வெற்றிட உலோகவியல்

கட்டுப்படுத்தப்பட்ட வளிமண்டலத்தில் உலோகங்களை உருவாக்குவது, வடிவமைப்பது அல்லது சூடுபடுத்து

வெற்றிட உலோகவியல் (Vacuum metallurgy) என்பது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வளிமண்டலத்தில் உலோகங்களை உருவாக்குவது, வடிவமைப்பது அல்லது சூடுபடுத்துவது போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கிய பொருளறிவியல் நுட்பமாகும். இத்துறையில் சாதாரண வளிமண்டல அழுத்தத்தை விடக் குறைவான அழுத்தங்களில் இச்செயல்கள் கையாளப்படுகின்றன.[1] வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களால் உலோகம் மாசுபடுவதைத் தடுப்பதே வெற்றிட உலோகவியலின் நோக்கமாகும். மாறாக, சில செயல்முறைகளில் குறிப்பிட்ட சில வாயுக்களை மட்டும் உற்பத்தியின் ஒரு பகுதியாக சில செயல்முறைக்கு அறிமுகப்படுத்துவதும் உண்டு. எஃகு தயாரிக்கும் நடவடிக்கைகளில் வெற்றிடத்தை குறைத்தல், ஒளியியல் மற்றும் குறைக்கடத்திகள் தயாரிப்பதில் மெல்லிய உலோக அடுக்குகளின் மீது வெற்றிட வேதிப் படிவு, வெற்றிட வார்ப்படம், உலோகக் கலவைகளின் வெற்றிட வில் மீளுருவாக்கம் மற்றும் வெற்றிட மின்தூண்டல் உருகுதல் ஆகியவை வெற்றிட உலோகவியலின் சில எடுத்துக்காட்டுகளாகும்.

வெற்றிடத்தில் எஃகை வெப்பமூட்டும் தொடக்கச் செயல்முறை

மேற்கோள்கள் தொகு

  1. http://processmaterials.com/technology/vacuum-metallurgy "Vacuum metallurgy", retrieved March 26, 2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெற்றிட_உலோகவியல்&oldid=3711355" இலிருந்து மீள்விக்கப்பட்டது