1920 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

1920 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (1920 Summer Olympics, பிரெஞ்சு மொழி: Les Jeux olympiques d'été de 1920), அலுவல்முறையாக ஏழாம் ஒலிம்பியாடின் விளையாட்டுப் போட்டிகள், 1920ஆம் ஆண்டு பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பில் நடைபெற்ற பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.[1] மார்ச் 1912இல் நடந்த பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் 13வது அமர்வில் இதற்கான ஆட்டக்கேள்வியை பெல்ஜியம் முன்வைத்தது. அப்போது நடத்தும் நாடு எதுவென முடிவாகவில்லை.

செருமானியத் தலைநகர் பெர்லினில் நடைபெறுவதாகவிருந்த 1916 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் போர் காரணமாக இரத்து செய்யப்பட்டது. போருக்குப் பின்னர் 1919இல் ஏற்பட்ட பாரிசு அமைதி ஒப்பந்தம் ஒலிம்பிக் விளையாட்டுக்களை வெகுவாக பாதித்தது; புதிய நாடுகள் உருவாகின, தோற்ற நாடுகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. அங்கேரிய முடியாட்சி, செருமனியின் வீமர் குடியரசு, ஆத்திரியா, பல்கேரியா, உதுமானியப் பேரரசு ஆகிய நாடுகள் இந்தப் போரைத் துவக்கியதாக இந்த விளையாட்டுக்களில் பங்கேற்க தடை செய்யப்பட்டனர். செருமனி 1925 வரை தடை செய்யப்பட்டிருந்தது.

இந்த ஒலிம்பிக் நடத்தும் நாட்டிற்கும் பங்கேற்பாளர்களுக்கும் மிகுந்த நிதி நெருக்கடியை உருவாக்கியது. விளையாட்டுகளில் பெருவாரியாக போட்டியாளர்கள் பங்கேற்கவில்லை.[2]

பங்கேற்ற நாடுகள் தொகு

 
1920 ஒலிம்பிக்கில் பங்கேற்ற நாடுகள், முதல்முறை பங்கேற்ற நாடுகள் நீல வண்ணத்தில்.
 
போட்டியாளர்களின் எண்ணிக்கை

ஆண்ட்வெர்ப் ஒலிம்பிக்கில் மொத்தம் 29 நாடுகள் பங்கேற்றன. இது 1912ஆம் ஆண்டு பங்கேற்ற நாடுகளை விட ஒன்று கூடுதலாகும். முதலாம் உலகப் போரில் தோல்வியுற்ற செருமனி, ஆஸ்திரியா, அங்கேரி, பல்காரியா, துருக்கி ஆகிய நாடுகள் அழைக்கப்படவில்லை. புதியதாக உருவான ஐரோப்பிய நாடுகளில் எசுத்தோனியா மட்டுமே பங்கேற்றது; பொகீமியாவிலிருந்து உருவான செக்கோசிலோவாக்கியாவும் பங்கேற்றது; இது உலகப் போருக்கு முன்னர் ஆத்திரியாவின் அங்கமாக இருந்தது. போலந்து சோவியத் ஒன்றியத்துடனான போரில் மும்மரமாக இருந்ததால் பங்கேற்கவில்லை. அரசியல் தடைகள் காரணமாக சோவியத் உருசியாவும் அழைக்கப்படவில்லை. அர்கெந்தீனா, செர்புகள்,குரோசியர் இசுலோவன்களின் முடியாட்சி, பிரேசில், மொனாக்கோ முதல்முறையாக பங்கேற்றன. 1908இலும் 1912இலும் ஆத்திரேலியாவுடன் இணைந்த அணியாக இருந்த நியூசிலாந்து இந்த போட்டிகளில் முதன்முறையாக தனது அடையாளத்துடன் போட்டியிட்டது.

  • 1929க்கு முன்னர் யுகோசுலேவியாவின் அலுவல்முறையான பெயர் செர்புகள்,குரோசியர் இசுலோவன்களின் முடியாட்சியாக இருந்தது.
  • நியூ பவுண்ட்லாந்து டொமினியனிலிருந்து ஒரு போட்டியாளர், எரிக் இராபர்சன் பங்கேற்றார். ஆனால் இந்த டொமினியனுக்கு எந்தவொரு அலுவல்முறையான ஒலிம்பிக் குழுவும் இல்லாததால் இவரது தேசியம் உறுதி செய்யப்படவில்லை; ஐக்கிய இராச்சியத்தின் சார்பாளராக பங்கேற்றார்.[3]

பதக்க எண்ணிக்கை தொகு

 
ஏழாம் ஒலிம்பியாடில் வழங்கப்பட்ட 154 தங்கப் பதக்கங்களில் ஒன்று

1920 ஒலிம்பிக்கில் மிகுந்த பதக்கங்கள் பெற்ற முதல் பத்து நாடுகள்:

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   ஐக்கிய அமெரிக்கா 41 27 27 95
2   சுவீடன் 19 20 25 64
3   ஐக்கிய இராச்சியம் 15 15 13 43
4   பின்லாந்து 15 10 9 34
5   பெல்ஜியம் (host nation) 14 11 11 36
6   நோர்வே 13 9 9 31
7   இத்தாலி 13 5 5 23
8   பிரான்சு 9 19 13 41
9   நெதர்லாந்து 4 2 5 11
10   டென்மார்க் 3 9 1 13

மேற்சான்றுகள் தொகு

  1. Sports Reference.com (SR/Olympics), "1920 Antwerpen Summer Games" பரணிடப்பட்டது 2008-08-20 at the வந்தவழி இயந்திரம்; retrieved 2012-7-23.
  2. Zarnowski, C. Frank. "A Look at Olympic Costs," பரணிடப்பட்டது 2018-12-25 at the வந்தவழி இயந்திரம் Citius, Altius, Fortius (US). Summer 1992, Vol. 1, Issue 1, p. 20-21 [5-6 of 17 PDF]; retrieved 2012-7-24.
  3. Dohey, Larry. "Newfoundlanders and Olympic Connections". Archivalmoments.ca. பார்க்கப்பட்ட நாள் 7 January 2015.

வெளி இணைப்புகள் தொகு

முன்னர்
பெர்லின் (கைவிடப்பட்டது)
Summer Olympic Games
ஆண்ட்வெர்ப்

ஏழாம் ஒலிம்பியாடு (1920)
பின்னர்
பாரிசு