1999 (திரைப்படம்)

லெனின் எம்.சிவம் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

1999 கனடாவில் வெளியாகிய தமிழ்த்திரைப்படம் ஆகும். இது 2009 ஆண்டு செப்டெம்பர் 30 இலிருந்து ஒக்டோபர் 15 வரை வான்கூவர் நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட முதலாவது புலம்பெயர் தமிழர்களின் திரைப்படம் ஆகும். இவ்விழாவில் மொத்தம் 600 திரைப்படங்கள் காண்பிக்கப்பட்டன. அவற்றில் அடங்கிய 19 கனேடிய திரைப்படங்களில் இத்திரைப்படம் மட்டுமே தமிழ்த்திரைப்படமாகும்.

1999
இயக்கம்லெனின் எம். சிவம்
தயாரிப்புசபேசன் ஜெயராயசிங்கம், ஜெயா சுப்பிறமணியம்
கதைலெனின் எம். சிவம்
திரைக்கதைலெனின் எம். சிவம்
இசைராஜ் தில்லையம்பலம்
நடிப்புகே. எஸ். பாலச்சந்திரன், சுதன் மகாலிங்கம், திலிபன் சோமசேகரம், காண்டி கனா, அம்பலவானர் கேதிஸ்வரன்,
ஒளிப்பதிவுசபேசன் ஜெயராயசிங்கம்
கலையகம்கற்பனாலயா புரடக்சன், பகவான் புரடக்சன்
விநியோகம்கற்பனாலயா புரடக்சன்
வெளியீடுஅக்டோபர் 14, 2009 (கனடா)
ஓட்டம்101 min.
நாடுகனடா
மொழிதமிழ்

இத்திரைப்படத்தை இனியவர்கள் திரைப்படத்தை இயக்கிய லெனின் எம். சிவம் எழுதி இயக்கியிருகிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பை சபேசன் ஜெயராஜசிங்கம் செய்திருக்கிறார்.

இதில் சுதன் மகாலிங்கம், லக்ஷி, திலீபன், காண்டி கணா, கேதீஸ்வ்ரன், மடோனா, கே. எஸ். பாலச்சந்திரன் ஆகிய பலர் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்தின் இசையை இலங்கையைச் சேர்ந்த ராஜ்குமார் தில்லையம்பலம் வழங்கியிருக்கிறார். இத்திரைப்படத்தின் படத்தொகுப்பை ஏ.அருள்சங்கர் செய்திருக்கிறார்.

விருதுகள் தொகு

  • சிறந்த திரைப்படமாக பார்வையாளர்கள் தெரிவு, ரீல்வேல்ர்டு திரைப்பட விழா விருது, 2010.[1].
  • சிறந்த திரைப்படத்திற்கான மிட்நைட் சன் விருது, ஓசுலோ தமிழ்த் திரைப்படவிழா, பிபிரவரி, 2010.[2]
  • சிறந்த முதல் 10 திரைப்படங்களில் ஒன்றாகத் தேர்வு, வான்கூவர் பன்னாட்டுத் திரைப்படவிழா, அக்டோபர் 2009
  • உத்தியோகபூர்வ தெரிவு, டொரண்டோ தமிழ் ஆய்வு மாநாடு, மே-2010
  • சிறந்த திரைப்படம், Best Feature Film Award, Toronto Independent Art Film Society (IAFS) in June, 2010
  • உத்தியோகபூர்வ தெரிவு, Official Selection, University of Toronto Cinema Studies Student Union (CINSSU) in March, 2010
  • உத்தியோகபூர்வ தெரிவு, York University Centre for Asian Research (YCAR) in September, 2010
  • உத்தியோகபூர்வ தெரிவு, Official Selection, Toronto 2010 Moving Image Film Festival (MIFF) in October, 2010
  • உத்தியோகபூர்வ தெரிவு, Official Selection, Swiss South Indian Film Festival (SSIFF) in October, 2010
  • உத்தியோகபூர்வ தெரிவு, Official Selection, Ilankai Thamil Sangam (ITS) in November, 2010
  • உத்தியோகபூர்வ தெரிவு, Official Selection, Canadian Tamil Film Festival (CTFF) in January, 2011
  • உத்தியோகபூர்வ தெரிவு, Official Selection, London Happy Soul Festival (LHSF) in June, 2011
  • சிறந்த திரைப்படம், Best Feature Film Award, Chennai Ulagayutha International Tamil Film Festival (CUITFF) in July, 2011

பின்னணி தொகு

ஐழப்போர்க்காலங்களில் பிலம்பெயர்ந்த தமிழர்களினது வாழ்வை இத்திரைப்படம் சிதரிக்கின்றது. இத்திஒரைப்படத்தின் பின்னணியாக ஈழப்போர்ச்சூழல் திகழ்கின்றது.

