வெறுப்பு (hate, hatred) என்பது மனரீதியான, மிகவும் ஆழமான விருப்பமின்மை காரணமாகத் தோன்றும் ஓர் உணர்ச்சி ஆகும். இது பொதுவாக நபர்கள், பொருட்கள் அல்லது எண்ணங்களின் மீது ஏற்படும்.

தொடர்புடைய உணர்ச்சிகள் தொகு

பொதுவாக வெறுப்புடன் இருப்பவரிடம் கோபமும் மன அமைதியின்மையும் முகத்தில் நிதானமின்மையும் இருக்கும். வெறுப்பு தவிர்க்க முடியாத ஓர் உணர்வாகிறது. ஒரு பொருள், நபர், சமூகம் போன்ற ஏதாவது ஒன்றின் மீதான ஒருவரின் வெறுப்புக்கு ஆழமாக, அவருடைய உள் மனத்தில் தோன்றும் பல காரணிகளும் காரணங்களாக அமைகின்றன.

சட்ட ரீதியான சமூக பிரச்சனைகள் தொகு

வெறுப்புக் குற்றம் (Hate Crime) என்பது ஒரு சாராரிடமிருக்கும் வெறுப்பைத் தூண்டிவிட்டு அதன் மூலமாக இன்னொரு சாராருக்கு அழிவை ஏற்படுத்தத் திட்டம் தீட்டுவதாகும். இவ்வகையான குற்றம் புரிவோர் பொதுவாக இனம், சாதி, மதம், பால், வயது, நாட்டுரிமை, உடல் குறைகள், அரசியல் ஈடுபாடு முதலானவற்றை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவர்.[1] ஒருவர் மீது வெறுப்பு கொண்டு அவரைப் பற்றிய உண்மையான அல்லது அவதூறான விமர்சனங்களை பொதுநலனுக்காக அன்றி தன் உள்நோக்கத்துக்காகப் பரப்புவதும் ஒரு சாராரை அல்லது அவர்களுடைய பொருட்கள் அல்லது செல்வாக்கு போன்றவற்றை அழிக்கத் திட்டமிடுவதும் 'வெறுப்புக் குற்றத்தில்' அடங்கும்.[2].

வெறுப்புப் பேச்சு (Hate Speech) என்பது ஓர் இனம், சாதி, மதம், பால், வயது, நாட்டுரிமை, பரம்பரை[3], உடல் குறைகள், பேசும் மொழி, அரசியல் ஈடுபாடு, சமுதாயப் பின்னணி, குறிப்பிட்ட குழுவினரின் வெளித்தோற்றம் (உயரம், அகலம், எடை, தோலின் நிறம் ஆகிய குறிப்பிட்ட அடையாளம்) கொண்டோரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி அந்த அடையாளங்களைப் பழித்துப் பேசி மற்றவர்களுக்கும் அவர்கள் மீது வெறுப்பு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் பேசுவதும் பரப்புரை செய்வதும் வெறுப்புப் பேச்சு ஆகும்.

சொற்களால் குறிப்பிட்ட நபர் அல்லது சாராரின் மனம் புண்படுவதோடு மட்டுமல்லாது பல வகையான செயல்பாடுகளாலும் இவ் வெறுப்பை வெளிப்படுத்தும் இவ்வகையான நடவடிக்கைகளை பல நாடுகளிலும் அரசுகள் கூர்ந்து கவனித்து தக்க நடவடிக்கை எடுக்கின்றன. சிலர் இதனை குற்றம் என்ற கண்ணோட்டத்தில் கண்டாலும் இது கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பதாக இருக்கின்றது எனவும் சில சாரார் வாதிடுகின்றனர்.

உசாத்துணை தொகு

  1. Stotzer, R.: Comparison of Hate Crime Rates Across Protected and Unprotected Groups, Williams Institute, 2007–06. Retrieved on 2007-08-09.
  2. Hate crime பரணிடப்பட்டது 2005-11-26 at the வந்தவழி இயந்திரம், Home Office
  3. "Dictionary.com: Hate speech". Dictionary.reference.com. பார்க்கப்பட்ட நாள் 2012-12-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெறுப்பு&oldid=3418549" இலிருந்து மீள்விக்கப்பட்டது