ஷா நவாஸ் கான், ஜெனரல்

2ஆவது மக்களவை உறுப்பினர்

ஷா நவாஸ் கான் (உருது: شاہ نواز خان - ஜனவரி 1914 - 9 டிசம்பர் 1983) இரண்டாம் உலகப் போரின் போது இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய இந்திய அரசியல்வாதி ஆவார். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, பிரித்தானிய இந்திய இராணுவ நீதிமன்றத்தால் அவர் கைது செய்யப்பட்டு, தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

இந்திய தேசிய இரானுவத்தில் தொகு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உரைகளால் ஈர்க்கப்பட்ட ஷா நவாஸ் கான் 1943 ஆம் ஆண்டு இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்தார். நாடு கடந்த இந்திய அரசு (Arzi Hukumat-e- Azad Hind) அமைச்சரவையில் அவர் சேர்க்கப்பட்டார். பின்னர், ஆங்கிலேய அரசினை எதிர்ப்பதற்காக ஐ.என்.ஏ யின் ஒரு படைப்பிரிவினை இந்தியாவுக்குள் அனுப்பும் நடவடிக்கையில் ஷா நவாஸ் உசேன் தலைமையிலான படைப்பிரிவினை வடகிழக்கு இந்தியாவிற்கு போஸ் அனுப்பினார். ஜப்பானின் அதிகாரத்தின் கீழ் இருந்த கோஹிமா மற்றும் இம்பால் ஆகியவற்றை ஷா நவாஸ் உசேனின் படைப்பிரிவு கைப்பற்றியது.[1]

ஷா நவாஸ் கான் இந்திய தேசிய ராணுவத்தின் தலைமை அதிகாரியாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸூக்கு அடுத்தபடியாக இருந்து வழிநடத்தியவர்.சிங்கப்பூர் ஜப்பானிடம் சரணடைந்ததையடுத்து போராளியாக சிறைபிடிக்கப்பட்டார்.[2]

நாடாளுமன்றத்தில் தொகு

நாடு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற பிறகு நாட்டின் முதலாவது நாடாளுமன்ற தேர்தலில் 1952ல் மீரட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்திய அரசின் அமைச்சரவையில் இடம் பெற்றார். 1952, 1957, 1962 மற்றும் 1971 தேர்தலிகளில் மீரட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1967 மற்றும் 1977 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்

  • நாடாளுமன்ற செயலாளர் மற்றும் ரயில்வே மற்றும் போக்குவரத்து அமைச்சர் 11 ஆண்டுகள் (1952-1956) & (1957-1964 (இரண்டாவது காலம்))
  • உணவு மற்றும் வேளாண்மை அமைச்சர் (1965)
  • தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் (1966)
  • உருக்கு அமைச்சகம் (இந்தியா)மற்றும் சுரங்க அமச்சக மந்திரி மற்றும் பெட்ரோலிய மற்றும் இரசாயன தொழிற்சாலை அமைச்சர் (1971-1973)
  • வேளாண் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் (1974-1975)
  • வேளாண் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் (1975-1977)
  • தேசிய விதை கூட்டுறவு சங்கத்தின் தலைவர்
  • இந்திய உணவுக் கழக தலைவராவும் பணியாற்றியுள்ளார்.[3]

புகழ் பெற்ற குறிப்பு தொகு

நான் அவரது ஆளுமை மற்றும் அவரது உரைகளின் மூலம் மயக்கமாக இருந்தேன் என்று சொல்வது தவறாக இருக்காது, அவர் எங்கள் முன் இந்தியாவின் உண்மையான படத்தை வைத்தார். என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் இந்தியாவை ஒரு இந்திய கண்கள் (நேதாஜி) வழியாகக் கண்டேன். ., ஷா நவாஸ் கான்[4]

மேற்கோள்கள் தொகு

  1. Tarique, Mohammad, Modern Indian History, Tata McGraw-Hill Education, p. 9-11, ISBN 978-0-07-066030-4
  2. Green, L.C. (January 1948). "The Indian National Army Trials". The Modern Law Review 11 (4): 47–69. doi:10.1111/j.1468-2230.1948.tb00071.x. 
  3. name=Cohen/> Having successfully contested the first Lok Sabha in 1952 from Meerut, Khan had an illustrious parliamentary career becoming:
  4. Cohen, Stephen (Winter 1963). "Subhas Chandra Bose and the Indian National Army". Pacific Affairs 36 (4): 411–429. doi:10.2307/2754686. https://archive.org/details/sim_pacific-affairs_winter-1963-1964_36_4/page/411. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷா_நவாஸ்_கான்,_ஜெனரல்&oldid=3925745" இலிருந்து மீள்விக்கப்பட்டது