வீராப்பு

பத்ரி இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வீராப்பு (Veerappu) என்பது 2007 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி நாடகத் திரைப்படமாகும், இப்படத்தை பத்ரி இயக்கினார். இது 1995 ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான பரதனின் ஸ்படிகம் என்ற படத்தின் மறு ஆக்கம் ஆகும். இந்த படமானது சுந்தர் சி. கதாநாயகனாக நடித்த இரண்டாவது படமாகும். இவருடன், கோபிகா, பிரகாஷ் ராஜ், விவேக், சந்தனம் ஆகியோர் நடித்தனர். டி. இமான் இசையமைத்தார். படத் தொகுப்பை மு. காசி விஸ்வநாதன் மேற்கொண்டார். இந்தப் படம் வணிகரீதியான வெற்றியை ஈட்டியது.

வீராப்பு
இயக்கம்பத்ரி
தயாரிப்புகிருஷ்ணமூர்த்தி விஜயகுமார்
சுஜாதா விஜயகுமார்
கதைபத்ரி
இசைடி. இமான்
நடிப்புசுந்தர் சி.
கோபிகா (நடிகை)
பிரகாஷ் ராஜ்
விவேக்
சந்தானம்
ஒளிப்பதிவுகே. எஸ். செல்வராஜ்
படத்தொகுப்புமு. காசிவிசுவநாதன்
கலையகம்ஹோம் இந்தியா [பி].லிமிடட்
விநியோகம்அவினி சினிமேக்ஸ்
வெளியீடு27 சூலை 2007
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான ஒரு தன்முனைப்பு மோதலைச் சுற்றியே கதை சுழல்கிறது. புலிப்பாண்டி ( சுந்தர் சி. ) ஒரு உள்ளூர் ரவுடியும், கணித ஆசிரியர் வேதக்கண்ணுவின் ( பிரகாஷ் ராஜ் ) மகன் ஆவான். வேதக்கண்ணு புலிப்பாண்டியை ரவுடி என்பதற்காகவும் கணிதத்தில் தேர்ச்சி பெறாததற்காகவும் வெறுக்கிறார். கதையின் பின்னோக்கிய பயணத்தின் ஒரு பகுதியாக, சிறுவயது புலிப்பாண்டி இயற்பியலில் மிகவும் சிறந்தவன் என்று காட்டப்பட்டுகிறது. ஆனால் அவனது தந்தை, கணித ஆசிரியராக இருப்பதால், அவன் கணிதத்தில் சிறந்து விளங்க வேண்டும் விரும்புகிறார், அது அவனால் முடியவில்லை. தொடர்ச்சியான உடல் மற்றும் மன இம்சைகளினின் விளைவாக, புலிப்பாண்டி வளர வளர தவறான பாதையில் செல்கிறான். இதற்கிடையில், போட்டி கும்பல்களும் போலீசாரும் அவனைக் கொல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால் அவன் தற்செயலாக அவனது ஒன்றிவிட்ட தங்கையும், தனது தந்தைக்கு முறைதவறி பிறந்த ஒரு பெண்ணால் காப்பாற்றப்படுகிறான். புலி தனது ஒன்றுவிட்ட சகோதரியின் எதிர்பாராத உதவிக்கு ஈடாக உதவுகிறான். மேலும் அவரளது பாதுகாப்பிற்காக உறுதி அளிக்கிறான். போட்டி கும்பல்கள் அவளைக் கொன்று, அவனது தந்தையின் மீது அந்தப் பழியைப் போடுகின்றன. புலி எப்படி உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து தனது குடும்பத்தினருடன் ஒன்று சேர்கிறான் என்பது திரைப்படத்தின் எஞ்சிய பகுதியாக உள்ளது.

நடிகர்கள் தொகு

இசை தொகு

இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்தார்.[1]அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கே. எஸ். செல்வராஜ். 

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "புளிய கிளி ஜெயிச்சா"  ஹரிஷ் ராகவேந்திரா, மதுஸ்ரீ 04:54
2. "ரவுண்டுகட்ட அடி"  பார்கவி 04:37
3. "போனா வருவீரோ"  ஜனனி மதன்பாப் 05:39
4. "Mathematical Expression (கணக்கு)"  மாணிக்க விநாயகம் 04:06
5. "போனா வருவீரோ - மறுகலவை"  டி. இமான், ஜெய் 05:27
மொத்த நீளம்:
24:43

குறிப்புகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-01-26. பார்க்கப்பட்ட நாள் 2021-02-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீராப்பு&oldid=3788293" இலிருந்து மீள்விக்கப்பட்டது