வாமன் பண்டிட்

இந்தியக் கவிஞர்

வாமன் பண்டிட் (Vaman Pandit) (1608-1695) வாமன் தானாஜி சேசா என்றும் அறியப்படும் இவர் ஒரு மராத்திய அறிஞரும் இந்தியக் கவிஞருமாவார். [1] சேசா குடும்பத்தைச் சேர்ந்த இவர் ஒரு சிறந்த கவிஞராவார். இவருடைய கவிதை முழு மகாராட்டிராவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரது கதை கவிதை பொதுமக்களிடமும், ஹரி கீர்த்தங்கர்களிடமும் மிகவும் பிரபலமாக உள்ளது. இவரது பக்தி என்ற கருத்துக்கு ஒரு நல்ல அடித்தளத்தை அளித்துள்ளார். [2]

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

கர்நாடகாவின் தர்வாட்டில், கவிஞர்கள் மற்றும் அறிஞர்கள் அடங்கிய ஒரு முக்கிய சேசா குடும்பத்தில் தேசஸ்த் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார் . [3] நாந்தேடிலிருந்து வந்த குடும்பம் தார்வாடிற்கு குடிபெயர்ந்தது. இவர் ஒரு முக்கிய வைணவ தத்துவஞானியான மத்வாச்சாரியரைப் பின்பற்றுபவராவார். இவர் தனது வாழ்க்கையின் ஒரு குறிப்பிடத்தக்க காலத்திற்கு பிறகு வாரணாசிக்கு குடிபெயர்ந்தார். சகுண பிராமணரை (தனிப்பட்ட கடவுள்) நிர்குண பிரம்மத்தை (ஆளுமை இல்லாத கடவுள்) விட உயர்ந்தவர் என்று வாமன் பண்டிட் கருதுகிறார். பகவான் கிருட்டிணரை சகுண பிரம்ம அவதாரம் என்று கருதுகிறார்.

இலக்கியப் படைப்புகள் தொகு

இவரது மிக முக்கியமான படைப்பான யதார்த்ததிபிகா என்பது பகவத்கீதையின் வர்ணனையாகும். இவரது புத்தகமான நிகமசாரா (1673) வர்கவி வருணி வித்யா ( வேதாந்தம் ) பற்றி விரிவாக விவரிக்கிறது. அவரது மற்ற படைப்புகளில் சமாஷ்லோகி கீதை, கர்மதத்வா, பாமினிவிலாசா, ராதாவிலாசா, ராசகிரீடா, அஹலியோதாரா, வனசுதா, வேணுசுதா, கசேந்திரமோக்சம் மற்றும் சீதா ஸ்வயம்வரா ஆகியவையும் அடங்கும் . இவர் இறந்த பின்னர் 1695 ஆம் ஆண்டில், சங்கலி மாவட்டத்தின் கோரேகான் கிராமத்தில் வாரணா ஆற்றின் கரையில் ஒரு சமாதி கட்டப்பட்டுள்ளது.

குறிப்புகள் தொகு

நூலியல் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாமன்_பண்டிட்&oldid=3087065" இலிருந்து மீள்விக்கப்பட்டது