைகள் இறகுகள் உதிர்த்தலில், குறிப்பாக வால் இறகு உதிர்த்தலை, "திகில் உருமாற்றம்" என்று அழைக்கப்படுகிறது..[2]

ஊர்வனவற்றில் தொகு

ஊர்வனவற்றில் நமக்கு நன்கு தொிந்த எடுத்துக்காட்டு பாம்பு "தன் தோல் உாித்தலாகும்". பாம்புகள் தோலுாித்தலானது, இரண்டு பாறைகளுக்கு இடையில் அல்லது கடினமான மரத் துண்டு போன்ற பொருளுக்கு எதிராக பாம்பு தலையைத் தேய்ப்பதன் மூலம் இது தன் தோலை உாிக்கின்றது. இதனால் ஏற்கனவே நீட்டப்பட்ட தோல் பிளவுபடுகிறது. இந்த கட்டத்தில், பாம்பு அதன் தோலை பொருள்களின் மீது தேய்த்துக் கொண்டே செல்கிறது, இதனால் தலைக்கு அருகில் உள்ள முனை தன்னைத் தானே உரிக்கிறது, பாம்பு அதன் உடலில் இருந்து வெளித்தோலில் முழுமையாக உாிந்து உள்ளுள்ள தோல் வெளியே வரும் வரை திறம்பட உாிக்கின்றது. திறந்த முனையைப் பிடித்து, அதை மேலே இழுப்பதன் மூலம் ஒருவரின் காலில் இருந்து காலுறையை எவ்வாறு அகற்றுகிறோமே அதற்கு ஒப்பாகும். தோலுாித்தல் நிகழ்வில், பாம்பின் தோல் ஒரே துண்டாக உாிக்கப்படுகிறது, கண்குழி தோலும் உாிக்கப்படுகிறது. இதனால் தான் இவ்விலங்கின் கண் பார்வை தெளிவாகத் தொிய காரணமாக அமைகிறது. ஆனால் பல்லியில் நேர்மாறாக நடைபெறுகிறது, சிறு சிறு துண்டுகளாக தோல் உாிந்து விழுகிறது.

கணுக்காலிகளில் தொகு

பூச்சிகள், அட்டைகள் மற்றும் ஓட்டுமீன்கள் போன்ற கணுக்காலிகளில் வளர் உருமாற்றம் என்பது புற உறுப்புச் சட்டகம் உாிதல் ஆகும். புற உறுப்புச் சட்டகம் (பெரும்பாலும் அதன் ஓடு என்று அழைக்கப்படுகிறது) இது உாிவதன் மூலம் உயிாினங்கள் வளர ஏதுவாகிறது. இச்செயல்முறையை வளர் உருமாற்றம் என்று அழைக்கிறோம்.

தட்டான் பூச்சியில் வளர் உருமாற்றம் பல்வேறு நிலைகள் காட்டப்பட்டுள்ளது

இருவாழ்விகளில் தொகு

தவளைகள், தன் தோலினை தவறாமல் உாித்துக் கொள்வதுடன், உட்கொள்ளவும் செய்கிறது. சில இனங்களில் உாிக்கின்ற தோலானது சிறு சிறு துண்டுகளாகவும் வேறு சில இனங்களில் ஒரே துண்டுகளாகவும் இருக்கும்.[3]

காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. John Kenneth Terres (1980). The Audubon Society Encyclopedia of North American Birds. New York, NY: Knopf. பக். 616–617. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-394-46651-4. https://archive.org/details/audubonsocietyen00terr. 
  2. Lindström, A.; Nilsson, J.Å. (1988). "Birds doing in the octopus way: Fright moulting and distraction of predators". Ornis Scandinavica 19 (2): 165–166. doi:10.2307/3676468. 
  3. Frost, S. W. (1932). "Notes on feeding and molting in frogs". The American Naturalist 66 (707): 530–540. doi:10.1086/280458. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளர்_உருமாற்றம்&oldid=2869133" இலிருந்து மீள்விக்கப்பட்டது