கதைச்சுருக்கம் தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

1999 கனடாவில் வசிக்கும் மூன்று இலங்கைத் தமிழ் இளைஞர்கள் பற்றிய கதை. குமார் (திலிபன் சோமசேகரம்) ரொரன்ரோவின் ஈஸ்ட் சைட்டில் ஒரு குழுமத் தலைவன். பெற்றோரை இந்திய ராணுவத்திடம் கண்முன்னே பலி கொடுத்தவன். தம்பியையும் இழுத்துக்கொண்டு 18 வயதில் கனடா வந்தவன். அவனது தம்பி ஜீவனை (ஜெரோன் தனபாலசிங்கம்) அடித்த வெஸ்ட் சைட் குழுமத் தலைவன் 'மரநாய்' என்பவனைப் பகைத்துத் தானும் ஒரு குழுமத் தலைவனாக மாறியவன். குமாருக்கும், மரநாய்க்கும் பெரியவர்கள் சமாதானம் செய்து வைத்திருந்த 1999ம் வருடத்தின் பிற்பகுதியில் இந்த வன்முறைகளைவிட்டு ஒரு 'கஷ்டப்பட்ட பிள்ளை'யைத் திருமணம் செய்து குழந்தை குட்டியுடன் குடும்பமாக வாழும் வாழ்க்கைக்கு ஏங்குபவன்.

அன்பு (சுதன் மகாலிங்கம்) தகப்பனுடன் வசித்து வருபவன். தகப்பன் சுந்தரத்துக்கு (அம்பலவாணர் கேதீஸ்வரன்) இரண்டு வேலைகள். ஒன்று முழுநேர உழைப்பு. மற்றது அன்புவுடன் சண்டை போடுவது. அன்புவும் சரியாகப் படிக்காமல் சுற்றிக்கொண்டிருப்பவன். அவன் குமாருடைய குழுவில் சேர்ந்து 5 வருடங்களாகியும், தகப்பனுக்கு இப்போதுதான் அரசல் புரசலாகத் தெரியவருகிறது. அன்பு அம்மாவை ஈழப் பிரச்சினைகளில் பறிகொடுத்தவன். குமார் அண்ணாவுக்காக எதையும் செய்யத் தயாராயிருப்பவன். அன்பு இந்தக் குழுமங்களைவிட்டு விலகி நல்ல முறையில் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்பது அவனது தகப்பனின் ஆசை.

அகிலன் (காண்டி கனா) ஒரு தீவிரமான மாணவன். வோட்டர்லூவில் படிக்கும் இவன் வார இறுதிகளில் தாத்தாவை (கே.எஸ்.பாலச்சந்திரன்) ஸ்கார்பரோ வந்து சந்திப்பதுண்டு. அதே வார இறுதிகளில் வன்னியில் தாய் தகப்பன் இல்லாத பிள்ளைகளைப் பராமரிக்க வீடுவீடாகப் போய் நிதி திரட்டுவது இவன் வேலை. 2001ம் ஆண்டுக்கு முன் 200 பிள்ளைகளைத் தத்தெடுப்பது இவனது இலக்கு. இப்போது இவன் பொறுப்பில் 30 பிள்ளைகள். இவனும் பெற்றோரைப் போரிடம் பறிகொடுத்தவன்.

அன்புவும் அகிலனும் பாடசாலைக்காலத் தோழர்கள். இப்போது கொஞ்சம் விலகியிருக்கிறார்கள். இருவரும் பழகுவது தாமரையிலைத் தண்ணீராக. இவர்கள் இருவரும் ஒருதலையாக பாடசாலைக்கால ஏஞ்சல் கீதாவை (லக்ஷ்சி) காதலிக்கிறார்கள். அவளது பிறந்தநாளன்று காதலைச் சொல்ல இருவருமே திட்டமிட்டிருக்கிறார்கள். இருவருக்கும் மற்றவரும் கீதாவைக் காதலிப்பது தெரிந்திருக்கிறது. கீதா யாரை விரும்பினாலும் மற்றவர் ஒதுங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்.

