வான், துருக்கி

வான் (Van, துருக்கியம்: Van, ஒட்டோமான் துருக்கியம்:|وان}}, ஆர்மீனியம்: Վան Van,[1] குர்தியம்: Wan) துருக்கியின் கிழக்குப் பகுதியில் வான் ஏரியின் கரையில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இது அதே பெயருள்ள மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. வான் நகரத்தின் மக்கள்தொகை 2010 கணக்கெடுப்பின்படி 367,419 ஆகும்.[2] இருப்பினும் வேறு மதிப்பீடுகள்இதனைக் காட்டிலும் கூடுதலாக 500,000 எனவும் [3] 600,000 எனவும் [4] மதிப்பிடுகின்றன

வான்
நகரம்
அரசு
 • மேயர்பெகிர் காயா (அமைதி மக்களாட்சிக் கட்சி)
ஏற்றம்1,730 m (5,680 ft)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்3,67,419

வரலாறு தொகு

 
வான் கோட்டை மதிற்சுவரில் காணப்படும் பெர்சிய மாமன்னர் செர்கசின் கல்வெட்டு.
 
வான் ஏரி

தொல்பொருளியல் அகவாழ்வுகளில் இங்குள்ள நகரமைப்பு கி.மு 5000க்கும் முந்தையதாக கண்டறிந்துள்ளன. வான் ஏரியின் கரையில் வான் கோட்டையின் கிழக்கே சில கிமீ தொலைவில் அமைந்துள்ள தில்கிடெபெ குன்று மட்டுமே வானின் பழைமையான பண்பாட்டை பறை சாற்றுவதாக உள்ளது.

2011 நிலநடுக்கம் தொகு

அக்டோபர் 23, 2011 அன்று அமெரிக்க புவியியல் துறையால் 7.2 என மதிப்பிடப்பட்ட நிலநடுக்கத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் ஆயிரக்கணக்கானவர் காயமடைந்தும் பெரும் சேதம் விளைந்தது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. Slovar sovremennikh geographicheskikh nazvaniy (in Russian)[தொடர்பிழந்த இணைப்பு] / Ed. by acad. V.M. Kotliakov, எக்கத்தரீன்பூர்க், U-Faktoria, 2006
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-10-04. பார்க்கப்பட்ட நாள் 2011-10-24.
  3. David McDowall, "Modern History of the Kurds," I.B. Tauris, 1996, pg 440
  4. TESEV. "An Assessment of the Van Action Plan for the Internally Displaced" Accessed at http://www.tesev.org.tr/UD_OBJS/PDF/DEMP/TESEV_VanActionPlanReport.pdf பரணிடப்பட்டது 2010-10-11 at the வந்தவழி இயந்திரம்.
  5. சிஎன் என் செய்தி

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்,_துருக்கி&oldid=3571323" இலிருந்து மீள்விக்கப்பட்டது