விசாகம் திருநாள் இராம வர்மன்

திருவாங்கூர் மகாராசா

விசாகம் திருநாள் இராம வர்மன் (Visakham Thirunal Rama Varma) (1837 மே 19 -1885 ஆகத்து 4) என்பவர் கி.பி 1880–1885 முதல் இந்திய இராச்சியமான திருவிதாங்கூரை ஆண்டுவந்த மகாராஜா ஆவார். இவர் தனது மூத்த சகோதரர் மகாராஜா ஆயில்யம் திருநாள் இராமவர்மனுக்குப் பின் திருவிதாங்கூர் அரியணைக்கு வந்தார். [1] இவர் மகாராணி கௌரி லட்சுமி பாயிக்கு பேரனும், மகாராஜா சுவாதித் திருநாள் ராம வர்மனின் மருமகனும் ஆவார்.

விசாகம் திருநாள் இராம வர்மன்
திருவிதங்கூரின் மகாராஜா
1868இல் மகாராஜா
ஆட்சி1880 மே 30 – 1885 ஆகத்து 4
முன்னிருந்தவர்ஆயில்யம் திருநாள் இராமவர்மன்
பின்வந்தவர்மூலம் திருநாள்
துணைவியார்அருமனை அம்மாச்சி பனபிள்ளை அம்மா இலட்சுமி பிள்ளை கோச்சம்மா
வாரிசு(கள்)நாராயணன் தம்பி

பாகீரதி பிள்ளை

பகவதி பிள்ளை
மரபுவேணாடு சொரூபம்
அரச குலம்குலசேகர வம்சம்
தந்தைபூராடம் திருநாள் இராம வர்மா கோயி தம்புரான்
தாய்கௌரி ருக்மிணி பாய்
பிறப்பு1837 மே 19
இறப்பு1885 ஆகத்து 4 (வயது 48)
சமயம்இந்து சமயம்
மகாராஜா தனது திவானுடன்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

விசாகம் திருநாள் இராம வர்மன் இராணி கெளரி ருக்மிணி பாய், அவரது கணவர் பூராடம் திருநாள் இராம வர்மா கோயி ஆகியோருக்கு திருவல்லாவின் தம்புரான் அரச குடும்பத்தில் 1837 மே 19 அன்று பிறந்தார். இவரது சிறு வயதிலேயே இவரது தாயார் இறந்தார்.

ஒரு இளவரசனாக இவர் அரசக் குடும்ப உறுப்பினர்களுக்கு அத்தியாவசியமான வடமொழி|சமசுகிருதம் மலையாளம் ஆகியவற்றில் அடிப்படை பயிற்சியை கற்றார். தனது ஒன்பது வயதில் டி. சுப்பாராவின் கீழ் தனது ஆங்கிலக் கல்வியைத் தொடங்கினார். பின்னர் சுப்பாராவ் திருவிதாங்கூரின் திவான் ஆனார். இளவரசர் ஆங்கில கட்டுரைகளில் மிகுந்த ஆர்வம் காட்டினார். மேலும் இவரது முதல் படைப்பான ஹாரர்ஸ் ஆஃப் வார், பெனிபிட்ஸ் ஆப் பீஸ் என்பதை வெளியிட்டார். இவரது சில பாடல்கள் "மெட்ராஸ் அதீனியம்" என்பதில் வெளியிடப்பட்டன. இவர் தி ஸ்டேட்ஸ்மேன், கொல்கத்தா ரிவியூ ஆகியவற்றிலும் எழுதினார்.

 
விசாகம் திருநாள் தனது சகோதரர் ஆயில்யம் திருநாள் மற்றும் திவான் சர் டி மாதவ ராவ்

1861 ஆம் ஆண்டில் விசாகம் திருநாள் சென்னைக்குச் சென்று ஆளுநர் சர் வில்லியம் டெனிசனைச் சந்தித்தார். பின்னர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் சக உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவருக்கு இந்தியத் தலைமை ஆளுநரின் சட்டமன்றக் குழுவில் ஒரு இடமும் வழங்கப்பட்டது. இருப்பினும், தனது உடல்நலக்குறைவு காரணமாக அதை மறுத்துவிட்டார். தாவரவியல், வேளாண்மை ஆகியவற்றில் இவருக்கு ஒரு ஆர்வம் இருந்தது.

