வெள்ளை இரவு விழாக்கள்

வெள்ளை இரவு விழாக்கள் என்பவை கோடைகாலத்தில் பல நகரங்களில் நடத்தப்பட்ட இரவு கலை விழாக்களாகும். இதில் அசல் திருவிழாவானது உருசியாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் நடைபெற்ற வெள்ளை இரவு விழா ஆகும். கோடைக் காலத்தில் வடதுருவத்தை ஒட்டிய பகுதிகளில் இரவுகளில் சூரியன் மறைவது தாமதமாகி, சூரியன் உதிக்கும் நேரம் துவங்கிவிடும், இவ்வாறு சூன் மாதத்த கோடைகால வார இறுதி நாளில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் போன்ற பகுதிகளில், சூரியன் மறைவதற்கு இரவு 10 மணிக்குப் பிறகும் கூட கிட்டத்தட்ட இரவு முழுவதும் மெல்லொளி நீடிக்கும்.

செயின்ட் பீட்டர்போர்கில் 2006 சூன் 28 இரவு 11 மணியளவில் வெள்ளை இரவின் துவக்கமாக சூரிய ஒளி அளவு நிரூபிக்கிறது

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வெள்ளை இரவுகள் திருவிழாவானது, கண்கவர் வானவேடிக்கை மற்றும் ஸ்கார்லெட் செயில்ஸ் ஆகியவற்றிற்கு புகழ் பெற்றது, இது பள்ளி ஆண்டு முடிவைக் கொண்டாடும் ஒரு பாரிய நிகழ்ச்சியாகவும் உள்ளது.[1]

மேலும் மாஸ்கோ நகருக்கு அடுத்த பெரிய நகரமான லெனின்கிராட் இந்நகரம் நேவா ஓஹா என்ற இரண்டு ஆறுகளில் முகத்துவாரத்தில் அமைந்து உள்ளது. குளிர் காலத்தில் பகற்பொழுது மிகவும் குறைவு. கோடையில் வினோதமான நிகழ்ச்சியாக, சூலை மாதத்தில் 22ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை அங்கு இரவே இருக்காது. அதாவது இரவு முழுவதும் ஒரே வெளிச்சமாக இருக்கும். அந்தக் காலத்து இரவுகளை 'வெள்ளை இரவுகள்' என்பர். அந்நாட்களில் மக்கள் துங்காமல் ஆடிப் பாடி மகிழ்வர். அவற்றைக் கண்டு களிக்க வெளிநாட்டினர் சுற்றுலாப் பயணமாக ஏராளமானோர் வருகிறார்கள்.[2]

இதே போன்று உலகம் முழுக்க பல பகுதிகளில் வெள்ளை இரவு, லைட் நைட்ஸ் அல்லது நியூட் பிளாச்சி போன்ற பல்வேறு பெயர்களைப் பயன்படுத்தி இதைப் பின்பற்றி பிற விழாக்கள் உருவாகியுள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. "Video of 2007 White Nights Festival".
  2. அறிவுபேழை கவிஞர் நஞ்சுணடன்ஜூலை 1999 கலாபதிப்பகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_இரவு_விழாக்கள்&oldid=2445455" இலிருந்து மீள்விக்கப்பட்டது