வில்லியம் எர்பெர்ட் கிரீவ்சு

பேரா. வில்லியம் மிச்செல் எர்பெர்ட் கிரீவ்சு (William Michael Herbert Greaves) அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினரும்[1] அரசு பொறியியல் ஆய்வுறுப்பினரும்[2] (10 செப்டம்பர் 1897 – 24 திசம்பர் 1955) பிரித்தானிய வானியலாளரும் ஆவார்.[3][4] இவர் விண்மீன்களின் கதிர்நிரல் ஒளிப்படவியல் பணிக்காக மிகவும் பெய்ர்பெற்றவர்.

வில்லியம் எர்பெர்ட் கிரீவ்சு
William Herbert Greaves
பிறப்பு(1897-09-10)10 செப்டம்பர் 1897
இறப்பு24 திசம்பர் 1955(1955-12-24) (அகவை 58)
துறைவானியல்
பணியிடங்கள்கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்எடின்பர்கு பல்கலைக்கழகம்
விருதுகள்அரசு கழக ஆய்வுறுப்பினர்[1]
அரசு பொறியியல் ஆய்வுறுப்பினர்[2] (2013)
துணைவர்கரோலின் கிரேசு கிட்டோ[சான்று தேவை]
பிள்ளைகள்ஜார்ஜ் இரிச்சர்டு எர்பெர்ட் கிரீவ்சு[சான்று தேவை]

வாழ்க்கை தொகு

இவர் மேற்கிந்திய பர்போதாசு தீவில் பிறந்தார். இவரது தந்தையர் எடின்பர்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பயிற்சிபெற்ற மருத்துவர் ஈ. சி. கிரீவ்சு ஆவார். இவர் பர்போதாசில் இருந்த இலாட்ஜ் பள்ளியிலும் கோடுரிங்டன் கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின்னர் புனித ஜான் கல்லூரியில் பயில, இங்கிலாந்து சென்றார். இங்கே இவர் 1919 இல் முதுகலை பட்டம் பெற்றார்; 1920 இல் அங்கே ஆய்வுறுப்பினரும் ஆனார்.

வாழ்க்கைப்பணி தொகு

இவர் 1921 இல் அரசு வானியல் கழகத்து அய்வுறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் 1924 இலிருந்து 1938 வரை கிரீன்விச் அரசு வான்காணக முதன்மை உதவியாளாக இருந்தார்.[3] இவர் 1938 இல் இசுகாட்லாந்து அரசு வனியலாளரானார்; இவர்1939 இல் எடின்பர்கு அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது முன்மொழிவாளர்களாக ஜேம்சு பிக்கரிங் கெண்டால், மாக்சு போர்ன், எடுமண்டு தய் மாந்து, உரூரில் விரிகுலி, எடுவின் ஆர்த்தர் பேக்கர், சர் எடுமாண்டு டெய்லர் விட்டேக்கர் ஆகியோர் அமைந்தனர். இவர் 1940 இலிருந்து 1945 வரை இக்கழகச் செயலாளராகவும் பின்னர், 1946 இலிருந்து 1949 வரை அதன் துணைத்தலைவராகவும் விளங்கினர்.[5]

இவர் 1955 வரை அரசு வானியலாளராகவும் எடிபர்கு பல்கலைக்கழகத்தின் வானியல் தகைமைப் பேராசிரியராகவும் இருந்தார். இவர் 1943 இல் அரசு கழக ஆய்வுறுப்பினராகதேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] பின்னர், 1947 இலிருந்து 1949 வரை அரசு வானியல் கழகத் தலைவராக இருந்துள்ளார்.[3]

இவர் 1955 திசம்பர் 24 இல் எடின்பர்கு பிளாக்போர்டு மவ்ட்டத்தில் இறந்தார்.

குடும்பம் தொகு

இவர் 1926 இல் கரோலின் கிரேசு கிட்டோவை மண்ந்தார். இவர்களுக்கு ஜார்ஜ் இரிச்சர்டு எர்பெர்ட் கிரீவ்சு(1941-2008) என ஒரு மகன் உண்டு. இவர் கார்டிப் பல்கலைக்கழகத்தின் கணிதவியல் உயர்விரிவுரையாளரானார்.

தகைமைகளும் விருதுகளும் தொகு

  • வானியலுக்கான தய்சன் தங்கப் பதக்கம்.
  • சுமித் பரிசு, 1921.
  • கிரீவ்சு நிலாக் குழிப்பள்ளம் இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Roderick Oliver Redman (1956). "William Michael Herbert Greaves. 1897-1955". Biographical Memoirs of Fellows of the Royal Society 2: 128–138. doi:10.1098/rsbm.1956.0009. 
  2. 2.0 2.1 "List of Fellows". Archived from the original on 2016-06-08. பார்க்கப்பட்ட நாள் 2022-08-12.
  3. 3.0 3.1 3.2 John Jackson (astronomer) (1956). "William Michael Herbert Greaves". Monthly Notices of the Royal Astronomical Society (Royal Astronomical Society) 116 (2): 145–151. doi:10.1093/mnras/116.2.145. Bibcode: 1956MNRAS.116..145.. http://articles.adsabs.harvard.edu/full/1956MNRAS.116..145..  Obituary notice.
  4. "Obituary: W. M. H. Greaves". Journal of the British Astronomical Association (British Astronomical Association) 66 (5): 172–174. 1956. Bibcode: 1956JBAA...66..172.. http://articles.adsabs.harvard.edu/full/1956JBAA...66..172.. 
  5. Biographical Index of Former Fellows of the Royal Society of Edinburgh 1783–2002. The Royal Society of Edinburgh. July 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-902-198-84-X இம் மூலத்தில் இருந்து 2013-01-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130124115814/http://www.royalsoced.org.uk/cms/files/fellows/biographical_index/fells_indexp1.pdf. பார்த்த நாள்: 2022-08-12.