வெள்ளி நைட்ரேட்டு

வேதிச் சேர்மம்

வெள்ளி நைட்ரேட்டு (Silver nitrate) என்பது AgNO
3
என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இந்தச் சேர்மமானது வெள்ளியின் பல சேர்மங்களுக்கான முன்னோடிச் சேர்மம் ஆகும். வெள்ளை ஆலைடுகளைக் காட்டிலும் மிக அதிக அளவில் ஒளிக்கு குறைவான உணர்தல் திறனுடையதாகும். இது வெள்ளி என்பது நிலவுடன் தொடர்புடையது என்று பண்டைய இரசவாதிகள் கருதியதால் உருவான லூனா காரம் எனவும் அழைக்கப்பட்டது[7]

Silver nitrate
Skeletal formula of silver nitrate
Sample of silver nitrate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
வெள்ளி(I) நைட்ரேட்டு, வெள்ளி நைட்ரேட்டு
வேறு பெயர்கள்
நைட்ரிக் அமிலத்தின் வெள்ளி உப்பு(1+)
Lapis infernalis
இனங்காட்டிகள்
7761-88-8 Y
ChEBI CHEBI:32130 Y
ChEMBL ChEMBL177367 Y
ChemSpider 22878 Y
EC number 231-853-9
InChI
  • InChI=1S/Ag.NO3/c;2-1(3)4/q+1;-1 Y
    Key: SQGYOTSLMSWVJD-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Ag.NO3/c;2-1(3)4/q+1;-1
    Key: SQGYOTSLMSWVJD-UHFFFAOYAW
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24470
வே.ந.வி.ப எண் VW4725000
SMILES
  • [N+](=O)([O-])[O-].[Ag+]
UNII 95IT3W8JZE Y
UN number 1493
பண்புகள்
AgNO3
வாய்ப்பாட்டு எடை 169.87 g·mol−1
தோற்றம் நிறமற்ற திண்மம்
மணம் மணமற்றது
அடர்த்தி 4.35 கி/செமீ3 (24 °செல்சியசு)
3.97 கி/செமீ3 (210 °செல்சியசு)[1]
உருகுநிலை 209.7 °C (409.5 °F; 482.8 K)[1][3]
கொதிநிலை 440 °C (824 °F; 713 K)
சிதைவுறுகிறது[1]
122 கி/100 மிலி (0 °செ)
170 கி/100 மிலி (10 °செ)
256 கி/100 மிலி (25 °செ)
373 கி/100 மிலி (40 °செ)
912 g/100 mL (100 °C)[2]
கரைதிறன் அசிட்டோன்,[1] அமோனியா, டை எத்தில் ஈதர், கிளிசரால் ஆகியவற்றில் கரையும்
அசிட்டிக் அமிலம்-இல் கரைதிறன் 0.776 கி/கிகி (30 °செ)
1.244 கி/கிகி (40 °செ)
5.503 கி/கிகி (93 °செ)[3]
அசிட்டோன்-இல் கரைதிறன் 0.35 கி/100 கிகி (14 °செ)
0.44 கி/100 கிகி (18 °செ)[2]
பென்சீன்-இல் கரைதிறன் 0.22 கி/கிகி (35 °செ)
0.44 கி/கிகி (40.5 °செ)[2]
ethanol-இல் கரைதிறன் 3.1 கி/100 கி (19 °செ)[2]
எதில் அசிட்டேட்டு-இல் கரைதிறன் 2.7 கி/100 கி (20 °செ)[3]
மட. P 0.19
−45.7·10−6 செமீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.744
பிசுக்குமை 3.77 போயிசு (அலகு) (244 °செ)
3.04 போயிசு (அலகு) (275 °செ)[3]
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம், oP56[4]
புறவெளித் தொகுதி P212121, No. 19[4]
Lattice constant a = 6.992(2) Å, b = 7.335(2) Å, c = 10.125(2) Å[4]
படிகக்கூடு மாறிலி
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−124.4 கிலோஜூல்/மோல்[1]
நியம மோலார்
எந்திரோப்பி So298
140.9 ஜூல்/மோல்-கெல்வின்[1]
வெப்பக் கொண்மை, C 93.1 ஜூல்/மோல்-கெல்வின்[1]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எத்தனாலுடன் வெடிக்கும் தன்மையுடன் வினைபுரிகிறது, நச்சுத்தன்மை கொண்டது. அரிக்கும் தன்மை உடையது.
GHS pictograms GHS03: OxidizingThe corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[5]
GHS signal word அபாயம்
H272, H314, H410[5]
P220, P273, P280, P305+351+338, P310, P501[5]
Lethal dose or concentration (LD, LC):
800 mg/kg (rabbit, oral)
20 mg/kg (dog, oral)[6]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

