ஹரே கிருஷ்ணா

ஹரே கிருஷ்ணா என்பது வைணவர்களால் உச்சரிக்கப்படும் புனிதமாகக் கருதப்படும் ஓர் மந்திரம் ஆகும். இது பதினாறு வார்த்தைகளைக் கொண்டுள்ளது. கலி-சந்தரனா உபநிடதத்தில் இம்மந்திரம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மகா மந்திரம் எனவும் அழைப்பதுண்டு.[1][2]

மந்திரம் தொகு

ஹரா என்கின்ற வார்த்தை பகவானின் சக்தியை குறிப்பதாகும். கிருஷ்ண, ராம என்ற வார்த்தைகள் கடவுளையே குறிப்பதாகும். கிருஷ்ண, ராம என்பதன் பொருள் மிக உன்னத ஆனந்தம் என்பதாகும். ஹரா என்பது பகவானின் அதி உன்னத சக்தியை குறிக்கிறது. இது விளிவேற்றுமையால் ஹரே என்று மாற்றப்பட்டுள்ளது. பகவானின் இந்த அதி உன்னத ஆன்மீக சக்தியானது பகவானை அடைய நமக்கு உதவுகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரே_கிருஷ்ணா&oldid=3229908" இலிருந்து மீள்விக்கப்பட்டது