ஹேமேந்திரநாத் தாகூர்

ஹேமேந்திரநாத் தாகூர் (Hemendranath Tagore) (1844-1884), இவர் தேபேந்திரநாத் தாகூரின் மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவர் 1844 ஆம் ஆண்டு திசம்பர் 21 ஆம் தேதி கொல்கத்தாவில் முதல் பிரம்மமத உடன்படிக்கையின்படி அசல் 21 பிரம்மர்களில் பிறந்த முதல் குழந்தையாகவும் முதல் பிரம்மமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு தீவிரமான தனிப்பட்ட நபரான, இவர் தனது பெரிய குடும்பத் தோட்டங்களுக்கு நிர்வாகியாக இருந்ததோடு மட்டுமல்லாமல், தனது இளைய சகோதரர்களின் கல்வியையும் மற்றும் கடுமையான ஒழுக்கநெறியையும் அளித்த கொண்டவர் என்றும் நன்கு அறியப்பட்டார்.

ஆதிதர்ம மதம் தொகு

பிரம்ம மதத்தை நிறுவிய தனது தந்தை தேபேந்திரநாத் தாகூருக்கு இவர் தொடர்ந்து ஆன்மீகத் துணையாக இருந்தார். இளைஞராக இருந்தபோதிலும், இவர் தனது தந்தைக்கும் தத்வபோதினி சபையின் மூத்தவர்களுக்கும் இடையில் மத்தியஸ்தராக செயல்பட்டார். 1865 ஆம் ஆண்டின் முதல் பிரம்மமதம் பிளவுபட்ட நேரத்தில், பிராமணரல்லாத தொழிலாளர்களை கொல்கத்தா பிரம்ம சமாஜத்திலிருந்து வெளியேற்றுவதற்கு இவர் பொறுப்பேற்றார். ஆதிதர்ம மதம் இவரது தத்துவத்தின் அடிப்படையில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டது. இன்று இந்தியாவில் மட்டும் 8 மில்லியனுக்கும் அதிகமான ஆதரவாளர்களைக் கொண்ட பிரம்ம மதத்திலிருந்து மிகப்பெரிய வளர்ச்சியாகும்.

ஆர்வம் தொகு

இவரது உடன்பிறப்புகளைப் போலவே இவருக்கு பல்வேறு துறைகளில் பரந்த ஆர்வம் இருந்தது. மேலும் இவர் ஒரு பல்துறை வல்லுநராகவும் இருந்தார். மேலும் 'குடும்பத்தின் விஞ்ஞானி' என்று கருதப்பட்டார். இவர் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் (இவரது தாத்தா துவாரகநாத் தாகூரால் நிறுவப்பட்டது) பயின்றார். மேலும் இயற்பியல் அறிவியல் பற்றிய கட்டுரைகளையும் எழுதினார். அதை இவர் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில் சேர்த்து வெளியிடத் திட்டமிட்டார். இவரது அகால மரணம் இந்த திட்டத்தைத் தடுத்தது.

1867 முதல் ஹேமந்திரநாத் தாகூர் தனது முதல் சோதனைகளை வானொலி அலைகள் மற்றும் மின்காந்தப் பரப்புகளில் நடத்தத் தொடங்கினார். 1872-73க்கு இடையில் இவர் தனது ஆராய்ச்சிகளின் முடிவுகள் குறித்து பல கட்டுரைகளை எழுதினார். இவை இராமேந்திர சுந்தர் திரிவேதி என்பவரால் படியெடுக்கப்பட்டன. 1874 ஆம் ஆண்டில் இயற்பியல் குறித்த முதல் அறிவார்ந்த ஆசிய படைப்பை பிராகிருதிக் விக்னனர் ஸ்தூலமர்மா என்ற தலைப்பில் தொகுத்தார். இது 1878-79 இல் புதுப்பிக்கப்பட்டது. இதில் உள்ள அறிவியலானது பிரச்சனை அளிக்கக்கூடியதாக இருந்ததால், இதன் சுழற்சி ஆதி பிரம்ம சமாஜத்தின் பிராமணர்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் ஆதி பிரம்ம சமாஜத்தின் பதிவுகளில் ஹேமேந்திரநாத் தாகூர் மற்றும் இவரது தாத்தா துவாரகநாத் தாகூர் ஆகியோரின் அனைத்து படைப்புகளும் அழிக்கப்பட்டன. [1]

மல்யுத்த வீரார் தொகு

ஒரு "புகழ்பெற்ற மல்யுத்த வீரரான" இவர் மல்யுத்த போட்டிகளில் தனது அசாதாரண உடல் வலிமைக்காக அறியப்பட்டார். [2] மேலும், யுடோ மற்றும் நிஞ்ஜாசு போன்ற தற்காப்புக் கலைகளில் இவரது நிபுணத்துவம் இருந்தது. நேரம் மற்றும் விண்வெளி மீது கட்டுப்பாட்டைக் கொண்ட மிக உயர்ந்த மட்டங்களில் பண்டைய ராஜ யோகத்தில் திறமையானவராகவும் இருந்தார்.

