விக்கிப்பீடியா:விக்கி நற்பழக்கவழக்கங்கள்

தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

ஐந்து தூண்கள்
தமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல
விதிகளை மீறு
கொள்கைகளும் வழிகாட்டல்களும்
பதிப்புரிமை

தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம்

நடுநிலை நோக்கு
மெய்யறிதன்மை
மேற்கோள் சுட்டுதல்
கிரந்த எழுத்துப் பயன்பாடு
கேள்விக்குட்படுத்தல்
புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்
படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்
வெளி இணைப்புகள்
வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு
தன்வரலாறு
கைப்பாவை
தானியங்கித் தமிழாக்கம்
தரவுத்தள கட்டுரைகள்
கட்டுரை ஒன்றிணைப்பு
தணிக்கை

தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்

கண்ணியம்
இணக்க முடிவு
பாதுகாப்புக் கொள்கை
ஒழுங்குப் பிறழ்வுகள்
விக்கி நற்பழக்கவழக்கங்கள்
தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
விசமிகளை எதிர்கொள்வது எப்படி?


விக்கிப்பீடியா நற்பண்புகள் (Wikipedia: Etiquette) என்பது விக்கிப்பீடியா என்னும் உலகளாவிய, கட்டற்ற கலைக்களஞ்சியத்தின் உருவாக்கத்தில் பங்கேற்போர் ஒருவர் மற்றவர் மட்டில் கண்ணியத்தோடும் சான்றாண்மையோடும் உறவாடவும் ஒத்துழைக்கவும் தேவையான தத்துவங்களின் தொகுப்பு ஆகும்.

உலகளாவிய முயற்சி தொகு

விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கேற்போர்/பங்களிப்போர் பல நாடுகளையும் பண்பாட்டுப் பின்னணிகளையும் சார்ந்தவர்கள். பார்வை, நோக்கு, கருத்து, பின்புலம் என்று கருதும்போது அவர்களுக்குள்ளே பல வேறுபாடுகள் இருப்பது இயல்பு. பன்னாட்டுப் பண்புடைய இணையத்தளக் கலைக்களஞ்சியமாகிய விக்கிப்பீடியாவைக் கட்டியெழுப்பும் பணியில் ஒருவர் மற்றவரை மதிப்போடும் கண்ணியத்தோடும் நடத்துவது ஆக்கப்பூர்வமான, ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கு அச்சாணி போன்றதாகும்.

விக்கிப்பீடியா நற்பண்புகளின் தொகுப்பு தொகு

  • பிறர் நல்லெண்ணத்தோடு செயல்படுகின்றனர் என்று அவதானித்தல் தேவை. விக்கிப்பீடியா நற்பண்புகளைக் கடைப்பிடித்தல் இன்றியமையாதது. தொகுப்பதற்கு ஏறக்குறைய முழு சுதந்திரம் அங்கு உள்ளதால்தான் விக்கிப்பீடியா இதுநாள் வரை சிறப்பாக இருந்துவருகிறது. ஒத்துழைக்கவும் நல்ல கட்டுரைகளை உருவாக்கித் தரவுமே பயனர்கள் விக்கிக்கு வருகின்றனர்.
  • பொன்விதியை நினைவில் கொள்ளல் வேண்டும். அதாவது, "பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ (அவர்கள் புதியவர்களாக இருந்தாலும் சரி), அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்". விக்கிக்கு வந்த எல்லாப் பயனர்களுமே ஒரு காலத்தில் புதியவர்களாகத்தான் இருந்தார்கள் என்பதே உண்மை.
  • கண்ணியமாக நடத்தல் வேண்டும்: "கனிவான மறுமொழி கடுஞ்சினத்தையும் ஆற்றிவிடும்".
  • சொல் ஒன்றாக இருக்கலாம்; புரிதல் வேறொன்றாக இருக்கலாம்: விக்கியில் எழுத்தில் வடிக்கப்படுகின்ற சொற்களும் சொற்றொடர்களும் சில வேளைகளில் பொருள் தெளிவின்றி இருக்கக்கூடும்; கடுமையாகத் தோன்றக்கூடும்; நகைச்சுவையாகக் கூறப்பட்டது கேலியாகத் தோன்றக்கூடும். ஒருவரோடு நேருக்கு நேர் நின்று உரையாடுவதற்கும், விக்கியில் எழுத்தின்வழி உரையாடுவதற்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. நேருக்கு நேர் நின்று உரையாடுவோர் கூறுவதைப் புரிந்துகொள்ள சொல் மட்டுமன்றி, "உடல்மொழியும்" துணைவருகிறது. முக பாவனைகள், குரல் ஏற்ற இறக்கங்கள், கூறும் முறை, சொல் அழுத்தம் பெறல் போன்ற பல அடையாளங்கள் இருப்பதால் அத்தகைய புரிதல் எளிதாகிறது. எனவே, எழுதுபவர் எழுத்தைக் கையாளுவதில் கவனமாக இருக்கவேண்டும் ; எழுத்தை வாசிப்பவர் வாசிப்பதை விளங்கிக்கொள்வதில் கவனமாக இருக்கவேண்டும்.
  • வழக்கமாக பேச்சுப் பகுதியில் கருத்துத் தெரிவிக்கும்போது நேரமும் கையொப்பமும் இடுவதே முறை.
  • இணைவும் இசைவும் உருவாகிட உழைத்தல் வேண்டும்.
  • விவாதம் எழும்போது ஆட்களை விவாதிக்காமல் கூறப்பட்டதின் நிகழ்வுண்மை/நிகழ்வின்மை பற்றியே விவாதித்தல் வேண்டும்.
  • தவறான விளக்கம்.அளிக்கவேண்டாம்.
  • கேள்விகள் எழுப்பப்பட்டால் அவற்றைக் கண்டுகொள்ளாமல் போகவேண்டாம்.
  • ஒருவரின் பதிவோடு மற்றொருவருக்கு உடன்பாடு இல்லை என்றால், இடப்பட்ட பதிவு ஏற்புடையதே என்று நிறுவிட தகுந்த ஆதாரங்கள் அளித்தல் வேண்டும்.
  • எழுப்பப்பட்ட ஒரு சிக்கலுக்குத் தகுந்த பதில் கொடுக்க முடியாத நிலை எழுந்தால், அப்போது அச்சிக்கலை எழுப்பியவரை எதிர்த்துநிற்பதைக் கைவிடுக. அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அடிப்படையில் வேறுபாடு எழுந்ததை ஒத்துக்கொள்க.
  • கண்ணியமாக நடந்துகொள்க.

