வவுனியா நகரசபை

வவுனியா நகரசபை (Vavuniya Urban Council, வவுனியா நகராட்சி மன்றம்) இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் உள்ள வவுனியா நகரப்பகுதிக்கு உரிய உள்ளூராட்சிச் சபை ஆகும். இந்த நகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்பு, நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. இந்த நகரசபைப் பகுதி 11 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாகப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கட்சிகள் சமர்ப்பிக்கும் பட்டியலில் இருந்து அக்கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவர்.

வவுனியா நகர சபை
வகை
வகை
உள்ளூராட்சி
தலைமை
தலைவர்
ஐயாத்துரை கனகையா, த. தே. கூ
யூலை 2011 முதல்
துணைத் தலைவர்
முத்துக்குமாரசுவாமி முகுந்தரதன், த. தே. கூ
ஆகத்து 2009 முதல்
செயலாளர்
வி. வசந்தகுமார்
உறுப்பினர்கள்11
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்கள், 2009

தேர்தல் முடிவுகள் தொகு

1983 உள்ளூராட்சித் தேர்தல் தொகு

18 மே 1983 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[1]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 5,454 77.04% 9
  ஐக்கிய தேசியக் கட்சி 1,625 22.96% 2
செல்லுபடியான வாக்குகள் 7,079 100.00% 11
செல்லாத வாக்குகள் 69
மொத்த வாக்குகள் 7,148
பதிவில் உள்ள வாக்காளர்கள் 10,230
வாக்களித்தோர் 69.87%

2009 உள்ளூராட்சித் தேர்தல் தொகு

18 மே 1983 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[2]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4,279 34.81% 5
  சனநாயக மக்கள் விடுதலை முன்னணி 4,136 33.65% 3
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 3,045 24.77% 2
  இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 587 4.78% 1
  ஐக்கிய தேசியக் கட்சி 228 1.85% 0
இலங்கை முற்போக்கு முன்னணி 10 0.08% 0
சுயேச்சை 1 6 0.05% 0
சுயேச்சை 3 1 0.01% 0
சுயேச்சை 2 0 0.00% 0
செல்லுபடியான வாக்குகள் 12,292 100.00% 11
செல்லுபடியாகா வாக்குகள் 558
மொத்த வாக்குகள் 12,850
பதிவில் உள்ள வாக்காளர்கள் 24,626
வாக்களித்தோர் 52.18%

மேற்கோள்கள் தொகு

  1. Sarveswaran, K. (2005). The Tamil United Liberation Front: Rise and Decline of a Moderate Ethnic Party in Sri Lanka (1976-2000). Jawaharlal Nehru University. 
  2. "Local Authorities Election 2009 Final Results Vavuniya Urban Council". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2009-12-10. பார்க்கப்பட்ட நாள் 2017-03-18.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வவுனியா_நகரசபை&oldid=3570987" இலிருந்து மீள்விக்கப்பட்டது