19-ஆம் நூற்றாண்டு

நூற்றாண்டு

பத்தொன்பதாம் நூற்றாண்டு (nineteenth century) அல்லது 19-ஆம் நூற்றாண்டு (19th century) கிரிகோரியன் நாட்காட்டிப்படி கிபி 1801 சனவரி 1-இல் தொடங்கி 1900 திசம்பர் 31-இல் முடிவடைந்தது. 19-ஆம் நூற்றாண்டு 2-ஆம் ஆயிரமாண்டின் ஒன்பதாவது நூற்றாண்டு ஆகும்.

ஆயிரமாண்டுகள்: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்: 18-ஆம் நூற்றாண்டு - 19-ஆம் நூற்றாண்டு - 20-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 1800கள் 1810கள் 1820கள் 1830கள் 1840கள்
1850கள் 1860கள் 1870கள் 1880கள் 1890கள்

19-ஆம் நூற்றாண்டு பரந்த சமூக எழுச்சியைக் கண்ட ஒரு காலப்பகுதி ஆகும். ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய கண்டங்களின் பெரும்பாலான நாடுகளில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. முதல் தொழிற்புரட்சி, 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கினாலும், இந்த நூற்றாண்டில் முதல் முறையாக அதன் பிரித்தானியத் தாயகத்திற்கு அப்பால் விரிவடைந்தது, குறிப்பாக ஐரோப்பாவின் கீழை நாடுகள், இரைன்லாந்து, வடக்கு இத்தாலி மற்றும் வடகிழக்கு ஐக்கிய ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களை மறுசீரமைத்தது. சில தசாப்தங்களுக்குப் பிறகு, இரண்டாவது தொழிற்புரட்சி மேலும் பெரிய நகரமயமாக்கலுக்கு வழிவகுத்தது, உற்பத்தித்திறன், பெறுதி, செழிப்பு ஆகியவை உயர் மட்டங்களுக்கு வளர்ந்தது, இது 20-ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது.

இசுலாமிய வெடிமருந்துப் பேரரசுகள் வீழ்ச்சியடைந்தன, ஐரோப்பிய பேரரசுவாதம் தெற்காசியா, தென்கிழக்காசியா, மற்றும் கிட்டத்தட்ட அனைத்து ஆப்பிரிக்காவையும் குடியேற்ற ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. பாரிய எசுப்பானிய, முகலாயப் பேரரசுகளின் சரிவும் இக்காலத்தில் இடம்பெற்றது. இது ஐக்கிய அமெரிக்காவுடன் சேர்ந்து பிரித்தானிய, பிரெஞ்சு, செருமனிய, உருசிய, இத்தாலிய, சப்பானியப் பேரரசுகளின் செல்வாக்கு பெருக வழிவகுத்தது. ஆங்கிலேயர்கள் 1815-இற்குப் பிறகு சவாலற்ற உலகளாவிய மேலாதிக்கத்தை அனுபவித்தனர்.

நெப்போலியப் போர்களில் பிரான்சின் தோல்விக்குப் பிறகு, பிரித்தானிய, உருசியப் பேரரசுகள் பெரிதும் விரிவடைந்து, உலகின் முன்னணி சக்திகளில் இரண்டாக மாறின. உருசியா தனது எல்லையை நடு ஆசியா, காக்கேசியா வரை விரிவுபடுத்தியது. உதுமானியர் மேற்கத்தியமயமாக்கல் மற்றும் டான்சிமாத் எனப்படும் சீர்திருத்தத்தின் ஒரு காலகட்டத்திற்கு உட்பட்டனர், இதன் மூலம் மத்திய கிழக்கில் முக்கிய பிரதேசங்களில் தங்கள் கட்டுப்பாட்டை பெருமளவில் அதிகரித்தனர். இருப்பினும், உதுமானியப் பேரரசு வீழ்ச்சியடைந்து, பால்கன் குடா, வடக்கு ஆப்பிரிக்கா ஆகியவற்றை இழந்து, ஐரோப்பாவின் நோய்வாய்ப்பட்ட நாடாக அறியப்பட்டது.

மராத்திய, சீக்கியப் பேரரசுகள் போன்ற இந்தியத் துணைக்கண்டத்தில் எஞ்சியிருந்த சக்திகள் பாரிய சரிவை சந்தித்தன, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சியில் அவர்களின் அதிருப்தி 1857 இந்தியக் கிளர்ச்சிக்கு வழிவகுத்தது. இதனால் இந்நிறுவனம் கலைக்கப்பட்டு, இந்தியா பின்னர் நேரடியாக பிரித்தானிய முடியரசால் ஆளப்பட்டது.

பிரித்தானியாவின் வெளிநாட்டு உடைமைகள் குறிப்பாக கனடா, ஆத்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகியவற்றில் 19-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியிலும், ஆப்பிரிக்காவில் நூற்றாண்டின் கடைசி இரண்டு தசாப்தங்களிலும் பரந்த பிரதேசங்களின் விரிவாக்கத்துடன் வேகமாக வளர்ந்தன. நூற்றாண்டின் இறுதியில், ஆங்கிலேயர்கள் உலகின் ஐந்தில் ஒரு பகுதியையும், உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். நெப்போலியனுக்குப் பிந்தைய காலத்தில், மிகப்பெரிய அளவில் முன்னோடியில்லாத உலகமயமாக்கலை ஏற்படுத்தியது.

பெரிய பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணி

வரலாற்றுக் காலப் பகுதிகள் தொகு

 
1897 இல் உலக வரைபடம். பிரித்தானியப் பேரரசு (இளஞ்சிவப்பு)

போர்கள் தொகு

 
1848 ஆம் ஆண்டுப் புரட்சிகள்
 
தைப்பிங் கிளர்ச்சியின் ஒரு காட்சி.

ஏனைய போர்கள் தொகு

 
அமெரிக்க உள்நாட்டுப் போரில் 30% தெற்கத்தைய வெள்ளையின ஆண்கள் உயிரிழந்தனர்.[1]

அறிவியலும் தொழில்நுட்பமும் தொகு

19 ஆம் நூற்றாண்டில் அறிவியலின் பிறப்பு ஒரு தொழிலாக உருவானது; scientist என்ற சொல்லை ("அறிவியலாளர்", "விஞ்ஞானி") 1833 இல் வில்லியம் ஹியூவெல் அறிமுகப்படுத்தினார்.[2]

 
மைக்கேல் பரடே (1791–1867)
 
சார்லசு டார்வின்

மருத்துவம் தொகு

விளையாட்டு தொகு

முக்கிய நிகழ்வுகள் தொகு

 
1897-இல் உலக அரசியல் வரைபடம். 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலப் பேரரசே பேராற்றல் பெற்றிருந்தது.

மேற்கோள்கள் தொகு

  1. "Killing ground: photographs of the Civil War and the changing American landscape பரணிடப்பட்டது 2017-02-28 at the வந்தவழி இயந்திரம்". John Huddleston (2002). Johns Hopkins University Press. ISBN 0-8018-6773-8
  2. Snyder, Laura J. (2000-12-23). William Whewell. Stanford University. http://www.science.uva.nl/~seop/entries/whewell/. பார்த்த நாள்: 2008-03-03. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=19-ஆம்_நூற்றாண்டு&oldid=3721483" இலிருந்து மீள்விக்கப்பட்டது