அணுகல் தொகு

 
பக்கிங்ஹாம் பிரபு ரிச்சர்ட் டெம்பிள் கிரென்வில்லி, சாண்டோஸ் வரவேற்கும் ஒரு ஓவியம். உடன் ஆயில்யம் திருநாள். ரவி வர்மாவின் ஓவியம்

மகாராஜாவின் மூத்த சகோதரர் ஆயில்யம் திருநாள், திருவிதாங்கூரை 1860 முதல் 1880 வரை இருபது ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர் இறந்தார். மருமக்கதாயம் சட்டத்தின்படி, இளவரசர் விசாகம் திருநாள் இராம வர்மன் 1880 இல் திருவிதாங்கூர் சிம்மாசனத்தில் அமர்ந்தார். கல்வி முறை, காவல் துறை, நீதி, `நீதித்துறை போன்ற மாற்றங்கள் உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை அவர் அறிமுகப்படுத்தினார். இவர் மரவள்ளிக்கிழங்கு சாகுபடியை ஊக்குவித்தார்.

குடும்பமும் மறைவும் தொகு

விசாகம் திருநாள் 1885 ஆகஸ்ட் 4 ஆம் தேதி தனது 48 வயதில் இறந்தார். 1859 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அருமனை அம்மாவீட்டைச் சேர்ந்த அம்மாச்சி பனபிள்ளை அம்மா இலட்சுமி பிள்ளை கொச்சம்மா (1865 முதல் திருவனந்தபுரத்தில் உள்ள இங்கிலாந்து ஜெனானா தேவாலயப் பள்ளியில் ஆங்கிலம் படித்தவர். மேலும் திருவனந்தபுரத்தின் அரச குடும்பம், பிரபுக்களுக்குள், ஆங்கிலக் கல்வியைத் தொடங்கிய முதல் பெண்மணி ஆவார்) என்பவரை மணந்தார். இந்த திருமணத்திலிருந்து இவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. 1865 இல் பிறந்த இவரது மூத்த மகன் நாராயணன் தம்பி (திருவனந்தபுரம் - நாகர்கோயில் பாதை) முதல் பேருந்து சேவையைத் தொடங்கியவராவார்.

இவர் அரச வம்சாவளியைச் சேர்ந்த இரவிவர்மன் தம்பியின் மகளையும் மணந்தார். 1873 ஆம் ஆண்டில் இவரது மனைவிக்கு பகவதி பிள்ளை கோச்சம்மா என்பவர் பிறந்தார். இவர் மாவேலிக்கரா அரச குடும்பத்தைச் சேர்ந்த இராஜராஜ வர்மனை மணந்தார். இவர்களின் அடுத்த மகள் கேரள வர்மா திருமுல்பாட்டை மணந்த இருக்மிணி பிள்ளை கொச்சம்மா 1876 இல் பிறந்தார். மகாராஜாவின் இளைய மகள் பாகீரதி பிள்ளை கொச்சம்மா 1877 இல் பிறந்தார். இவர் பூஞ்சார் அரச குடும்பத்தைச் சேர்ந்த இராம வர்மாவை மணந்தார். மகாராஜாவின் மகள்களின் தாலி கெட்டு கல்யாணம் 1883 மே 18 அன்று திருவிதாங்கூர் நீதிமன்றத்தில் பிரெஞ்சு தூதரால் பதிவு செய்யப்பட்டபடி, மேற்கூறிய கணவர்களுடன் ஒரு பிரமாண்டமான பொது விழாவில் நடத்தப்பட்டது.

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. Aiya, V. Nagam (1906) (in en). Travancore State Manual: With Foreword By Ved From Victoria Institutions. Victoria Institutions. பக். 546-569. https://books.google.com/books?id=AVd1AQAAQBAJ&pg=PA546. பார்த்த நாள்: 2 September 2016. 

மேலும் படிக்க தொகு

  • Travancore State Manual Volume I by V. Nagam Aiya
  • Travancore State Manual by Velu Pillai
  • Visakhavijaya, a Study by Poovattoor Ramakrishna Pillai