ஹல்க் (கதாப்பாத்திரம்)

ஹல்க் (பச்சை மனிதன்) (ஆங்கில மொழி: Hulk) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும்.

ஹல்க்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்ஸ்
முதல் தோன்றியதுஇன்கிரிடிபில் ஹல்க் #1 (மே 1962)
உருவாக்கப்பட்டதுஸ்டான் லீ
ஜாக் கிர்பி
கதை தகவல்கள்
முழுப் பெயர்தோர் ஒடின்சன்ராபர்ட் புரூஸ் பேனர்[1]
பிறப்பிடம்டேடன், ஓஹியோ
குழு இணைப்புஅவென்ஜர்ஸ்
பாதுகாவலர்கள்
பாந்தியன்
ரகசிய அவென்ஜர்ஸ்
போர்பவுண்ட்
S.M.A.S.H.
பென்டாஸ்டிக் போர்
திறன்கள்
  • புரூஸ் பேனராக:
    • அதி புத்திசாலி மற்றும் திறமையானவர்
  • ஹல்க்:
    • அடக்கமின்மை
    • மனிதநேய வலிமை மற்றும் ஆயுள்
    • அதிக கோபம்

இந்த கதாப்பாத்திரத்தை ஸ்டான் லீ, ஜாக் கிர்பி ஆகியோர் உருவாகினர். இன்கிரிடிபில் ஹல்க் 1 என்ற கதையில் இவன் அறிமுகமானான். இந்த படக்கதை முழுவதும், இவன் பெரிய உருவமும், பச்சை நிறமுள்ள மனிதனாகவும், அதீத பலம் மிகுந்தவனாகவும் காணப்படுகிறான். கோபப்படுகையில் அதிக ஆற்றல் பெறுகிறான். தனிமையில் வாழும் புருஸ் பன்னர் என்ற அறிவியலாளர் மன அழுத்தத்தின் காரணமாக ஹல்க் என்னும் இராட்சத மனிதனாக மாறுகிறார். ஹல்க்காக மாறியபின், தனது மெய் உருவமான பன்னரை வெறுக்கிறான். இந்தக் கதாப்பாத்திரத்தை நாயகனாகக் கொண்ட திரைப்படங்களும், அசைவூட்டத் தொடர்களும் வெளிவந்துள்ளன.[2]

இந்த கதாபாத்திரம் முதலில் எரிக் பானா நடித்த நேரடி சண்டை திரைப்படத்தில் தோன்றின. மார்வெல் திரைப் பிரபஞ்சம் இந்த பாத்திரத்தை எட்வர்டு நார்டன் மூலம் ஹல்க் 2, மார்க் ருஃப்பால்லோ மூலம் தி அவேஞ்சர்ஸ் (2012), அயன் மேன் 3 சிறப்பு தோற்றம் (2013), அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன் (2015), தோர்: ரக்னராக் (2017), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), கேப்டன் மார்வெல் சிறப்பு தோற்றம் (2019), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. Cronin, Brian (November 3, 2005). "Comic Book Urban Legends Revealed #23". Comic Book Resources. Archived from the original on April 27, 2015. [Stan] Lee began referring (for more than a couple of months) to the Incredible Hulk's alter ego as 'Bob Banner' rather than the 'Bruce Banner' that he was originally named. Responding to criticism of the goof, Stan Lee, in issue #28 of the Fantastic Four, laid out how he was going to handle the situation, 'There's only one thing to do-we're not going to take the cowardly way out. From now on his name is Robert Bruce Banner-so we can't go wrong no matter WHAT we call him!'
  2. DeFalco, Tom (2003). The Hulk: The Incredible Guide. London, United Kingdom: Dorling Kindersley. பக். 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7894-9260-9. https://archive.org/details/hulkincrediblegu0000defa/page/200. 

வெளியிணைப்புகள் தொகு

  • Hulk at the Marvel Universe wiki
  • Hulk at the Comic Book DB
  • Hulk குர்லியில்
  • Hulk
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹல்க்_(கதாப்பாத்திரம்)&oldid=3328298" இலிருந்து மீள்விக்கப்பட்டது