வெப்பப் பரிமாற்ற எரிதல்

வெப்பப் பரிமாற்ற எரிதல் (ஆங்கிலம்: Deflagrationடீஃப்லாகிரேஷன், இலத்தீனம்: de + flagrare, "எரித்து விடுதல்") என்பது, உஷ்ணத்தில் எரிபவை, அதற்கடுத்த அடுக்கில் இருக்கும் குளிர்ந்தவையையும் சூடாக்கி கொளுத்தும்; வெப்பப் பரிமாற்றத்தால் பரவும் குறைஒலிவேக எரிதல் ஆகும். அன்றாட வாழ்வில் ஏற்படும் பெரும்பாலான "தீக்கள்" (தீச்சுடர் முதல் வெடிப்புகள் வரை), அனைத்தும் வெப்பப் பரிமாற்ற எரிதலே ஆகும். அதிர்வலைகளால் மீயோலிவேகத்தில் பரவும் அதிர்வலை எரிதலும் (detonation), வெப்பப் பரிமாற்ற எரிதலும் வெவ்வேறு ஆனவை. வெப்பப் பரிமாற்ற எரிதலுக்கு உள்ளாகும் பொருளுக்கு, எடுத்துக்காட்டாக வெடிமருந்தை குறிப்பிடலாம். ஏனெனில், இதை கொளுத்தினால், மிக விரைவில் எரிந்துவிடும்.

கணப்பில் எரியும் மரக் கட்டை

பயன்பாடுகள்  தொகு

பொறியியற் பயன்பாடுகளில், ஒப்பீட்டின் அடிப்படையில் அதிர்வலை எரிதலை விட, வெப்பப்பரிமாற்ற எரிதலை கட்டுக்குள் வைப்பது எளிது. அதனால், விரிவடையும் வாயுக்களின் விசையால் ஓர் பொருளை (துப்பாக்கியின் தோட்டா, அல்லது உள் எரி பொறியின் உந்துத் தண்டு) நகர்த்தும் நோக்கத்திற்கு, வெப்பப்பரிமாற்ற எரிதல் சரிபட்டு வரும். 

மேலும் பார்க்க  தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்பப்_பரிமாற்ற_எரிதல்&oldid=2390925" இலிருந்து மீள்விக்கப்பட்டது