திட வெள்ளி நைட்ரேட்டில், வெள்ளி அயனிகள் சமதள முக்கோண வடிவத்தின்படி ஒருங்கிணைக்கப்படுகின்றன .[4]

கண்டுபிடிப்பு தொகு

ஆல்பர்டஸ் மேக்னஸ், 13 ஆம் நூற்றாண்டில், வெள்ளியைக் கரைப்பதன் மூலம் தங்கத்தையும் வெள்ளியையும் பிரிக்க நைட்ரிக் அமிலத்தின் திறனை ஆவணப்படுத்தினார். இதன் விளைவாக வெள்ளி நைட்ரேட்டின் கரைசல் சருமத்தை கருமையாக்கும் என்று மேக்னஸ் குறிப்பிட்டார்.[8]

தொகுப்பு தொகு

வெள்ளி நைட்ரேட்டு, வெள்ளிப் பணம் அல்லது வெள்ளித்தாள் போன்றவற்றை நைட்ரிக் அமிலத்துடன் வினையில் ஈடுபடச் செய்வதன் மூலம் தயாரிக்கலாம். இதன் விளைவாக வெள்ளி நைட்ரேட், நீர் மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகள் உருவாகின்றன. இந்த வினையின் துணை விளைபொருட்கள் பயன்படுத்தப்படும் நைட்ரிக் அமிலத்தின் செறிவைப் பொறுத்ததாகும்.

3 Ag + 4 HNO 3 (குளிர் மற்றும் நீர்த்த) → 3 AgNO 3 + 2 H 2 O + NO
Ag + 2 HNO 3 (சூடான மற்றும் செறிவூட்டப்பட்ட) → AgNO 3 + H 2 O + NO 2

நச்சுத்தன்மையுள்ள நைட்ரஜன் ஆக்சைடுகள் வினையின் போது உருவாகும் என்பதால் இந்த வினையானது ஒரு ஆவி வாங்கியின் கீழ் நிகழ்த்தப்படுகிறது.[9]

வினைகள் தொகு

வெள்ளி நைட்ரேட்டுடன் ஒரு பொதுவான வினை வெள்ளி நைட்ரேட்டின் கரைசலில் தாமிரத்தின் ஒரு தடியை நிறுத்தி சில மணி நேரம் விட்டு விடும் போது, வெள்ளி நைட்ரேட் தாமிரத்துடன் வினைபுரிந்து வெள்ளி உலோகத்தின் முடி போன்ற படிகங்களையும், காப்பர் நைட்ரேட்டின் நீலக் கரைசலையும் உருவாக்குகிறது:

2 AgNO 3 + Cu Cu (NO 3 ) 2 + 2 Ag

வெப்பப்படுத்தும் போது வெள்ளி நைட்ரேட் சிதைகிறது:

2 AgNO3(l) → 2 Ag (திண்மம்) + O2 (வாயு) + 2 NO2 (வாயு)

பயன்கள் தொகு

வெள்ளியின் இதர சேர்மங்களுக்கான முன்னோடியாக தொகு

வெள்ளியின் உப்புகளிலேயே மிகவும் விலை குறைவான உப்பு வெள்ளி நைட்ரேட்டாகும்; இச்சேர்மம் இதர நன்மைகளையும் கொண்டுள்ளது. வெள்ளி நான்மபுளூரோபோரேட்டு மற்றும் வெள்ளி பெர்குளோரேட்டு போன்றவற்றிற்கு மாறாக இச்சேர்மம் நீர் உறிஞ்சும் திறன் கொண்டதல்ல. ஒப்பீட்டளவில் இது ஒளியின் தாக்கத்திற்கு ஓரளவு நிலைத்தன்மை கொண்டதாகும். இறுதியாக, இது நீர் உட்பட எண்ணற்ற கரைப்பான்களில் கரையக்கூடியது. நைட்ரேட்டு மற்ற ஈந்தணைவிகளால் பதிலியிடப்படுவதன் மூலமாக, AgNO3 சேர்மத்தை பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றுகிறது. ஆலைடு அயனிகளைக் கொண்ட கரைசல்களுடனான வினை AgX (X = Cl, Br, I) வீழ்படிவினைத் தருகிறது. ஒளிப்படத் தகடுகளைத் தயாரிக்கும் போது முன்பு பாலிஎசுத்தர் அல்லது மூஅசிடேட்டு ஒளிப்படத்தகடுகளின் மீது ஜெலாட்டினுக்குப் பதிலாக வெள்ளி நைட்ரேட்டானது சோடியம் அல்லது பொட்டாசியம் ஆலைடுகளுன் வினைக்குட்பட்டு கரையாத வெள்ளி ஆலைடுகள் தயாரிக்கப்பட்டு பூசப்பட்டது. இதே போன்று, வெள்ளி நைட்ரேட்டானது வெள்ளி ஃப்ளூமினேட்டு, வெள்ளி அசைடு அல்லது வெள்ளி அசிட்டிலைடு போன்ற வெள்ளியை அடிப்படையாகக் கொண்ட வெடிமருந்துகளைத் தயாரிக்கவும் இது பயன்படுகிறது.

