விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம்/மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவு

நோக்கம்: குறைந்தது ஒரு 80 மருத்துவக் கட்டுரைகளை ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்த்தல்.

மருத்துவ, நலவியல் துறையில் மிகவும் முக்கியமானதெனக் கருதும் கட்டுரைகளை ஆங்கிலத்தில் உருவாக்கி, பின்னர் எளிய ஆங்கிலத்திலும் ஏனைய விக்கி மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இத்திட்டத்தில் அங்கு தேர்வு செய்யப்படும் அனைத்துக்கட்டுரைகளையும் தமிழ் மொழிக்கு மாற்றுதல் மூலம் தமிழ் விக்கிப்பீடியா இத்திட்டத்தில் பங்கேற்கின்றது. ஏற்கனவே குறிப்பிட்ட கட்டுரைகள் இருக்கும் பட்சத்தில் அவற்றைச் செம்மைப்படுத்தி தரம் உயர்த்துதலும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

செயன்முறை தொகு

  1. கீழே குறிப்பிடப்பட்டுள்ள கட்டுரைப் பட்டியலில் உள்ள கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பது
  2. ஏற்கனவே கட்டுரைகள் இருக்கும் பட்சத்தில் அவற்றைத் திருத்தி அமைத்து நல்ல கட்டுரையாக்கி சிறப்புக் கட்டுரைத் தரத்துக்கு உயர்த்த உதவுவது.
  3. அவற்றிற்குரிய மேற்கோள்கள், படிமங்கள் போன்றவற்றை இடுவது.
  4. முழுமை பெற்ற கட்டுரைகளின் பெயர்களின் அருகே கீழே உள்ள பட்டியலில்  Y ஆயிற்று {{ஆச்சு}} எனும் வார்ப்புருவை இடல்.
  5. வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கும் கட்டுரைகளின் அருகே எனும் வார்ப்புருவை இடல்.

பணிகள் தொகு

புதிய கட்டுரைகளுக்கு:

  1. சிறந்த அறிமுகப்பகுதியுடன் கட்டுரை ஆரம்பித்தல்
  2. தகவற்சட்டம் இடல்
  3. படிமங்கள் சேர்த்தல்
  4. பகுப்பு இடல்
  5. விக்கியாக்கம்
  6. மேற்கோள்கள் / உசாத்துணைகள்
  7. மேம்படுத்தல்

ஏற்கனவே உள்ள கட்டுரைகளுக்கு:

  1. அறிமுகப்பகுதியை விரிவு படுத்துதல்
  2. தகவற்சட்டம் இடல்
  3. படிமங்கள் சேர்த்தல்
  4. பகுப்பு இடல்
  5. விக்கியாக்கம்
  6. மேற்கோள்கள் / உசாத்துணைகள்
  7. மேம்படுத்தல்

ஆங்கில விக்கியில் இந்தத் திட்டம் தொகு

இணைப்புக்கள் தொகு

தொடர்பான உரையாடல்கள் தொகு

  • இந்தத் திட்டத்தின் உரையாடல் பக்கத்தில் : இங்கே
  • James Heilman இன் பேச்சுப்பக்கம் : இங்கே

தமிழ்மொழிக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் கட்டுரைகள் தொகு

  • இங்கே தமிழில் மொழிபெயர்க்கத் தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகள் உள்ளன.
  • இங்குள்ள கட்டுரைகளை ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் விக்கிப்பீடியர்கள் பார்வையிட்டு, மதிப்பிட்டு அந்தக் கட்டுரை குறிப்பிட்ட மொழிக்கு மொழிபெயர்க்கப்படுவது தேவையா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கலாம் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
  • அப்படித் தீர்மானித்த பின்னர், அங்கேயே "Do translate" அல்லது "Do not translate" எனக் குறிப்பிடலாம்.
  • அவர்கள் கொடுத்திருக்கும் சில கட்டுரைகள் ஏற்கனவே தமிழ்விக்கியில் உள்ளன.
      • சில கூகிள் மொழிபெயர்ப்புத் திட்டத்தால் மொழிபெயர்க்கப்பட்டவை.
      • சில கூகிள் மொழிபெயர்ப்புத் திடத்தால் மொழிபெயர்க்கப்பட்டுப் பின்னர், பயனர்களால் மேம்படுத்தப்பட்டவை
      • சில பயனர்களால் உருவாக்கப்பட்ட விரிவான கட்டுரைகள்
      • சில பயனர்களால் உருவாக்கப்பட்ட சிறிய கட்டுரைகள்
      • சில தமிழ் விக்கியில் இல்லாதவை

