வ. சுப்பையா

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

வரதராஜுலு கைலாச சுப்பையா (07.02.1911 - 12-10-1993 ) புதுச்சேரியின் விடுதலைப்போராட்டத்தின் தலைவர், முதல் தென் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளையை அமைத்தவர்.எழுத்தாளர், பதிப்பாளர், மார்க்சிய சிந்தனையார், புது்ச்சேரி பிரதேச அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், பிரெஞ்ச் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், சுதந்திரம் பத்திரி்க்கையின் நிறுவனர், இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு ஏற்று இந்திய விடுதலைக்கு பாடுபட்டதிற்காக தாமரை பட்டயம் பெற்ற 97 சுதந்திர போராட்ட வீரர்களில் இவரும் ஒருவர்.[1]

வ. சுப்பையா
மக்கள் தலைவர்
பிறப்பு(1911-02-11)பெப்ரவரி 11, 1911
பிரெஞ்சிந்தியப் பகுதியான பாண்டிச்சேரி
இறப்பு(1993-10-12)அக்டோபர் 12, 1993
பாண்டிச்சேரி ஒன்றிய பிரதேசம் ,இந்தியா
பணிஎழுத்தாளர், பத்திரிக்கையாளர், விடுதலை இயக்க செயற்பாட்டளர்
வாழ்க்கைத்
துணை
சரஸ்வதி சுப்பையா

வாழ்க்வை வரலாறு தொகு

பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி 1911 ஆம் ஆண்டு பிரெஞ்சிந்தியப் பகுதியான பாண்டிச்சேரியில் வெள்ளாழர் வீதியில் வசித்த வரதராஜிலு – ராஜபங்காரு தம்பதியரின் மகனாக பிறந்தார் .இவர் கலவை கல்லூரி உயர்நிலை பள்ளியில் கல்வி கற்றவர் ஆவர்.ஆரம்பகால அரசியல் வாழ்வில் மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டார் .1933 ஆம் ஆண்டு அரிஜன சேவா சங்கம் துவக்கினார் .இவர் "சுதந்திரம்" என்ற பத்திரிகை நடத்தி வந்தார். இவர் புதுவை ஒன்றிய பிரதேசத்தின் தொழிற்சங்க இயக்கம் உருவாக்கப்பட்டதின் முன்னோடி ஆவர் .

அரசியல் பணி தொகு

1935, 36 களில் புதுவைப் பஞ்சாலைகளில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்திற்கும் வழிகாட்டியாகவும் உந்துசக்தியாகவும் இருந்து செயலாற்றியுள்ளார்.1936 இல் தொழிற்சங்க உரிமை கோரி மூன்று பஞ்சாலைத் தொழிலாளர்களும் இணைந்து நடத்திய போராட்டத்தை ஒடுக்க 1936 ஜூலை 30 அன்று பிரஞ்சு ஏகாதிபத்யம் ராணுவத்தின் துணையோடு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இச்சம்பவம் இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளின் கவனத்தைப் புதுச்சேரியின் பக்கம் திருப்பியது. இப்போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் வ.சுப்பையா அவர்களே.

எட்டு மணி நேரவேலையும் தொழிற்சங்கம் அமைப்பதற்கு உரிமையும் தொகு

இப்போராட்டத்தின் விளைவாக 1937 ஏப்ரல் 6 இல் பிரஞ்சு- இந்தியாவிற்கான தொழிற்சங்கச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அதன்படி தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 8 மணிநேர வேலையும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையும் வழங்கப்பட்டன. ஆசிய நாடுகளிலேயே 8 மணிநேர வேலை என்பது புதுச்சேரியில்தான் முதன்முதலாக அமுலாக்கப்பட்டது. அத்துடன் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம், ஓய்வுக்கால ஊதியம், பெண் ஊழியர்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் சமூகப்பயன் அளிக்கும் திட்டங்களும் வரையறுக்கப்பட்டன.

  • 12 மணி நேர வேலை, மிக குறைவான ஊதியம் ,தொழிற்சங்க உரிமை மறுப்பு போன்ற பல இன்னல்களை அனுபவித்து வந்த 15,000 ஜவுளி தொழிலாளர்களை 1935 ஆம் ஆண்டு ஒருங்கிணைத்தார்.
  • அடிப்படை உரிமைகள் கோரி போராட்டம் நடத்திய ஆலை தொழிலாளர்கள் 12 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.அதன் பின் ஏற்பட்ட போராட்டத்திற்கு பிறகு 1936 ஆம் ஆண்டு ஆசியாவிலே முதல் முறையாக பிரெஞ்சு இந்தியா காலனியான புதுச்சேரியில் எட்டு மணி நேரவேலையும் தொழிற்சங்கம் அமைப்பதற்கு உரிமையும் ஆலை தொழிலாளர்களுக்கு வழங்கபட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-25. பார்க்கப்பட்ட நாள் 2015-09-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._சுப்பையா&oldid=3570383" இலிருந்து மீள்விக்கப்பட்டது