வெள்ளி நைட்ரேட்டைக் காரத்துடன் வினைப்படுத்தும் போது அடர் சாம்பல் நிற வெள்ளி ஆக்சைடு கிடைக்கப் பெறுகிறது:

2 AgNO3 + 2 NaOH → Ag2O + 2 NaNO3 + H2O

ஆலைடு கவர்தல் தொகு

வெள்ளி நேரயனி, Ag+
, ஆலைடு மூலங்களுடன் எளிதில் வினைபுரிந்து கரையாத வெள்ளி ஆலைடு வீழ்படிவினைத் தருகிறது. புரோமைடு பயன்படுத்தப்படும் போது ஒரு குழைமமாகவும், குளோரைடு அயனி பயன்படுத்தப்படும் போது வெண்ணிற வீழ்படிவையும் மற்றும் அயோடைடு அயனி பயன்படுத்தப்படும் போது மஞ்சள் நிற வீழப்படிவையும் தருகிறது. இந்த வினையானது கனிம வேதியியலில் ஆலைடுகளைக் கவர்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது:

Ag+
+ X
→ AgX (திண்மம்) ( X
= Cl
, Br
, அல்லது I
)

இதே போன்று, இந்த வினையானது, பகுப்பாய்வு வேதியியலில் உப்புகளில் குளோரைடு, புரோமைடு அல்லது அயோடைடு அயனிகளைக் கண்டறிவதற்கும் பயன்படுகிறது. உப்பின் மாதிரிகளுடன் நீர்த்த நைட்ரிக் அமிலமானது குறுக்கீடு செய்யும் அயனிகளை (உதாரணமாக, கார்பனேட்டு அயனிகள் மற்றும் சல்பைடு அயனிகள்) நீக்குவதற்காக சேர்க்கப்படுகிறது. இந்தப் படிநிலையானது வெள்ளி ஆலைடுகளுடன் வெள்ளி சல்பைடு அல்லது வெள்ளி கார்பனேட்டு ஆகியவை வீழ்படிவாகி குழப்பமேற்படுத்துவதைத் தவிர்க்கிறது. வீழ்படிவின் நிறமானது ஆலைடுகளுக்குத் தகுந்தவாறு மாறுகிறது. வெள்ளி குளோரைடு - வெண்ணிற வீழப்படிவு , வெள்ளி புரோமைடு - வெளிர் மஞ்சள் முதல் குழைமம் வரை, வெள்ளி அயோடைடு - மஞ்சள்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Lide, David R., தொகுப்பாசிரியர் (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0. 
  2. 2.0 2.1 2.2 2.3 Seidell, Atherton; Linke, William F. (1919). Solubilities of Inorganic and Organic Compounds (2nd ). நியூயார்க்கு நகரம்: D. Van Nostrand Company. பக். 617–619. https://archive.org/details/solubilitiesino04seidgoog. 
  3. 3.0 3.1 3.2 3.3 Kiper, Ruslan Anatolievich. "silver nitrate". Chemister.ru. பார்க்கப்பட்ட நாள் 2014-07-20.
  4. 4.0 4.1 4.2 4.3 Meyer, P.; Rimsky, A.; Chevalier, R. (1978). "Structure du nitrate d'argent à pression et température ordinaires. Example de cristal parfait". Acta Crystallographica Section B 34 (5): 1457–1462. doi:10.1107/S0567740878005907. 
  5. 5.0 5.1 5.2 Sigma-Aldrich Co., Silver nitrate. Retrieved on 2014-07-20.
  6. "Silver (metal dust and soluble compounds, as Ag)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  7. "Definition of Lunar Caustic". dictionary.die.net. Archived from the original on 2012-01-31.
  8. Szabadváry, Ferenc (1992). History of analytical chemistry. Taylor & Francis. பக். 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-2-88124-569-5. https://books.google.nl/books?id=53APqy0KDaQC&lpg=PP1&pg=PA17#v=onepage&q=magnus&f=false. 
  9. "Making silver nitrate". YouTube.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_நைட்ரேட்டு&oldid=3384676" இலிருந்து மீள்விக்கப்பட்டது