வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவு

வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவு மூளையின் ஒவ்வொரு பகுதியும் உடலின் எந்தெந்த செயல்பாடுகளை மேற்கொள்ளுகிறது என்பதை குருதி ஒட்டத்தின் மூலம் கண்காணிக்க உதவும் காந்த ஒத்ததிர்வு வரைவுக் கருவி ஆகும். இந்தக் கருவி 1990 களிலேயே விருத்தி செய்யப்பட்டது.

இந்தக் கருவியைப் பயன்படுத்தி மனிதர்கள் தமது மூளையால் பார்த்ததை மீள்வரைவு செய்ய முடியும் என்பதை 2011 இல் பேர்க்லி பல்கலைக்கழகம் நிரூபித்துள்ளது.