வோர்னர் பார்க் பல்பகுதி விளையாட்டரங்கம்

வோர்னர் பார்க் பல்பகுதி விளையாட்டரங்கம் பசேடிரே, செயிண்ட். கிட்சில், செயிண்ட். கிட்ஸ் நெவிசில் அமைந்துள்ள பல்தொகுதி விளையாட்டரங்கமாகும். இது 2007 உலகக்கோப்பை துடுப்பாட்ட போட்டிகளின் போது குழு A போட்டிகள் நடைபெற்ற வோர்னர் பார்க் மைதானதையும் உள்ளடக்கியதாகும். விளையாட்டரங்கின் கிழக்குப்பகுதியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்துள்ளது. இங்கு 4000 பார்வையாளர்களுகான இருக்கை வசதிகள் உள்ளதோடு 10,000 பேருக்கான தற்காலிக பார்வையாளர் அரங்குகள் முக்கிய விளையாட்டு போடிகளின் போது அமைக்கப்படும். இவ்விளையாட்டரங்கம் சீன குடியரசின் 2.72 மில்லியன் அமெரிக்க டாலர் உதவியுடன் அமைக்கப்பட்டதாகும். துடுப்பாட்ட மைதானத்துக்கும் தடகளப் போட்டி மைதானம் என்பவற்றின் கட்டுமான பணிகளுக்கான மொத்தச் செலவு 12 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். விளையாட்டரங்கின் மேற்கு பகுதியில் கால்பந்தாட்ட மைதானமும், 400 மீட்டர் நீள ஓட்டப்போட்டிகளுக்கான ஓடுதளம், டெணிஸ் மைதானங்கள் 3, வலை/கூடைப் பந்து மைதானங்கள் 3, லென் எரிஸ் துடுப்பாட்ட அகடமி, களியாட்ட மைதானம் என்பன அமைந்துள்ளன.

இவற்றையும் பார்க்க தொகு

வெளியிணைப்புகள் தொகு


2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண அரங்கங்கள்
கென்சிங்டன் ஓவல் அரங்கம் (பார்படோசு) | குயிண்ஸ் பார்க் அரங்கம் (கிரெனடா) | சபினா பார்க் அரங்கம் (யமேக்கா) | சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம் (அன்டிகுவா பர்புடா) | புரொவிடன்ஸ் அரங்கம் (கயானா) | வோர்னர் பார்க் அரங்கம் (செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்) | Beausejour அரங்கம் (செயிண்ட். லூசியா) | குயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம் (திரினிடாட் டொபாகோ)  

17°17′55″N 62°43′19″W / 17.29861°N 62.72194°W / 17.29861; -62.72194