விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)

 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
குறுக்கு வழிகள்:
WP:VPI
WP:VPIL
WP:VPD
புதிய கருத்துக்கள் எனும் ஆலமரத்தடிக் கிளையின் கீழ் புதிய கருத்துக்கள், ஆலோசனைகள் பற்றி உரையாடலாம்.
தயவுசெய்து, புதிதாகத் தொகுக்கும்முன் பின்வருவனவற்றைக் கருத்திற் கொள்ளுங்கள்:
« பழைய உரையாடல்கள்



பெண் பங்களிப்பாளர்கள் தொகு

சமீகக் காலமாகப் பெண் பங்களிப்பாளர்களின் பங்களிப்புகள் குறைவாக உள்ளதாகக் கணிக்கிறேன். குறிப்பாகக் கொள்கை முடிவுகள், உரையாடல் போன்ற இடங்களில் பங்கேற்புகள் குறைவு. பல்வேறு சமூகக் காரணிகளால் இந்த நிலை ஏற்பட்டாலும் விக்கி அளவில் ஆர்வமுள்ளவர்களை ஊக்கப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசிக்கிறோம். புதிய பயனர்களுக்குப் பயிற்சி அளிப்பது ஒருபுறம் என்றால் ஏற்கனவே பங்களிப்பவர்களை ஊக்கப்படுத்துவது மேலே பலனளிக்கும் என நினைக்கிறேன். புதிய பெண் பயனர்களோ ஏற்கனவே பங்களிக்கும் பெண் பயனர்களோ ஏதேனும் உதவி தேவையென்றாலோ அல்லது சிக்கல்களைச் சுட்டிகாட்டவிரும்பினாலோ அறியத்தரலாம். மடலில் தொடர்பு கொள்ள விரும்பினாலும் என்னையோ சிஐஎஸின் நிதேஷ் கில் அவர்களையோ தொடர்பு கொள்ளலாம். பொதுவான யோசனைகளையும் முன்வைக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 08:12, 27 பெப்பிரவரி 2024 (UTC)Reply

வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் பயிலரங்கில், பயிற்சி பெற இருப்பவர்களில் 50% பெண் பேராசிரியர்கள் இருக்குமாறு ஒரு கோரிக்கையை கல்லூரி ஒருங்கிணைப்பாளரிடம் வைத்துள்ளோம். இது குறித்து பின்னர் இற்றை செய்கிறேன். ஏற்கனவே பங்களிக்கும் பெண் பயனர்களை மார்ச்சு மாத இணையவழிக் கூட்டத்தில் கலந்துகொண்டு தமது கருத்துகளை வைக்குமாறு கேட்டுக்கொள்ளலாம். ஒரிரு பெண் பயனர்கள் திறன்பேசி வழியாக கட்டுரை எழுதுவதாக கணிக்கிறேன். இவர்களுக்கு மடிக்கணினி பெற்றுத்தரும் வழி இருக்கிறதா என்பதனையும் கவனத்தில் கொள்ளலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:40, 27 பெப்பிரவரி 2024 (UTC)Reply

மடிக்கணினியில் தொகுப்புகள் செய்வது எளிதாக இருக்கிறது. ஆனால், திறன்பேசியில் தொகுப்புகள் செய்வது சிரமமான காரியமாக உள்ளது. நிறைய பெண் பயனர்கள் தங்களிடம் மடிக்கணினி இல்லை என்பதைத் தெரிவித்துள்ளார்கள். இது மட்டும் காரணமல்ல. ஆர்வத்துடன் பங்களிக்கும் பெண் பயனர்களைக் கண்டறிந்து அவர்களின் உண்மையான தேவை மடிக்கணினியாக இருக்கும் நேர்வில் அவற்றை நன்கொடையாளர்களிடமிருந்தோ சிஐஎஸ் மூலம் ஏற்பாடு செய்து பயன்படுத்தப்பட்ட மடிக்கணினிகளை பெற்று வழங்குவதன் மூலமாகவோ சரி செய்ய முயற்சிக்கலாம். பெண் பங்களிப்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாக செய்தித்தாள்களில் அவர்களின் பங்களிப்பு குறித்த செய்திகள் வெளிவருவதற்கு முன்னுரிமை தரலாம். --மகாலிங்கம் இரெத்தினவேலு 16:34, 27 பெப்பிரவரி 2024 (UTC)-Reply

