வெளிநாட்டுக் கொள்கை

ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை அந்நாடு வேறு நாடுகளுடன் பேனும் கொள்கைகளைக் குறிக்கிறது. பொதுவாக பொருளாதாரம், அரசியல், சமூக, படைத்துறை போன்ற துறைகளில் வெளிநாட்டுக் கொள்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். சில வேலைகளில் சுயாட்சி அற்ற நாடுகள், மாகாணங்களுடனான தொடர்புகளும் வெளிநாட்டுக் கொள்கையாக கொள்ளப்படுகின்றன,

சர்வதேச அரசியல் செயற்பாட்டினை பார்க்கையில், தமது தேச எல்லைக்குள் இயங்கும் செயற்பாட்டினை மாத்திரம் கருத்திற் கொள்ளாது சர்வதேச சூழல் முறைமைக்கு ஏற்றது போல் செயற்படும் நிலையை எம்மால் காண முடயம். ஓர் அரசு தனியாக இயங்குவதற்கான இயலுமை என்பது சாத்தியமற்றது. இதனை வரலாற்று ரீதியாக அரசுகள் மேற்கொண்ட இடைத் தொடர்புகள் மூலம் கண்டுகொள்ள முடியூமாகின்றது. சர்வதேச அரசுகளின் அரசியல் ரீதியான உத்தரவாதம் கொண்ட உறவினை ஏற்படுத்துவதற்கு வெளிநாட்டுக் கொள்கை என்பது இன்றியமையாத ஒன்றாகும். நாடுகளுக்கிடையே பல்பக்க அபிலாஷைகளை இலகுவில் அடைந்து கொள்வதென்பது இலகுவானதன்று. இதனை அடைந்து கொள்வதற்கு வெளிநாட்டுக் கொள்கையானது பங்களிப்பு செய்கின்றது எனலாம். வெளிநாட்டுக் கொள்கை தொடர்பாக பலர் பலவிதமான வரைவிலக்கணங்களை வகுத்துள்ளனர். இது பெரும்பாலும் நாட்டின் தேசிய பாதுகாப்பு, தேசிய நலன், உலக ஒருங்கிணைப்பு ஆகியவற்றினை மத்தியமயப்படுத்தி விளக்கியூள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

வரைவிலக்கணங்கள் தொகு

  • அதாவது வெளிநாட்டுக் கொள்கை தொடர்பாக மோகன்தோ குறிப்பிடுகையில் “வெளிநாட்டுக் கொள்கை என்பது போதிய அதிகாரத்தின் மூலம் தேசிய நலன்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தை கொண்ட சொற்றொடர் என்கிறார்.
  • ஜோர்ஜ் மொடல்ஸ்கி குறிப்பிடுகையில், “ஏனைய அரசுகளின் நடத்தையினை, சர்வதேச சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு, தமது சொந்த நடவடிக்கைகளை சமுதாயங்களால் உருவாக்கப்படும் நடவடிக்கைகளைக் கொண்ட ஒரு முறையே வெளிநாட்டுக் கொள்கையாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
  • ரெனால்ட்ஸ் குறிப்பிடுகையில், “தீர்மானம் மேற்கொள்பர்களால் நீண்ட இலக்குகளை மற்றும் குறுகிய கால நோக்கங்களை அடைந்துகொள்ளும் விதமாக மேற்கொள்ளப்படும் வெளிச் செயற்பாடுகள் வெளிநாட்டுக் கொள்கையாகும்.”
  • பேராசிரியர் கருணாதாச “எந்தவொரு அரசும் ஏனைய அரசுகளுடன் தொடர்புகளை மேற்கொள்வதற்காக பின்பற்றக்கூடிய கொள்கைகளின் செயற்பாடுகள் வெளிநாட்டுக் கொள்கையாகும்” என்கிறார்.
  • எஸ்.யூ.கொடிக்கார அவர்களின் விளக்கமானது, “ஒரு அரசின் வளங்களை பொருளாதாரம், இராஜதந்திரம், பிரச்சாரம் என்பவற்றை பயன்படுத்தி பொதுவாக தேசிய நலன் என அழைக்கப்படுவதை முன்னேற்றுவதற்காக மற்றைய அரசுகளின் நடத்தைகளைத் தூண்டுவதே வெளிநாட்டுக் கொள்கையின் உள்ளடக்கமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
  • வெளிநாட்டுக் கொள்கையானது, பகுத்தறிவூ ரீதியான தரத்தை விட ஒரு நாட்டினுடைய இலக்குகளை எவ்வாறு அடைந்துகொள்ளுதல் என்பதனை எடுத்துரைக்கின்ற சொற்றொடரெனவூம் குறிப்பிடப்படுகின்றது.

