ஹவுஸ்புல் (திரைப்படம்)

ரா. பார்த்திபன் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஹவுஸ்புல் (Housefull) 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம். இது ரா. பார்த்திபன் இயக்கிய படம். இப்படத்தில் ரா. பார்த்திபன், விக்ரம், சுவலட்சுமி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாடல்களுக்கு இசையும் பின்னணி இசையும் இளையராஜாவால் அமைக்கப்பட்டுள்ளது[1]. இத்திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றுள்ளது[2].

ஹவுஸ்புல்
இயக்கம்ரா. பார்த்திபன்
இசைஇளையராஜா
நடிப்புரா. பார்த்திபன்
விக்ரம்
ரோஜா
சுவலட்சுமி
வடிவேலு
பசுபதி
வெளியீடுஜனவரி 15, 1999
மொழிதமிழ்

கதைச் சுருக்கம் தொகு

பார்த்திபன் ஒரு திரைப்பட அரங்கத்தின் சொந்தக்காரர் அய்யாவாக நடித்திருக்கிறார். ஒரு நாள் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் போது அரங்கினுள் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கும் செய்தி தெரியவருகிறது. காவல் அதிகாரிகள் படம் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் அறியாமலேயே வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்ய நினைக்கின்றனர். அரங்கினுள் படம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுள் ஒருவராக விக்ரமும் அரங்குக்கு வெளியே செய்தி அறிந்து தவிக்கும் அவரது காதலியாக சுவலட்சுமியும் நடித்திருக்கிறார்கள். அய்யாவின் முன்னாள் மனைவி (நடிகை ஜெயந்தி) காவல்துறையினரின் ஆலோசனைக்கு எதிராக அரங்கினுள் உள்ள மக்களை வெளியேற்றி விடும்படி அய்யாவிடம் மன்றாடுகிறாள். அய்யா ஒரு முடிவுக்கு வரும் தருணத்தில் சுவலட்சுமியால் விக்ரமுக்கு செய்தி தெரிய எல்லா மக்களுக்கும் தெரிந்து விடுகிறது. அரங்கத்திலிருந்து வெளியேற கதவை நோக்கி ஒரே தள்ளு-முள்ளு நெரிசல். இப்பிரச்சனை எவ்வாறு முடிவுக்கு வருகிறது என்பதுதான் கதையின் உச்சகட்டம். இப்படத்தில் ரோஜா பத்திரிக்கை நிருபராக வருகிறார்.

நடிகர்கள் தொகு

  • பார்த்திபன் அய்யாவாக
  • விக்ரம் ஹமீதாக
  • ரோஜா
  • சுவலட்சுமி
  • வடிவேலு
  • ஐஸ்வர்யா
  • பசுபதி வில்லனாக

மேற்கோள்கள் தொகு

  1. http://www.jointscene.com/movies/kollywood/House_Full/373
  2. "46th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on நவம்பர் 7, 2017. பார்க்கப்பட்ட நாள் March 12, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹவுஸ்புல்_(திரைப்படம்)&oldid=3715682" இலிருந்து மீள்விக்கப்பட்டது