வாரங்கல் கோட்டை

தெலங்காணாவில் உள்ள கோட்டை

இந்தியாவின் தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள வாரங்கல் கோட்டை 12 ஆம் நூற்றாண்டிலிருந்து காகத்தியர் வம்சத்தின் தலைநகராக இருந்ததாக தெரிகிறது. இந்த கோட்டையில் நான்கு அலங்கார வாயில்கள் உள்ளன. அவை காகத்தியர் கலா தோரணம் என்று அழைக்கப்படுகின்றன. அவை முதலில் பாழடைந்த பெரிய சிவன் கோயிலின் நுழைவாயில்களாக அமைந்தன. பின்னர் காகத்தியன் வளைவு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தெலுங்கானாவின் சின்னத்தில் இணைக்கப்பட்டுள்ளது. [1] யுனெஸ்கோ உலக பாரம்பரிய களங்களின்பட்டியலில் " இந்தக் கோட்டை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நினைவுச்சின்னம் 10/09/2010 அன்று யுனெஸ்கோவிற்கு இந்தியாவின் நிரந்தர பிரதிநிதிகள் சமர்ப்பித்தனர். [2] [3]

வரலாறு தொகு

ஆரம்பத்தில், வாரங்கல் 8ஆம் நூற்றாண்டில் யாதவ மன்னர்களின் கட்டுப்பாட்ல் இருந்தது. 12ஆம் நூற்றாண்டில் இது காகத்தியர் வம்சத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.[4] அதன் கட்டுமானம் மற்றும் அடுத்தடுத்த மேம்பாடுகள் குறித்த துல்லியமான விவரங்கள் கேள்விக்குறியாக உள்ளது என்றாலும், வரலாற்றாசிரியர்களும் தொல்பொருள் ஆய்வாளர்களும், கோட்டையின் செங்கல் சுவர் அமைப்பு 1262ஆம் ஆண்டு இறந்த கணபதி தேவ் என்பவரால் கற்களாக மாற்றப்பட்டது என்பதை பொதுவாக ஒப்புக் கொள்கிறார்கள். அவருக்குப் பிறகு 1289 வரை அவரது மகள் ருத்ரமா தேவியும், பின்னர் அவரது பேரன் இரண்டாம் பிரதாபருத்ராவும் ஆட்சி செய்தனர். அவருடைய ஆட்சி "பொற்காலம்" என்று அறியப்பட்டது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அவரது இராச்சியம் தில்லி சுல்தான்களால் கைப்பற்றப்பட்டது.[5]

கணபதிதேவா, ருத்ரமாதேவி, மற்றும் இரண்டாம் பிரதாபருத்ரா ஆகிய அனைவருமே கோட்டையின் உயரத்தை கூட்டுதல், நுழைவாயில்கள், சதுர கொத்தளங்கள் மற்றும் கூடுதல் வட்ட மண் சுவர்கள் அமைத்தல் ஆகியவற்றைச் செய்தனர். இதன் பிறகு காகத்தியர் காலத்தில் முடிவினை நோக்கி கட்டுமானத்தை வைக்கிறது.[6]

1309 இல், மாலிக் கபூர் ஆட்சியில், அலாவுதீன் கில்ஜி 100,000 வீரர்கள் கொண்ட பெருமளவு படையுடன் [7] வாரங்கல் கோட்டையை முற்றுகையிட்டார். இரண்டாம் பிரதாபருத்ரா மற்றும் அவரது மக்கள் வலிமைமிக்க இககோட்டைக்குள் தங்களை பாதுகாத்துக் கொண்டு, படையெடுக்கும் இராணுவத்துடன் பல மாதங்கள் தைரியமாக போராடினர். முற்றுகையை ஆறு மாதங்களுக்கும் மேலாக நீக்க முடியாததாலும், அண்டை நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது கட்டுப்படுத்த முடியாத வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதால், இரண்டாம் பிரதாபருத்ரா கபூருடன் ஒரு உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டார்.[8] கோட்டைகள் ஒரு வலுவான வெளிப்புற கடினப்படுத்தப்பட்ட மண் கட்டமைப்பு மற்றும் ஆழமான பள்ளம் கொண்டதாகக் கொண்டிருந்தன என்பதை அமீர் குஸ்ராவ் விவரித்தார். உள் கோட்டை கல்லால் கட்டப்பட்டது மற்றும் அகழியால் சூழப்பட்டுள்ளது. குஸ்ரோ விவரித்த கோட்டை இன்று இருக்கும் கோட்டைகளின் இரண்டு உள் வட்டங்களுடன் ஒத்திருக்கிறது.[7] மார்ச் 1310 இல் காபர் கோட்டையை விட்டு வெளியேறியபோது, 2,000 ஒட்டகங்களின் மீது செல்வத்தை எடுத்துச் சென்றார்.[8] தில்லி சுல்தானுடன் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான நிபந்தனைகளில் பிரதாபருத்ரா வருடாந்திர திரை செலுத்துவார் என்றும், டெல்லி சுல்தானுக்கு தனது கீழான அந்தஸ்தைக் குறிக்கும் ஒரு துணை கிளை என்ற முறையில் ஒவ்வொரு நாளும் டெல்லியை நோக்கி வணங்குவார் என்றும் விதி இருந்தது.

மீண்டும் 1318 இல், வாரங்கல் கோட்டை சுல்தானின் இராணுவத்தால் தாக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டது. இசுலாமிய படையெடுப்பாளர்கள் அகழியின் குறுக்கே 450 அடி (140 மீ) மண் வளைவை அமைத்தனர். இது கோட்டையின் கல் சுவர்களை உடைத்து அதைக் கைப்பற்ற உதவியது. பிரதாபருத்ரா மீண்டும் குதிரைகள் மற்றும் யானைகளின் குழுவாக சுல்தானுக்கு ஒரு பெரிய திரை செலுத்தினார். இது தில்லி சுல்தானுக்கு செலுத்த வேண்டிய வருடாந்திர கட்டணமாக மாறியது.

குறிப்புகள் தொகு

  1. "Kakatiya arch, Charminar in Telangana state logo". The Deccan Chronicle. 30 May 2014. பார்க்கப்பட்ட நாள் 1 July 2015.
  2. Centre, UNESCO World Heritage. "Qutb Shahi Monuments of Hyderabad Golconda Fort, Qutb Shahi Tombs, Charminar - UNESCO World Heritage Centre". whc.unesco.org.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-06-22. பார்க்கப்பட்ட நாள் 2019-12-25.
  4. Satt(h) & Satt(h)u 2004.
  5. Eaton 2005.
  6. Sardar 2007, ப. 25–26.
  7. 7.0 7.1 Texas 2001, ப. 153.
  8. 8.0 8.1 Puri & Das 2003, ப. 41.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாரங்கல்_கோட்டை&oldid=3571224" இலிருந்து மீள்விக்கப்பட்டது