தமிழ்விக்கிக்குத் தேவையான கட்டுரைத் தெரிவு தொகு

தமிழ்விக்கிக்குத் தேவையான கட்டுரைகள் எவை என்பதைத் தீர்மானிப்பதற்கு இந்தப் பக்கத்திற்குச் செல்லலாம். இந்தப் பக்கத்திற்குச் சென்று கட்டுரைகளை ஆய்வு செய்து திருத்தங்களை மேற்கொள்ளலாம். தீர்மானிப்பதற்கான வழிகாட்டியாகக் கொள்ள வேண்டியவை (குறிப்பு:இந்த வழிகாட்டலில் திருத்தங்கள் / மாற்றங்கள் தேவைப்படலாம்):

  • கட்டுரையை நமது பயனர்கள் உருவாக்கியிருப்பின், அது விரிவான, தெளிவான கட்டுரையாக இருக்குமாயின், ஆங்கிலத் திட்டப் பக்கத்தில் Do not translate எனப் போட்டு விடலாம்.
  • கட்டுரையை நமது பயனர்கள் உருவாக்கியிருப்பினும், அது குறுங்கட்டுரையாக இருப்பின் Do translate எனப்போட்டுவிட்டு, அவர்கள் மொழிபெயர்த்து முடிந்த பின்னர், அதனை நமது குறுங்கட்டுரையுடன் இணைத்துவிடலாம். குறுங்கட்டுரையாக இருக்கும்போது, நமது பயனர்களின் தகவல்களையும் சேர்ப்பதில் பெரிய பிரச்சனை இருக்காது. வரலாற்றுடன் இணைத்துவிடலாம்.
  • கட்டுரையானது கூகிளால் மொழிபெயர்க்கப்பட்டதாயின், அது எவ்வாறு உள்ளதென்பதை முதலில் பார்க்க வேண்டும். ஏனெனில், கூகிள் மொழிபெயர்ப்புக்குப் பின்னர், சில கட்டுரைகளில் நமது பயனர்களும் திருத்தம் செய்திருக்கின்றார்கள். எனவே அவை நன்றாக இருப்பதற்கான வாய்ப்புக்களும் உண்டு. அவ்வாறு நன்றாக இருக்குமானால், ஆங்கிலத் திட்டப் பக்கத்தில் Do not translate உம், நன்றாக இல்லையெனில் Do translate உம் போடலாம்.
  • கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை, அவர்கள் மொழிபெயர்த்து முடித்த பின்னர், தகவல்கள் மாற்றம் செய்வதில் நேரத்தைச் செலவிடாமல், வரலாற்றுடன் சேர்த்துக் கட்டுரைகளை இணைத்து விடலாம்.
  • கொஞ்சம் யோசித்து முடிவெடுக்க வேண்டிய கட்டுரைகளாயின் தற்போதைக்கு ஆங்கிலத் திட்டப் பக்கத்தில் To evaluate என்ற குறிப்பையும் இடலாம்.