பரப்புரைகளை ஆவணப்படுத்துதல் தொகு

தமிழ் விக்கிப்பீடியா குறித்த அறிமுக நிகழ்வுகள் அல்லது பயிற்சிப் பட்டறைகள் பெரும்பாலும் திட்டப் பக்கங்களின் வாயிலாக நடத்தப்படுகின்றன. சில நேரங்களில் ஒருவரோ அல்லது இருவரோ சென்று அறிமுகத்தைத் தருகிறோம். இவ்வாறான சிறு நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்படுவதில்லை. அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்யும் பொருட்டு, இந்தப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது: விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா அறிமுக நிகழ்வுகள் (2021 முதல்). மாற்றுக் கருத்துக்கள், பரிந்துரைகள் இருப்பின் உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:06, 9 மார்ச்சு 2024 (UTC)Reply

  விருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 14:14, 10 மார்ச்சு 2024 (UTC)Reply

மற்றும் (and) தொகு

மற்றும்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது. ஏன்? (முகநூல் காணொளியில் தகவல் உள்ளது.) இணைச்சொல் இலக்கண விதியையும் அறிதல் வேண்டும். தானியங்கி தமிழாக்கம் செய்பவர்கள் இந்த 'மற்றும்' என்பதன் பயனை அறிய மறந்து, திருத்தாத மொழிபெயர்ப்பை வெளியிடுகின்றனர். ~AntanO4task (பேச்சு) 16:06, 9 மார்ச்சு 2024 (UTC)Reply

பயனுள்ள தகவல், நன்றி.
ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 17:03, 21 மார்ச்சு 2024 (UTC)Reply

கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல் தொகு

2017 ஆம் ஆண்டில் பள்ளி ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட சுமார் 10,000 கட்டுரைகள், தொடர்ச்சியாக சரிபார்க்கப்பட்டு வந்தன. இன்றைய நாளில் சுமார் 360 கட்டுரைகள் மட்டும் மீதமுள்ளன. இவற்றை இவ்வாண்டின் சூலை மாதத்தில் சரிபார்த்து முடிக்க இருக்கிறோம்.

2009 ஆம் ஆண்டில் கூகுள் தமிழாக்கக் கருவி மூலமாக உருவாக்கப்பட்ட சுமார் 1,200 கட்டுரைகள், வெவ்வேறு காலகட்டங்களில் செம்மைப்படுத்தப்பட்டு வந்தன. இன்றைய நாளில் சுமார் 886 கட்டுரைகள் மீதமுள்ளன. இந்தக் கட்டுரைகளை செம்மைப்படுத்தி முடித்துவிட்டால், '15 ஆண்டு காலமாக தேங்கிக்கிடத்தல்' எனும் நிலை முடிவுக்கு வரும். பல முக்கியக் கட்டுரைகள் இவ்வகையில் அடங்கியிருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

2022, 2023 ஆகிய ஆண்டுகளில் விக்கி மாரத்தானில் முக்கியத்துவம், சிறப்பு மாதம், சிறப்புக் காலாண்டு என அறிவித்து இயக்கியபோதும்...147 கட்டுரைகளை மட்டுமே செம்மைப்படுத்த இயன்றது. 886 கட்டுரைகளை அடுத்த ஆண்டிற்குள்ளாக செம்மைப்படுத்தி முடிப்பதற்கு பயனர்களின் பரிந்துரைகளை வரவேற்கிறேன். உங்களின் கருத்துக்கள் / பரிந்துரைகளை விக்கிப்பீடியா பேச்சு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்/2024 எனும் பக்கத்தில் தெரிவிக்கலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:20, 12 மார்ச்சு 2024 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியா தொடர்பான தொடர்-தொகுப்பு நிகழ்வு தொகு