குமாருக்கு அவன் நினைத்த வாழ்வு கிடைத்ததா? அன்பு திருந்தி தந்தையின் விருப்பப்படி வாழ்ந்தானா? அகிலனது இலட்சியங்கள் நிறைவேறியதா? அன்புவும் அகிலனும் கீதாவிடம் காதல் சொன்னார்களா? கீதா யாரை விரும்பினாள்? இது போன்ற கேள்விகளுக்கு திரையில் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

நடிகர்கள் தொகு

  • அன்புவாக சுதன் மகாலிங்கம்
  • குமாராக திலிபன் சோமசேகரம்
  • அகிலனாக காண்டி கனா
  • சுந்தரமாக அம்பலவானர் கேதிஸ்வரன்
  • தாத்தாவாக கே. எஸ். பாலச்சந்திரன்
  • கீத்தாவாக லக்ஸி
  • உடும்பனாக மடோனா அல்போன்ஸ்
  • மதனாக வின்ஸ் ஜெறாட்
  • மொட்டயனாக தேவா கஸ்பெசன்
  • கண்ணனாக கோபிராஜ் திருச்செல்வம்
  • நந்தனாக அஜித் நாகராயா
  • ஜீவனாக ஜெறோன் தனபாலசிங்கம்
  • ஆவியாக சுதா சான்
  • சத்தியாக அனோயன் தவராயா
  • முறலியாக மனோஜ் ராயனன்
  • சூனனாக சதீஸ் ஏகாம்பரம்
  • மரனாயின் தம்பியாக விஷ்னுமதன் வில்வராயா
  • சுகந்தனாக தவக்குமார் கேதரநாதன்
  • கிருபனாக லதீபன் தர்மநாதன்
  • செல்வி அக்காவாக பத்மினி ராயனன்
  • வாடகை வண்டி ஓட்டுனராக சுகுணதாஸ் மகேந்திரறாயா

சக கலைஞர்கள் தொகு

  • திரைக் கதை, இயக்கம்: லெனின் எம். சிவம்
  • தயாரிப்பு: சபேசன் ஜெயராயசிங்கம்
  • இசை: ராஜ் தில்லையம்பலம்
  • கமரா: சபேசன் ஜெயராயசிங்கம்
  • பட தொகுப்பு: அருள்ஷங்கர்
  • தயாரிப்பு மேற்பார்வையாளர்: ரமேஸ் செல்லத்துரை
  • உதவி இயக்குணர்கள்: வின்ஸ் ஜெறாட், சுதா சான்
  • ஒலியாக்கம்: மைக்கல் மோகனறூபன்
  • தொடக்க பாட்டு: Lyrically Strapped
  • இணை தயாரிப்பாளர்கள்: ஜெயகுமார் சுப்பிரமணியம், காண்டி கானா, மாலினி பொன்னம்பலம்
  • உதவி இசையம்பாளர்: புனிதகுமார்
  • நடனம்: LLS Entertainment
  • கலை: பாலேஸ் கந்தையா
  • பாடல் ஒலியாக்கம்: மைக்கல் மோகனறூபன், ராகேஸ் (சென்னை)
  • உடை: யான்சி நந்தகுமார், நிவேதா குணறட்னம்
  • அலங்காரம்: வான்மதி மதியாபரணம், சூரியகுமாரி மயில்வாகனம்
  • சண்டைப்பயிற்சி: முகுந்தன் மதியாபரணம்
சக கலைஞர்கள் (இசை) தொகு
  • புல்லாங்குழல்: பிரியந்தா
  • கிற்ரார்: மகிந்தா பாண்டார
  • பேஸ்: மொகனறுபன், செலுக்கா
  • வயலின்: DD குணசேனா
  • மற்றய வாத்தியங்கள்: ரத்னம் ரத்னதுரை, புனிதகுமார்

பாடல்கள் தொகு

திரு. ராஜ் தில்லையம்பலத்தால் இசையமைக்கப்பட்டது..

1999
soundtrack
வெளியீடு2009
இசைப் பாணிFeature film soundtrack
இசைத் தயாரிப்பாளர்லெனின் எம். சிவம்
Track # பாடல் பாடகர்கள் கவிஞர்
1 "மொழி" எஸ். பி. பாலசுப்பிரமணியம் சுதர்ஷன்
2 "ஏஞ்சல்" கார்த்திக் / Lyrically Strapped ராஜ் தில்லையம்பலம்
3 "மலரே" திப்பு / ஹரிணி சுதர்ஷன்
4 "Struggle" Lyrically Strapped Lyrically Strapped
5 "நெஞ்சத்தை" திப்பு / பிரசாந்தி ராஜ் தில்லையம்பலம்
6 Angel Remix Lyrically Strapped Lyrically Strapped
7 1999 Theme Instrumental Instrumental

செவ்விகள் தொகு

விமர்சனங்கள் தொகு

உரையாடல்கள் தொகு

இணைப்புக்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Congratulations to our 2010 ReelWorld Film Festival Award Recipients!". reelworldfilmfestival. 2010-04-21. பார்க்கப்பட்ட நாள் 26 April 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Shankar, Settu (2010-02-15). "Canadian Tamil film 1999 won in Norway festival". OneIndia. Archived from the original on 2012-07-13. பார்க்கப்பட்ட நாள் 29 March 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1999_(திரைப்படம்)&oldid=3792430" இலிருந்து மீள்விக்கப்பட்டது