விளவங்கோடு வட்டம்

விளவங்கோடு வட்டம் , தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக விளவங்கோடு உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 28 வருவாய் கிராமங்கள் உள்ளன. [1]

இவ்வட்டத்தில் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

இவ்வட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்தொகை 5,90,567 ஆகும். சராசரி எழுத்தறிவு 90.32% ஆகவும்; பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1,024 பெண்கள் வீதமும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 11,958 மற்றும் 2,970 ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விளவங்கோடு_வட்டம்&oldid=2957329" இலிருந்து மீள்விக்கப்பட்டது