பதிப்புரிமைகளை மதியுங்கள் தொகு

  • பதிப்புரிமை பெற்ற ஆக்கங்கள், படிமங்கள், கோப்புகளை சம்பந்தப்பட்டவர்களின் முறையான அனுமதியின்றி விக்கிபீடியாவில் பதிவேற்றாதீர்கள்.

பேச்சுப்பக்கங்களில் தொகு

  • இங்கு இலக்கண சுத்தமாக உரையாடத் தேவையில்லை என்றாலும், கண்ணியமாகவும் கனிவாகவும் உரையாடுவது அவசியம்.
  • உங்கள் பதிப்புகளில் கையெழுத்திடுங்கள்.

பயனர் நல்லுறவு தொகு

  • எந்த ஒரு பக்கத்திலோ பயனர் செயல்பாட்டிலோ பிழை கண்டால், அது எளிதில் உங்களால் திருத்தி அமைக்கக் கூடியதாய் இருந்தால், நீங்களே அதை முதலில் திருத்தி விடுங்கள். அதை திருத்துமாறு ஒரு குறிப்பை பதிப்பதை விட இது பயனுள்ளதும் பிற பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதுமாகும். இப்பிழை ஓரிரு முறை மட்டுமே ஒரு பயனரால் கவனக் குறைவாகச் செய்திருப்பின் அதை சுட்டிக் காட்டத் தேவையில்லை. பலரும் இப்பிழையை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தால் தகுந்த உரையாடல் பக்கங்களில் தெரியப்படுத்துங்கள். ஒரே பயனர் அதே பிழையை பல முறை அறியாமல் செய்து வந்தால், அவரது பேச்சுப்பக்கத்தில் ஆலோசனை வழங்குங்கள். புதுப்பயனர்கள் வெற்று விமர்சனங்களை முன்வைப்பது புரிந்து கொள்ளத்தக்கது என்றாலும், அனுபவம் வாய்ந்த பயனர்கள் பிறரது குறைகளை மட்டும் சுட்டிக்காட்டுவது உவப்பாக இருக்காது. குறைகளை மட்டும் கூறாமல், அக்குறைகளைக் களையச் சிறிதேனும் முயற்சி எடுப்பது விக்கிபீடியா என்னும் கூட்டு முயற்சிக்குப் பயனுள்ளதாகவும் பயனர்களுக்கு இடையே நல்லுறவை வளர்க்கவும் உதவும். எடுத்துக்காட்டு, ஒரு புதுப்பயனர் விக்கி நடைக்கு ஒவ்வாத வகையில் எழுதுவதாகத் தோன்றினால், அவருடைய சில கட்டுரைகளை முதலில் விக்கியாக்கம் செய்யுங்கள். இது நற்பங்களிப்பாகவும் அப்பயனருக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருக்கும். பிறகு, அவருடைய பேச்சுப் பக்கத்தில் கருத்து தெரிவித்தால், தன் பங்களிப்பை எப்படி சிறப்பாக செய்யலாம் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியும்.