விக்கிப்பீடியா:இடைமுகப்புத் தொகுப்பாளர்கள்

இடைமுகப்பு நிர்வாகிகள் (Interface administrators) அணுக்கம் கொண்டவர்களால் பாணித்தாள் (CSS), ஜாவாஸ்கிரிப்ட் (JS), ஜேசன்(JSON) போன்ற எல்லாப் பக்கங்களையும் [1] மற்றும் மீடியாவிக்கி பெயர் வெளிப் பக்கங்களையும் தொகுக்க முடியும். நிர்வாக அணுக்கம் கொண்டவர்களால் மீடியாவிக்கி பெயர்வெளியில் தொகுக்கமுடிந்தாலும் இத்தகைய நுட்பப்பக்கங்களைத் தொகுக்க முடியாது, எனவே இடைமுகப்பு நிர்வாகிகளால் தான் பாணித்தாள் மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் பக்கங்களைத் திருத்த முடியும்.

பொதுவாகப் பார்வையாளரின் உலாவியில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இந்த நுட்பப்பக்கங்களைத் தவறாகக் கையாளுவதால் மிகவும் ஆபத்தானதாக அமையக்கூடும். எனவே நம்பிக்கைக்குரியவருக்கும், இந்நுட்பங்களில் பரிட்சியம் கொண்டவர்களுக்குமே இவ்வணுக்கம் வழங்கப்படுகிறது. மேலும் கூடுதல் பாதுகாப்பிற்கு 2FAயை இயங்கச் செய்திருக்க வேண்டும்.

இடைமுகப்பு நிர்வாக அணுக்கம் பெறுவதற்கான கோரிக்கைகள் தொகு

Neechalkaran கோரிக்கை தொகு

Neechalkaran (தற்போதைய உரிமைகள் · உரிமைகள் மேலாண்மை · உரிமைகள் பதிவு (த.விக்கியில்) · உரிமைகள் பதிவு (அனைத்து/மெடா) · முடுக்கல் பதிவு)

வணக்கம், விக்கிமீடியா திட்டங்களுக்குப் பல நீட்சிகள் உருவாக்கிய அனுபவமும், HTML/JS/CSS அனுபவமும் கொண்டுள்ளதால் இவ்வணுக்கத்தின் மூலம் தேவைப்படும் போது தமிழ் விக்கியின் இடைமுக மேம்பாடுகளைச் செய்ய விரும்புகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவில் இடைமுகப்பைத் தொகுக்கும் அணுக்கம் தற்போதைக்கு நம்மிடமில்லை என்பதால் இவ்வணுக்கத்தைக் கோரி விண்ணப்பிக்கிறேன். மேல் விக்கியின் வழிகாட்டுகள் படி எனது கணக்கிற்கு 2FA பாதுகாப்பையும் செயல்படுத்தியுள்ளேன் -நீச்சல்காரன் (பேச்சு) 14:01, 21 சனவரி 2019 (UTC)[பதிலளி]

ஆதரவு தொகு

  1. உங்கள் சேவை நாட்டுக்குத் தேவை :) --இரவி (பேச்சு) 14:49, 21 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  2.   விருப்பம்-- ஹிபாயத்துல்லா (பேச்சு) 16:28, 21 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நடுநிலை தொகு

எதிர்ப்பு தொகு

கருத்துகள் தொகு

ஒரு வாரம் வாக்கெடுப்புக்குக் காலம் கொடுத்து அதன் பிறகு இந்த அணுக்கத்தைத் தரலாம் என்று கருதுகிறேன். --இரவி (பேச்சு) 14:52, 21 சனவரி 2019 (UTC)[பதிலளி]


முடிவு தொகு

இவ்வணுக்கத்தைப் பெறும் முதல் பயனர் என்பதால் 3 மாத காலத்துக்கு இவ்வணுக்கத்தை வழங்கியுள்ளேன். உங்கள் பணியைக் கவனித்து அடுத்து நிரந்தரமாக அணுக்கம் நீட்டிக்கிறேன். நன்றி --இரவி (பேச்சு) 16:26, 5 ஏப்ரல் 2019 (UTC)

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Sitewide pages, such as MediaWiki:Common.js or MediaWiki:Vector.css, or the gadget pages listed on Special:Gadgets, and other user's subpages