வாகீச முனிவர்

வாகீச முனிவர் சைவ சித்தாந்தக் குருமார்களில் ஒருவர். 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஞானாமிர்தம் என்னும் நூலை இயற்றியவர். பரமானந்தர் இவரது ஞானாசிரியர். பரமானந்தர் கோடம்பாகை என்னும் ஊரில் வாழ்ந்துவந்தார். இவ்வூர் வேதாரணியத்துக்கு அருகில் உள்ளது. வாகீசரின் இளமைப்பெயர் ‘அருண்மொழித் தேவன்’.[1][2]

பாகை முனிவர், ஞானாமிர்த ஆசிரியர் என்றெல்லாம் இவரை வழங்குவர். வாகீசரின் குடிப்பெயர் அம்பர் கிழான்.

இவர் திருவொற்றியூர் சென்று சில காலம் வாழ்ந்துவந்தார். இவர் இங்கு வாழ்ந்தபோது ‘சோம சித்தாந்தம்’ என்னும் புதிய கோட்பாட்டைக் கூறி வளர்த்துவந்தார்.[3]

பின்னர் திருநெல்வேலி நாட்டுக்குத் திருவாலீச்சுரம் சென்று அங்கிருந்த ‘கோளகி’ மடத்தில் சில காலம் வாழ்ந்தார்.[4]

அடிக்குறிப்பு தொகு

  1. அருண்மொழித் தேவன் என்னும் பெயர் சோழ அரசன் முதலாம் இராசராசனின் இயற்பெயர்.
  2. சேக்கிழாரின் இயற்பெயரும் இதுவே.
  3. சோம சம்பு சிவாசாரியார் செய்த பத்ததியின் ஒரு படிநிலை சோம சித்தாந்தம்.
  4. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1973, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாகீச_முனிவர்&oldid=2718281" இலிருந்து மீள்விக்கப்பட்டது