எனவே அரசின் இலக்கு, தேசத்தின் நலன், தேசிய பாதுகாப்பு போன்றவற்றை அடித்தளமாக கொண்டும், உலக ஒருங்கிணைப்பினை மையமாக கொண்டும் வெளிநாட்டுக் கொள்கை உருவாக்கப்படுவது யதார்தமானதாகக் காணப்படுகின்றது. தேசத்தின் இலக்கு மற்றும் அதன் அபிலாஷை எனும் போது நாட்டிற்கு நாடு பாரிய அளவூ மாற்றம் பெறாத தன்மையானது, அந்நாடுகளின் வெளிநாட்டுக் கொள்கையின் உள்ளடக்கங்களில் இனங்காண முடிகின்றது. பிரதானமாக நாட்டின் அபிலாஷைகள் எனும் போது, ஒரு நாட்டினால் அல்லது அங்கு வாழும் மக்களால் அடைந்து கொள்வதற்காக அல்லது எதிர்பார்க்கப்படும்; உயர்தரமான எண்ணங்கள், விருப்புக்கள் எனலாம். அடிப்படை அபிலாஷை என்பதானது, காலத்தின் தேவை கருதி மாற்றமடையாது இஸ்தீரமான நிலையில் காணப்படும் அபிலாஷைகளாகும். மாறாக காலத்திற்கு ஏற்றவாறு மாற்றமடையக் கூடிய அபிலாஷைகளும் காணப்படுகின்றன. அதாவது, ஒரு நாட்டில் காணப்படக்கூடிய அரசியல், சமூக, பொருளாதார, கலாசாரம் உட்பட நாட்டின் வெளிவாரியான காரணிகள், உள் நாட்டின் அரசியல் மாற்றங்கள் அரசியல் நிகழ்வூகள், அரசாங்க பிளவூகள் என்பவற்றினால் தேசிய அபிலாஷை என்பது மாற்றமடையக் கூடியதாக காணப்படுகின்றது. இஸ்தீரமான அபிலாஷையானது உயர் தரமானதாகவூம், பலம் பொருந்தியதாகவூம் காணப்படுவதுடன், இது ஒரு நாடு சர்வதேச அளவில் பிரசித்தம் பெறுவதற்கான ஏற்பாடாகவூம் அமையப்பெற்றுள்ளது.

இதில் தேசிய அபிவிருத்தி என்பது முதன்மையானதாகக் காணப்படும். பிரதானமாக காலனித்துவம் வீழ்ச்சியடைந்த அல்லது காலனித்துவத்திலிருந்து விடுபட்ட நாடுகள் தமது வெளிநாட்டுக் கொள்கைகளை வகுப்பதில் இத்தேசிய அபிவிருத்தியை அதிகளவில் கருத்திற் கொள்வதுடன் விசேடமாக நாட்டினை அந்நிய ஆக்கிரமிப்புக்களிலிருந்து பாதுகாப்பதில் அதி அக்கறை கொண்ட கொள்கைளை வகுக்கும் நிலையினையூம் காணலாம். இவ்வாறான தேசிய அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு தேசிய அதிகாரம் என்பது இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகின்றது. இது நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது. வெளிநாட்டுக் கொள்கையில் தேசிய அதிகாரமானது, பாரியளவில் வெளிப்படுத்தப்படும் அதேவேளை, ஒரு நாடு இதன்மூலம் எவ்வளவூ தூரம் பலம் பொருந்தியது அல்லது பலமற்றது என்பதனை அறிந்துகொள்ள முடியூமாகின்றது. மாறாக ஒரு நாடு பலம் பொருந்தியதா இல்லையா என்பதனை இக்குறிப்பிட்ட நாட்டின் மீது ஏற்படுத்தப்படும் அந்நிய நாட்டு அழுத்தங்கள் மூலமும் விளங்கிக்கொள்ள முடியூமாகின்றது.

