ஹமிர்பூர் மாவட்டம்

ஹமிர்பூர் (இந்தி: हमीरपुर जिला) இமாசலப் பிரதேசம், இந்தியாவில் உள்ள 12 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் ஹமிர்பூர் நகரில் உள்ளது. இமாவட்டத்தின் பரப்பு 1,118 கிமீ². இது இமாசலப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களிலேயே கல்வியறிவு அதிகம் உள்ள மாவட்டம். மேலும் இங்கு சாலைகளின் அடர்த்தி இந்தியாவின் மற்ற மாவட்டங்களை விட அதிகமாக உள்ளது.

ஹமிர்பூர் மாவட்டம்
हमीरपुर जिला
ஹமிர்பூர்மாவட்டத்தின் இடஅமைவு இமாசலப் பிரதேசம்
மாநிலம்இமாசலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம்ஹமிர்பூர்
பரப்பு1,118 km2 (432 sq mi)
மக்கட்தொகை3,69,128 (2001)
மக்கள்தொகை அடர்த்தி330.17/km2 (855.1/sq mi)
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இமாசலப் பிரதேசத்தில் உள்ள ஹமிர்பூர் மாவட்டத்தின் மக்கட்தொகை 454,293.[1] தோராயமாக இது மால்டா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானது.[2] இதன் மூலம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் இது 550வது இடத்தில் உள்ளது.[1] இம்மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 406 inhabitants per square kilometre (1,050/sq mi) .[1] 2001-2011 காலகட்டத்தில் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 10.08%.[1] ஹமிர்பூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 1096 பெண்களை கொண்டுள்ளது.[1] மேலும் இமாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 89.01%.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01. Malta 408,333 July 2011 est. {{cite web}}: line feed character in |quote= at position 6 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹமிர்பூர்_மாவட்டம்&oldid=3890853" இலிருந்து மீள்விக்கப்பட்டது