குடும்பம் தொகு

தனது மூன்று மகன்களைப் பணிபுரிய அனுப்பிய இவர் விதிவிலக்காக தனது மகள்களை கல்வி கற்க வற்புறுத்தினார். மேலும் அனைவருக்கும் முறையான கல்வியை வலியுறுத்தினார். அவர் அவர்களை பள்ளியில் சேர்த்தது மட்டுமல்லாமல், இசை, கலை மற்றும் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் போன்ற ஐரோப்பிய மொழிகளிலும் பயிற்சி அளித்தார். இவர் தனது முன்னோடி எண்ணங்களின் அடையாளமாக இருந்தார். இவர் தனது மகள்களுக்காக இந்தியாவின் பல்வேறு மாகாணங்களில் இருந்து தகுதியான மணமகன்களை தீவிரமாகத் தேடி, உத்தரப் பிரதேசம் மற்றும் அசாம் போன்ற தொலைதூர இடங்களில் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். ஒரு தீவிர நவீனத்துவவாதியான இவர் தாகூர் குடும்பத்தின் பெண்களுக்கு (குறிப்பாக தனது சகோதரிகள்) பல்வேறு நிதி அறக்கட்டளைகளை நிறுவினார். மேலும் போல்பூருக்கு அருகிலுள்ள சாந்திநிகேதன் தோட்டத்தில் குடியேற்றுவதற்கு பொறுப்பாக இருந்தார். பின்னர் இது விஸ்வ பாரதியாக உருவானது.

ஒரு நடைமுறையாளரும் மற்றும் விஞ்ஞான மனிதநேயவாதியுமான இவர் வங்காளத்திலுள்ள தனது தோட்ட விவசாயிகளால் மிகவும் நேசிக்கப்பட்டார்.

ஹேமேந்திரநாத் மற்றும் தத்வபோதினி தொகு

1843ஆம் ஆண்டில் கொல்கத்தா பிரம்ம சமாஜத்துடன் இணைந்த பின்னர் தத்வபோதினி சபையில் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. இதன் விளைவாக தத்வபோதினியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிராமணக் குழு ஒரு சீர்திருத்தவாத மையத்தை உருவாக்கியது. இது கொல்கத்தா பிரம்ம சமாஜத்திலிருந்து 1858 முதல் 1865 வரையிலான காலகட்டத்தில் தனித்து நின்று பின்னர் ஆதி தர்மமாக வெளிப்பட்டது. இந்த மையமானது ஆரம்பத்தில் ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் கீழ் இருந்தது. பின்னர் இதை 1859இல் ஹேமந்திரநாத்திடம் ஒப்படைத்தார். அதன்பிறகு 1860 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பிரம்ம அனுஸ்தானாக தனிப்பட்ட முறையில் விநியோகிக்கப்பட்ட பிரம்ம ஆதரவாளர்களுக்கான முறையான நடைமுறைகள், சடங்குகள் மற்றும் அனுசரிப்புகளில் ஆராய்ச்சிகளை ஏற்பாடு செய்தார். இந்த அனுஸ்தான் 1843 முதல் உடன்படிக்கையில் பிராமண குடும்பங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது. மேலும் இவரது இரண்டாவது சகோதரி சுகுமாரியின் திருமணத்திற்காக முதன்முதலில் 1861 சூலை 26 அன்று பகிரங்கமாக பயன்படுத்தப்பட்டது. புனிதமான பிராமண நூலை நிராகரிப்பதில் சம்பந்தப்பட்ட அனுஸ்தான் கணிசமான சர்ச்சையை உருவாக்கியது. பின்னர் பிராமணரல்லாதவர்களுக்கும் நூல் இல்லாத சில சிறிய மாற்றங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

குறிப்புகள் தொகு

  1. History of Adi Brahmo Samaj, vol 1, 1897
  2. "Gurudev Rabindranath Tagore - A Biography", Author Rekha Sigi. Page 15, ISBN 81-89182-90-0
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேமேந்திரநாத்_தாகூர்&oldid=3308683" இலிருந்து மீள்விக்கப்பட்டது