நடப்பு ஆண்டில் தொடர்-தொகுப்பு நிகழ்வு ஒன்றினை நடத்துவதற்கான திட்டப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்மொழிவை விக்கிப்பீடியா பேச்சு:தொடர்-தொகுப்பு 2024 எனும் உரையாடல் பக்கத்தில் இட்டுள்ளேன். பயனர்கள் தமது கருத்துக்கள் / பரிந்துரைகளை அதே உரையாடல் பக்கத்தில் இடலாம். அவற்றின் அடிப்படையில் தொடர்ந்து உரையாடி, திட்டப்பணி வரைவை இறுதி செய்ய ஏதுவாக இருக்கும்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:14, 16 மார்ச்சு 2024 (UTC)Reply

பயனர்கள் தமது ஆதரவு அல்லது எதிர்ப்பினை இந்த 'ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)' பகுதியில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:18, 17 மார்ச்சு 2024 (UTC)Reply

  ஆதரவு -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 05:33, 18 மார்ச்சு 2024 (UTC)Reply
  ஆதரவு --சத்திரத்தான் (பேச்சு) 05:43, 18 மார்ச்சு 2024 (UTC)Reply
  ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 16:17, 18 மார்ச்சு 2024 (UTC)Reply
  ஆதரவு--சிவகோசரன் (பேச்சு) 15:14, 19 மார்ச்சு 2024 (UTC)Reply
  ஆதரவு --சா. அருணாசலம் (பேச்சு) 15:23, 19 மார்ச்சு 2024 (UTC)Reply
  ஆதரவு --மகாலிங்கம் இரெத்தினவேலு 15:30, 19 மார்ச்சு 2024 (UTC)Reply
  ஆதரவு--Balu1967 (பேச்சு) 15:53, 19 மார்ச்சு 2024 (UTC)Reply
  ஆதரவு--ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 16:58, 21 மார்ச்சு 2024 (UTC)Reply

நிகழ்வை நடத்துவதற்கான நாட்கள் குறித்து பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. பயனர்கள் தமது பரிந்துரைகளை இந்தப் பகுதியில் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:36, 1 ஏப்பிரல் 2024 (UTC)Reply

முதற்கட்ட திட்டமிடலுக்கான கூட்டம் நாளை (ஏப்ரல் 6) நடைபெறுகிறது. வாய்ப்புள்ளோர் கலந்துகொண்டு, திட்டமிடலுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:57, 5 ஏப்பிரல் 2024 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியா தொடர்பான அறிமுகப் பட்டறைகள் தொகு

கலைக்களஞ்சியத்தின் கருத்துருவைப் புரிந்துகொண்டு, தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பவர்கள் இன்றைக்கு 20 முதல் 25 பேர் வரை இருப்பர். நீண்ட காலத்திற்கான வளர்ச்சிக்கு இந்த எண்ணிக்கை போதாது என்பதாக பரப்புரைகளில் ஈடுபட்டுவரும் தொடர்பங்களிப்பாளர்கள் கருதுகிறார்கள். அத்தோடு, இளம் வயதினரை அதிகளவில் பங்களிக்கச் செய்வதன் முக்கியத்துவமும் உணரப்பட்டுள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் கருத்திற்கு கொண்டு, விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறைகள் 2024 எனும் திட்டத்தை இங்கு முன்வைக்கின்றேன். திட்டத்திற்கான முன்மொழிவு விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறைகள் 2024 எனும் பக்கத்தில் இடப்பட்டுள்ளது. பயனர்கள் தமது கருத்துக்கள் / பரிந்துரைகளை அதே உரையாடல் பக்கத்தில் இடலாம்.

குறிப்பு: கல்வி நிலையத்தைப் பரிந்துரைப்பது, கல்வி நிலையத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு நிகழ்வை நடத்துவது ஆகியவற்றை எப்பயனரும் செய்யலாம் என்பது இத்திட்டத்தின் முக்கியக் கூறாகும்.

பயனர்கள் தமது ஆதரவு அல்லது எதிர்ப்பினை இந்த 'ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)' பகுதியில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:05, 20 மார்ச்சு 2024 (UTC)Reply

  ஆதரவு ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 15:54, 21 மார்ச்சு 2024 (UTC)Reply
  ஆதரவு--சா. அருணாசலம் (பேச்சு) 03:48, 22 மார்ச்சு 2024 (UTC)Reply
  ஆதரவு -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 05:57, 30 மார்ச்சு 2024 (UTC)Reply