படைத்துறை தொகு

தேசிய பாதுகாப்பு எனும் போது இது இக்குறிப்பிட்ட நாட்டின் பாதுகாப்பு மாத்திரமன்றி மக்கள் பாதுகாப்பும் இன்றியமையாத ஒன்றாக காணப்படுவதுடன், உலகில் காணப்படும் சிறிய நாடாயினும் சரி பெரிய நாடாயினும் சரி இத்தேசிய பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறை கொள்வதனை காணலாம். அத்துடன் ஒரு நாடு தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஏனைய நாடுகளிடமிருந்து அச்சம் ஏற்படுமாயின் அந்நாடுகளுடன் யூத்தத்தில் ஈடுபடவூம் உடன்படிக்கை செய்யவூம் முயற்சிக்கும். இச் செயன்முறையை வரலாற்று ரீதியான அனுபவத்தில் காண முடிகின்றது. தமது உள்நாட்டு பாதுகாப்பை தரை, வான், கடல் மார்க்கங்கள் மூலமாக பாதுகாக்கும் நிலைமையானது, உள்நாட்டு அரசியல் நிலவரங்களினால் மாத்திரமன்றி, வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, அனாவசிய அந்நிய நாட்டு தலையீடுகளை தடுத்து, தேசிய பாதுகாப்பினை இஸ்தீரப்படுத்துவதற்கான ஏற்பாடாகவூம் காணப்படும். இது இவ்வாறு இருக்க, உலக ஒழுங்கானது மாற்றமடைகின்ற போது வெளிநாட்டுக் கொள்கையூம் மாற்றமடைகின்றது என்றே கூறலாம்.

குறிப்பாக தேசிய பாதுகாப்புக் கொள்கையானது சர்வதேச முறைமைகளினை மாத்திரம் கருத்திற் கொள்ளாது,பிராந்திய உபாய சூழலினையூம் கருத்திற் கொண்டுள்ளன. இருபதாம் நூற்றாண்டு காலப்பகுதியில் வெளிநாட்டுக் கொள்கை இவ் உலக ஒழுங்கினை கருத்திற்கொண்டு முக்கியத்துவம் பெற்று விளங்கியதுடன், பல நாடுகள் இராஜதந்திர ரீதியிலான உறவூகளை அடைந்து கொள்வதற்கு பல முயற்சிகளை ஏற்படுத்தி அதனை நடைமுறைப்படுத்தியூம் கொண்டன. இவ்வாறான நிலைக்குக் காரணம், காலத்தின் தேவை கருதிய செயற்பாடுகள் வெளிநாட்டுக் கொள்கையினை வகுப்பதில் பாரிய செல்வாக்கு செலுத்துகின்றமையே ஆகும். இதனை குளிர் யூத்த காலப்பகுதியில் அதிகளவில் காண முடிந்ததுடன், தற்போது நாடுகளுக்குள் காணப்படும் மோதல்களும் இவ் வெளிநாட்டுக் கொள்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

வெளிநாட்டுக் கொள்கையினை கோட்பாட்டு அடிப்படையில் மொடல்ஸ்கி குறிப்பிடுகையில் “ஏனைய அரசுகளின் நடவடிக்கைகளை மாற்றுதல், மற்றும் சர்வதேச சூழலுக்கு அவர்களது செயற்பாட்டினை பொருந்தச் செய்வதற்காக சமூகத்தால் வெளிப்படுத்தப்படும் செயற்பாட்டு முறைமை” என்கிறார். எனவே, குறிப்பிட்ட நாட்டின் தேசிய இலக்குகளை அடைந்து கொள்வதற்கும், சர்வதேச நாடுகளுடன் உறவூகளைப் பேணிக்கொள்வதற்கும் வெளிநாட்டுக் கொள்கையானது உபாய ரீதியான கருவியாக செயற்படுகின்றது என்று கூறலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளிநாட்டுக்_கொள்கை&oldid=2767340" இலிருந்து மீள்விக்கப்பட்டது