வின்செஞ்சோ கலிலீ

இக்கட்டுரை கலிலியோ கலிலீயின் த்தையாரைப் பற்றியதாகும். கலிலியோவின் மகனைப் பற்றி அறிய, காண்க வின்செஞ்சோ காம்பா.

வின்செஞ்சோ கலிலீ (Vincenzo Galilei) (1520 - 2 ஜூலை 1591) ஓர் இத்தாலிய யாழ் வல்லுனரும் பாடலாசிரியரும் இசைக் கோட்பாட்டாளரும் ஆவார். இவர் புகழ்மிகு அறிவியலாளரான கலிலியோ கலிலீயின் தந்தையார் ஆவார் of the lute virtuoso and composer Michelagnolo Galilei. இவர் பிந்தைய மறுமலர்ச்சிக் கால இசை வாழ்க்கையில் முதன்மையான ஆளுமையாவார். இவர் இசையில் பெரும்புரட்சி செய்தவர். பரோக் இசையூழியை தொடங்கி வைத்தவர்.

Della musica antica et della moderna, 1581

வின்செஞ்சோ உரப்பு, நாண் இழுப்பு உறவில் நேரிலா சமன்பாட்டை இசை வரலாற்ரிலேயே முதன்முதலாக விவரித்து விளக்கியவர் ஆவார்.[1] இது பித்தகோரிய மரபின் விரிவாக்கம் ஆகும். மேலும் அம்மரபைக் கடந்து முன்னேறியதுமாகும். இவர் தன் மகனைத் தனி நுண்ணிலைக் கணிதமுரையில் இருந்துச் செய்முறைத் தடத்தை நோக்கிச் செல்லவும் அதன் முடிவுகளைக் கணிதவியல் விவரிப்பால் விளக்கவும் வழிப்படுத்தியவராக பல அறிஞர்கள் கருதுகின்றனர். இது குறிப்பாக இயற்பியலிலும் பொதுவாக இயற்கை அறிவியலிலும் ஏற்பட்ட புதிய திருப்பம் ஆகும்.

வாழ்க்கை தொகு

இவர் தசுக்கனியில் உள்ள சாந்தா மரியா அமாந்தேயில் 1520 இல் பிறந்தார்.[2] இவர் இளமை முதலே யாழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். 1562ஆம் ஆண்டுக்கு முன் இவர் பிசா நகருக்கு இடம்பெயர்ந்துள்ளார். அங்கு ஒரு கனவான் (பிரபுக்) குடும்பத்தில் திருமணம் செய்துள்ளார். 1564 இல் எழுவரில் அல்லது அறுவரில் ஒருவராக கலிலியோ பிறந்துள்ளார் ; இவரது அடுத்த மகனாக 1575 இல் மைக்கிளனோலோ கலிலீ பிறந்துள்ளார்.[3]இவரும் சிறந்த யாழிசை வல்லுனரும் பாடலாசிரியரும் ஆவார்.

குறிப்புகள் தொகு

  1. Cohen, H. F. (1984). Quantifying Music: The Science of Music at. Springer. பக். 78–84. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-277-1637-4. https://archive.org/details/quantifyingmusic0000cohe. 
  2. brunelleschi.imss.fi.it website [Retrieved 2011-12-02] copyrighted to museogalileo.it(Museo Galileo)
  3. Fabris, D. © Copyright 1988 - 2011 - Astronomical Society of the Pacific aspbooks.org website article citing Vincenzo Viviani [Retrieved 2011-12-02] originally located at adsabs.harvard.edu website

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

Books by Vincenzo Galilei
"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்செஞ்சோ_கலிலீ&oldid=3849748" இலிருந்து மீள்விக்கப்பட்டது