மொழிமாற்றப்பட்ட கட்டுரைகளை த.வி. க்கு நகர்த்தல் தொகு

ஒரு கட்டுரையில் அவர்களது மொழிபெயர்ப்பு வேலை முழுமையாக முடிவடைந்த பின்னரே, அவர்கள் தமது பக்கத்தில் (TWB website) பதிவேற்றுகின்றார்கள். அங்கு உள்நுழைவதற்கான பயனர் பெயர்:Jmh649, கடவுச்சொல்:wikipedia. அதனால், அவர்கள் பதிவேற்றிய பின்னரே நம்மால், அதனை த.வி. க்கு கொண்டு வர முடியும். அவர்களது கட்டுரையை தரவிறக்கி வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நாம் த.வி. யில் பதிவேற்றலாம். பதிவேற்றும்போது, நமது சொந்த பயனர் கணக்கினூடாகவே பதிவேற்றலாம். ஆனால், "Translated by xxx from English Wikipedia as part of the collaboration with Translators Without Borders" என்பதனை சுருக்கம் என்பதில் கொடுத்தால் சரி. ஒரு பகுதி பதிவேற்றிய பின்னர், அதில் நாம் நமது பயனர் கணக்கு மூலமாகவே திருத்தங்களைச் செய்யலாம். அப்போது உள்ளிணைப்புக்களையும் சரியாக்கிக் கொடுக்கலாம்.

பங்குபற்றும் பயனர்கள் தொகு

  1. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 15:45, 25 பெப்ரவரி 2012 (UTC)
  2. --செல்வா 15:56, 25 பெப்ரவரி 2012 (UTC)
  3. --சிவகோசரன் 15:13, 26 பெப்ரவரி 2012 (UTC)
  4. --கலை (பேச்சு) 11:45, 18 சூன் 2012 (UTC)[பதிலளி]
  5. --நந்தகுமார் (பேச்சு) 19:09, 19 சனவரி 2014 (UTC)[பதிலளி]
  6. --குறும்பன் (பேச்சு) 20:01, 19 சனவரி 2014 (UTC)[பதிலளி]
  7. முடிந்தவரை முயற்சிக்கிறேன் :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:56, 21 சனவரி 2014 (UTC)[பதிலளி]
  8. கலைச்சொல் உதவி தேவைப்படின் உதவுங்கள்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:14, 22 சனவரி 2014 (UTC)[பதிலளி]

கட்டுரைகள் தொகு

புற்றுநோய்கள் (Cancer) தொகு

ஆங்கிலப் பெயர் தமிழ்ப் பெயர் திட்டம் பங்கு பற்றிய பயனர்கள்
:en:Cancer புற்றுநோய்
:en:Lung cancer நுரையீரல் புற்றுநோய்
:en:Colorectal cancer
:en:Cervical cancer கருப்பப்பை வாய்ப் புற்றுநோய்
:en:Breast cancer மார்பகப் புற்றுநோய்
:en:Skin cancer தோல் புற்றுநோய் செந்தி
:en:Prostate cancer
:en:Stomach cancer வயிற்றுப் புற்றுநோய்
:en:Liver cancer ஈரல் புற்றுநோய்

தொற்றுநோய்கள் (Infections) தொகு

ஆங்கிலப் பெயர் தமிழ்ப் பெயர் திட்டம் பங்கு பற்றிய பயனர்கள்
:en:Common cold தடிமன்
:en:Streptococcal pharyngitis
:en:Croup
:en:Dengue fever டெங்கு காய்ச்சல்  Y ஆயிற்று செந்தி
:en:Poliomyelitis இளம்பிள்ளை வாதம்
:en:Meningitis மூளைய மென்சவ்வழற்சி
:en:Hepatitis B
:en:Hepatitis C
:en:Influenza இன்ஃபுளுவென்சா
:en:Sepsis
:en:AIDS எய்ட்சு நந்தகுமார்
:en:Tuberculosis காச நோய்
:en:Malaria மலேரியா
:en:Dental caries பற்சொத்தை
:en:Gastroenteritis இரையகக்குடலிய அழற்சி
:en:Sexually transmitted disease பால்வினை நோய்கள்
:en:Pneumonia நுரையீரல் அழற்சி
:en:Urinary tract infection
:en:Diseases of poverty
:en:Fever காய்ச்சல்

