வள்ளி (1993 திரைப்படம்)

வள்ளி (Valli) 1993ம் ஆண்டுவெளியான தமிழ்த் திரைபடம் ஆகும். இந்தத் திரைபடத்திற்கு கதை, வசனம், எழுதியது ரசினிகாந்த். கே. நட்ராஜ் இயக்கிய ஹரிராஜ் மற்றும் பிரியாராமன், வடிவேலு (நடிகர்) ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார். இளையராஜா இசையமைத்திருந்த இந்தத் திரைப்படம் தெலுங்கு மொழியில் "விஜயா" என்ற பெயரிலும் வெளியிடப்பட்டுள்ளது.

வள்ளி
திரைக்கதைரஜினிகாந்த்
நடிப்புரஜினிகாந்த்
ஹரிராஜ்
பிரியா ராமன்
வடிவேலு
கோவிந்தா
திலீப்
ஒளிப்பதிவுஅஜயன் வின்சென்ட்
படத்தொகுப்புகணேஷ்குமார்
நாடு இந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

இத்திரைப்படம் கதாநாயகியான வள்ளியின் (பிரியாராமன்) வாழ்க்கையைப் பற்றியதாகும். சென்னை பட்டணத்தில் 15 வருடங்களாகப் படித்து விட்டு ஊருக்கு வரும் தனது மாமன் மகளான வள்ளியை வரவேற்க ஏற்பாடு செய்யும் வேலுவின் (ஹரிராஜ்) ஆட்டம் பாட்டம் மூலமாக இத்திரைப்படம் ஆரம்பிக்கிறது. சிறுவயது முதல் வள்ளி மீது காதலுடன் இருக்கும் வேலு, வள்ளியின் வரவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொன்டிருக்கிறான். ஆனால் அவன் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் மாறாக வள்ளி நடந்துகொள்கிறாள். நல்ல முறையில் படித்து முடித்து விட்டு வந்த வள்ளிக்கு அழகு, அறிவு, திறமை மற்றும் பொருளாதாரம் என எந்த விதத்திலும் பொருத்தமில்லாதவனாக வேலுவை முற்றிலும் புறக்கணிக்கிறாள். ஆனால் என்றேறும் அவள் தனது அன்பை காதலை புரிந்து கொள்ளுவாள் எனக்காத்திருக்கின்றான்.

ஆனால் விடுமுறையை கழிப்பதற்காக அவ்வூருக்கு வரும் சேகர் (புதுமுகம் சஞ்சய்) மீது அவனது புறத்தோற்றம் மற்றும் இசைத்திறமையால் வசீகரிக்கப்படுகிறாள் வள்ளி. அதை உபயோகப்படுத்திக் கொள்ளும் சேகர் அவளைத் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி ஓரிரவில் உடலுறவு கொள்கின்றான். பின்னர் விடுமுறை முடிந்ததும் எல்லாவற்றையும் மறந்து சென்னை சென்றுவிடுகிறான். தன்னைக்கூட்டிச் செல்ல சேகர் வருவான் என நம்பி இருக்கும் வள்ளி காலம் செல்லச்செல்ல தான் ஏமாற்றப்பட்டதையும் தன்னை ஏமாற்றிய சேகர் தமிழ்நாட்டின் முதலமைச்சரின் மகன் எனவும் அறிகிறாள். நியாயம் கேட்கும் விதமாக அவனுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை ஊருக்கு வெளியில் தாங்கள் உறவு கொண்ட இடத்திலேயே ஆரம்பிக்கிறாள். தொடக்கத்தில் இப்போராட்டத்தைக் கண்டு கொள்ளாத முதலமைச்சர் பின்னர் ஊடகங்களின் முக்கியத்துவத்தால் வேறு வழியின்றி தனது மகனை அனுப்பி சமாதானம் செய்து போராட்டத்தை முடிக்க நினைக்கின்றார். தனது மாமன் மகள் தன்னோடு வாழாவிட்டாலும் பரவாயில்லை சந்தோஷமாக இருக்க வேண்டும் என இப்போராட்டத்தை ஆரம்பத்திலிருந்து ஆதரித்து வரும் வேலு, மற்ற அனைவரின் எதிர்பார்ப்புக்கும் மாறாக வள்ளி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சேகரைக் குத்திக்கொள்கிறாள்.

வள்ளிக்கு கொலைக்குற்றவாளியாக 10 வருடம் சிறைத்தண்டனை கிடைக்கிறது. தண்டனைக்காலம் முடிந்ததும் ஊருக்கு வரும் வள்ளிக்கு ஆச்சர்யம் ஏற்படுத்தும் விதமாக அவளுக்கும் வேலுவுக்கும் திருமணம் செய்ய வீரையா வள்ளியப்பன் ரஜினிகாந்த் மற்றும் சிவா வடிவேலு ஆட்டம் பாட்டத்துடன் ஏற்பாடு செய்து காத்திருக்கின்றனர். இவ்வளவும் நடந்த பின்னாலும் தனக்காக காத்திருக்கும் தனது மாமன் மகனான வேலுவுடன் தனது திருமண வாழ்க்கையை வீரையா வள்ளியப்பன், சிவா மற்றும் ஊர் பொதுமக்கள் ஆசியுடன் வாழ ஆரம்பிப்பதாக இத்திரைப்படம் முடிகிறது.

கதை மாந்தர்கள் தொகு

பாடல்கள் தொகு

அனைத்து பாடல்கள் மற்றும் பின்னணி இசை இளையராஜாவால் இசைக்கப்பட்டுள்ளது. "என்னுள்ளே என்னுள்ளே" எனத் தொடங்கும் இப்படத்தின் பாடல் தமிழ் திரையிசைப் பாடல்களுள் முக்கியமான ஒன்றாகும்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Valli". Saavn.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளி_(1993_திரைப்படம்)&oldid=3897151" இலிருந்து மீள்விக்கப்பட்டது