வெளிக்காவும் நரம்பு

வெளிக்காவும் நரம்பு (ஆங்கிலம்: Efferent nerve fiber) என்பது இயக்கு நரம்பு ஆகும். வெளிக்காவும் நரம்புகள் இவையே மைய நரம்புத் தொகுதியிலிருந்து சமிக்ஞைகளை செயற்படு உறுப்புகளில் இருக்கும் இயக்க நரம்பணுக்களுக்குக் (ஆங்கிலம்: Motor neurons) கடத்தும் நரம்புகள். எடுத்துக் காட்டாக மைய நரம்புத் தொகுதியிலிருந்து ஒரு செயலுக்கான சமிக்ஞையை தசை, சுரப்பி போன்ற உடல் உறுப்புக்களுக்கு காவிச் செல்லும்.[1][2][3]

உட்காவும், வெளிக்காவும் நரம்புகளைக் காட்டும் படம்

அமைப்பு தொகு

 
நரம்பமைவு- இயக்கு மற்றும் உணர்வு நரம்பு மண்டலம்

பெரு மூளை புறணி இயக்கு பகுதியில் இருந்து இயக்க நரம்பணு உருவாக்கிய மின் அலைகளை வெளிக்காவும் நரம்பு இழை மூலம் சமிக்ஞைகளை முள்ளந்தண்டு வடம் மற்றும் உடலுறுப்புகளுக்கு எடுத்துச்செல்கிறது. அதாவது இயக்க நரம்பணுக்கள் பெரு மூளையின் இயக்கு புறணி, முள்ளந்தண்டு வடம் மற்றும் மூளைத்தண்டு பகுதிகளில் அமைந்துள்ளது. இயக்க நரம்பணு வெளிக்காவும் நரம்புகள் மூலம் கட்டளைகளை கடத்துகிறது. வெளிக்காவும் நரம்பு (ஆங்கிலம்: Efferent nerve fiber) என்பது இயக்கு நரம்பு ஆகும். வெளிக்காவும் நரம்புகள் இவையே மைய நரம்புத் தொகுதியிலிருந்து சமிக்ஞைகளை செயற்படு உறுப்புகளில் இருக்கும் இயக்க நரம்பணுக்களுக்குக் (ஆங்கிலம்: Motor neurons) கடத்தும் நரம்புகள். எடுத்துக் காட்டாக மைய நரம்புத் தொகுதியிலிருந்து ஒரு செயலுக்கான சமிக்ஞையை தசை, சுரப்பி போன்ற உடல் உறுப்புக்களுக்கு காவிச் செல்லும்.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Mader S. S. (2000): Human biology. McGraw-Hill, New York, ISBN 0-07-290584-0; ISBN 0-07-117940-2.
  2. 2.0 2.1 Hall J. E., Guyton A. C. (2006): Textbook of medical physiology, 11th edition. Elsevier Saunders, St. Louis, Mo, ISBN 0-7216-0240-1.
  3. 3.0 3.1 Warrell D. A., Cox T. M., Firth J. D. (2010): The Oxford Textbook of Medicine பரணிடப்பட்டது 2012-03-21 at the வந்தவழி இயந்திரம் (5th ed.). Oxford University Press
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளிக்காவும்_நரம்பு&oldid=2749959" இலிருந்து மீள்விக்கப்பட்டது