வில்லியம் நோர்டவுசு

வில்லியம் நோர்டவுசு (William Dawbney Nordhaus, பிறப்பு: மே 31, 1941) ஒரு அமெரிக்கப் பொருளியலாளர். இவர் யேல் பல்கலைகழகத்தின் பொருளாதாரத்தின் ஸ்டெர்லிங் பேராசிரியர் என்ற சிறப்புப் பதவியை பெற்றுள்ளார். .இவர் பொருளியல் மாதிரி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற கோட்பாடுகளின் பங்களிப்பிற்காக அறியப்படுகிறார். இவர் 2018 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை[3] போல் ரோமர் உடன் இணைந்து பெற்றார். நீண்டகாலப் பொருளாதாரத்தின் விளைவுகளை காலநிலை மாற்றம் கொண்டு பகுப்பாய்வு செய்யும் வழிமுறைகளை ஒருங்கிணைத்தற்காக[4] இவர்களுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது.

வில்லியம் நோர்டவுசு
வில்லியம் நோர்டவுசு (2018)
பிறப்புவில்லியம் நோர்டவுசு
மே 31, 1941 (1941-05-31) (அகவை 82)[1]
ஆல்புகெர்க்கி, நியூ மெக்சிகோ, அமெரிக்கா
துறைசூழற் பொருளியல்
பணியிடங்கள்யேல் பல்கலைக்கழகம்
கல்வியேல் பல்கலைக்கழகம் (இளங்கலை, முதுகலை)
அரசியல் கற்கைகளுக்கான பாரிசு கல்விக்கழகம்
மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் (முனைவர்)
ஆய்வு நெறியாளர்இராபர்ட்டு சோலோவ்[2]
விருதுகள்பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2018)

மேற்கோள்கள் தொகு

  1. "Biographical Directory of the Council of Economic Advisers - Council of Economic Advisers (U.S.) - Google Books". Books.google.ca. 2007-03-13. பார்க்கப்பட்ட நாள் 2018-10-11.
  2. "PDS SSO". library.mit.edu.
  3. Appelbaum, Binyamin (October 8, 2018). "2018 Nobel in Economics Awarded to William Nordhaus and Paul Romer". The New York Times. https://www.nytimes.com/2018/10/08/business/economic-science-nobel-prize.html. 
  4. Royal Swedish Academy of Sciences(October 8, 2018). "The Prize in Economic Sciences 2018". செய்திக் குறிப்பு.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_நோர்டவுசு&oldid=3578788" இலிருந்து மீள்விக்கப்பட்டது