வீட்டோட மாப்பிள்ளை

வி. சேகர் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வீட்டோட மாப்பிள்ளை என்பது 2001 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்.

வீட்டோட மாப்பிள்ளை
இயக்கம்வி. சேகர்
தயாரிப்புஎஸ்.எஸ்.துரை ராஜு
கே.பார்த்திபன்
கதைவி.சேகர்
இசைதேவா
நடிப்புநெப்போலியன்
விஜயகுமார்
ரோஜா
கோவை சரளா
சார்லி
கல்பனா
தலைவாசல் விஜய்
சோனியா
வையாபுரி
ஒளிப்பதிவுபி. எஸ். செல்வம்
படத்தொகுப்புஏ. பி. மணிவண்ணன்
விநியோகம்திருவள்ளுவர் கலைக்கூடம்
வெளியீடுசெப்டம்பர் 14, 2001
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வகை தொகு

குடும்பப்படம்

கதை தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ஓட்டல் நடத்தும் ஒரு பெரியவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். மகன் இளவயதில் கோபித்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறுகிறான். முதல் இரண்டு மகள்களுக்கும் மணமுடித்த மாப்பிள்ளைகள் வேலைக்குச் செல்லாமல் மாமனார் உழைப்பில் வாழ்கின்றனர். தனது ஓட்டலில் நாணயமாக இருக்கும் வாலிபனை மூன்றாவது மகளுக்கு மணமுடித்துக் கொடுக்கிறார். மருமகனாக வந்தவர் வீட்டோடு மாப்பிளையாய் இருந்து ஓட்டல் பொறுப்பை ஏற்று நடத்துகிறார். நல்ல வருவாயும் ஈட்டி தருகிறார். இந்நேரம் திரும்பி வரும் மகன் , பிரச்சனைகளைக் கொண்டுவர குடும்பம் சிதைகிறது.தனது தவற்றை உணர்ந்து பெரியவரின் பெற்ற மகனும் திருந்தி, மகனாய் வந்த மாப்பிள்ளை மீண்டும் குடும்பத்துடன் இணைவதைச் சொல்லும் திரைச்சித்திரம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீட்டோட_மாப்பிள்ளை&oldid=3710129" இலிருந்து மீள்விக்கப்பட்டது