பொது நலம் (Public health) தொகு

ஆங்கிலப் பெயர் தமிழ்ப் பெயர் திட்டம் பங்கு பற்றிய பயனர்கள்
:en:Public health பொது நலம்
:en:Sanitation
:en:Health effects of tobacco
:en:Alcoholism குடிப்பழக்கம்
:en:Vaccination தடுப்பு மருந்தேற்றம்
:en:Malnutrition ஊட்டக்குறை
:en:Obesity உடற் பருமன்
:en:Traffic collision சாலை விபத்து

உளநலம் (Mental health) தொகு

ஆங்கிலப் பெயர் தமிழ்ப் பெயர் திட்டம் பங்கு பற்றிய பயனர்கள்
:en:Mental disorder உளப் பிறழ்ச்சி
:en:Schizophrenia
:en:Anxiety disorder
:en:Attention deficit hyperactivity disorder அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு சி.செந்தி
:en:Major depressive disorder
:en:Suicide தற்கொலை

Maternal and child health தொகு

ஆங்கிலப் பெயர் தமிழ்ப் பெயர் திட்டம் பங்கு பற்றிய பயனர்கள்
:en:Pregnancy கருத்தரிப்பு  Y ஆயிற்று கலை
:en:Birth control கருத்தடை  Y ஆயிற்று கலை
:en:Vaccine தடுப்பு மருந்து
:en:In vitro fertilisation வெளிச் சோதனை முறை கருக்கட்டல்  Y ஆயிற்று கலை
:en:Abortion கருக்கலைப்பு  Y ஆயிற்று கலை

இதய நலவியல் (Heart health) தொகு

ஆங்கிலப் பெயர் தமிழ்ப் பெயர் திட்டம் பங்கு பற்றிய பயனர்கள்
:en:Cardiovascular disease
:en:Hypercholesterolemia
:en:Hypertension உயர் இரத்த அழுத்தம்
:en:Myocardial infarction இதயத்திசு இறப்பு  Y ஆயிற்று பெ.கார்த்திகேயன், நந்தகுமார், செந்தி

மூளையும் புலனும் (Brain and senses) தொகு

ஆங்கிலப் பெயர் தமிழ்ப் பெயர் திட்டம் பங்கு பற்றிய பயனர்கள்
:en:Alzheimer's disease ஆல்சைமர் நோய்
:en:Multiple sclerosis தண்டுவட மரப்பு நோய்
:en:Parkinson's disease நடுக்குவாதம்
:en:Stroke பக்கவாதம்
:en:Dementia மறதிநோய்
:en:Epilepsy
:en:Cataract கண் புரை நோய்
:en:Blindness குருட்டுத் தன்மை
:en:Pain வலி

எதிர்ப்பு அமைப்பு மற்றும் நாளமில்லாச் சுரப்பி நோய்கள் தொகு

ஆங்கிலப் பெயர் தமிழ்ப் பெயர் திட்டம் பங்கு பற்றிய பயனர்கள்
:en:Asthma ஈழை நோய்
:en:Allergy ஒவ்வாமை
:en:Anaphylaxis
:en:Chronic obstructive pulmonary disease நெடுங்கால சுவாச அடைப்பு நோய்
:en:Cirrhosis
:en:Diabetes mellitus நீரிழிவு நோய் நந்தகுமார்
:en:Diabetes mellitus type 2 இரண்டாவது வகை நீரிழிவு  Y ஆயிற்று நந்தகுமார்
:en:Gout கீல்வாதம்
:en:Rheumatoid arthritis முடக்கு வாதம் நந்தகுமார்

காயங்கள் (Trauma) தொகு

ஆங்கிலப் பெயர் தமிழ்ப் பெயர் திட்டம் பங்கு பற்றிய பயனர்கள்
:en:Low back pain
:en:Bone fracture எலும்பு முறிவு
:en:Burn எரிகாயம்
:en:Trauma (medicine)
:en:Snakebite பாம்புக் கடி