2014 வட ஈராக் தாக்குதல்

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-10 ஆம் தியதிகளில் ஈராக்கின் மோசுல் நகரம் அல் காயிதாவுடன் தொடர்புடைய இராக்கிலும் சாமிலும் இஸ்லாமிய அரசு இசுலாமியக் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.[15] 1.300 ஐ.எஸ்.ஐ.எஸ் (Islamic State in Iraq and the Levant ) கிளர்ச்சியாளர்கள் ஒரு வார காலமாக நினேவே (Nineveh) மாகாணத்தை முற்றிகையிட்டு கைப்பற்றியுள்ளனர். மோசுல் விமான நிலையத்தையும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.[16] இத்தாக்குதலைத் தொடர்ந்து தோரயமாக 5,00,000 குடும்பங்கள் மோசுல் நகரிலிருந்து இடம் பெயர்ந்துவிட்டனர்.[17] ஈராக்கின் பிரதம அமைச்சர் நெளரி அல்-மாலிக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். மோசுல் முழுவதுமாக ஜூன் 10 ஆம் தியதி அன்று கிளர்ச்சியாளர்கள் வசம் சென்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.[18] அடுத்த நாள் ஈராக்கின் திக்ரித் நகரைக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். மேலும் அரசு அலுவலகங்களுக்குத் தீ வைத்து நூற்றுக் கணக்கான கைதிகளை சிறைச்சாலையிலிருந்து விடுவித்தனர்.

2014 வட ஈராக் தாக்குதல்
ஐக்கிய அமெரிக்க விலகலைத் தொடர்ந்த ஈராக்கிய கிளர்ச்சியும் சிரிய உள்நாட்டுப் போரின் தாக்கமும் பகுதி

ஈராக்கில் நினேவே மாநிலத்தின் அமைவிடம்.
நாள் 5 ஜூன் 2014 முதல் – இன்று வரை
இடம் ஈராக்கின் மோசுலில் துவக்கம்
பின்னர் நினேவே, கிர்குக், சலாதீன் மாநிலங்களின் பிற பகுதிகளுக்குப் பரவல்
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
  • ஐ.எஸ்.ஐ.எல் மோசுலைக் கைப்பற்றுதல்[1][2][3] பின்னர் திக்ருத்தைக் கைப்பற்றுதல் [4]
  • கிளர்ச்சியாளர்கள் பெரும்பான்மையான நினேவே அரசாட்சியைக் கைப்பற்றுவதுடன் கிர்குக் அரசாட்சியின் ஐந்து மண்டலங்களையும் சலாதீன் அரசாட்சியின் இரண்டு மண்டலங்களையும் ஆக்கிரமித்தல்.[5][6][7]
  • குர்திசுத்தான் கிர்குக் நகரை ஈராக்கிடமிருந்து கைப்பற்றுதல்
பிரிவினர்
ஈராக் அரசு
  • இராணுவப்படைகள்
  • கண்காணிப்புப் பிரிவு
  • தனியார் இராணுவம்

 ஈராக்கிய குர்திஸ்தான்

  • பெஸ்மெர்கா (Peshmerga)[8]

 ஈரான்

  • சிறப்புப் படைகள்[9]
அல் காயிதாவுடன் தொடர்புடைய கிளர்ச்சியாளர்கள் (இராக்கிலும் சாமிலும் இஸ்லாமிய அரசு)
பலம்
25,000[10]-30,000[11] (இரு இராணுவப் பிரிவுகள்)[10]
10,000 சிறப்புக் காவலர்கள்[10]
30,000 உள்ளூர் காவலர்கள்[10]
150 ஈரானியர்கள்[12]
800[11] அல்லது 2,000-3,000[10]
இழப்புகள்
15 பாதுகாப்புப் படைவீரர்கள் தெரியவில்லை
200 கொல்லப்பட்டனர் (மோசுல் நகரில் மட்டும்)[13]

280,000+ பொதுமக்கள் மோசுலிலிருந்து இடம் பெயர்ந்துள்ளனர்[14]

பின்புலம் தொகு

2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அரசுப் பாதுகாப்புப் படையினருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் (Islamic State in Iraq and Syria) கிளர்ச்சியாளர்களுக்குமிடையே சண்டை நடைபெற்று வருகிறது. இத்தாக்குதல்களானது ஈராக்கின் மேற்குப் பகுதியெங்கும் பரவியது. 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐ.எஸ்.ஐ.எஸ் (Islamic State in Iraq and the Levant ) கிளர்ச்சியாளர்கள் பல்லுஜா (Fallujah) மற்றும் ரமாடி (Ramadi) நகரங்களைக் கைப்பற்றினர்.[19] இதனால் அன்பார் (Anbar) மாகாணத்தின் பெரும்பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது. இதைத் தொடர்ந்து ஈராக்கிய ராணுவம் இப்பகுதியில் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் சமாரா (Samarra) நகரை ஜூன் ஐந்தாம் தியதி இராணுவம் மீண்டும் கைப்பற்றியது.[20] ஆனால் 'ஐ.எஸ்.ஐ.எஸ் (Islamic State in Iraq and the Levant ) கிளர்ச்சியாளர்களுக்கான ஆயுத உதவிகள் பக்கத்து நாடான சிரியாவிலிருந்து கிடைப்பதால்[21] கிளர்ச்சியாளர்கள் தீவிரமாக நிலை கொண்டுள்ளனர்.

ஜூன் மாதத் தொடக்கத்தில் கிளர்ச்சியாளர்கள் ஈராக்கின் மத்திய மற்றும் வடக்குப் பகுதியில் முன்னேறினர். இதைத் தொடர்ந்து அவர்கள் பல்லுஜா (Fallujah ), ஹார்மா (Garmah), ஹடித்தா ( Haditha), ஜுர்ஃப் அல் சாஹர் (Jurf Al Sakhar), அனா (Anah), க்வேய்ம் (Qa'im), அபு கிரகேப் (Abu Ghraib) மற்றும் அன்பார் பிரதேசத்தின் பல பகுதிகளை அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.[22]

யுத்த நிகழ்வுகள் தொகு

மோசுல் வீழ்ச்சியும் கிர்குக் முன்னேற்றமும் தொகு

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தியதி சுன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் மோசுல் நகரைத் தாக்கினர். இரவு முழுவதும் நடந்த இத்தாக்குதலுக்குப் பின்னர். ஈராக்கின் ராணுவப்படையினர் தப்பி ஓடினர். எனவே ஜூன் 10 ஆம் தியதி இந்நகரம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.[23] இதைத்தொடர்ந்து அமெரிக்கா இராணுவத்தின் முக்கிய மையமாக விளங்கிய மோசுல் சர்வதேச விமான நிலையமும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இங்கிருந்த விமானங்களும் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டன. மேலும் 2,400 குற்றைவாளிகளை சிறையிலிருந்தும் காவல் நிலையத்திலிருந்தும் விடுவித்ததாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர்.[24]

பின்னர் மாலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் (Islamic State in Iraq and the Levant ) கிளர்ச்சியாளர்கள் மோசுல் நகரின் கிழக்கேயுள்ள ஹாவிஜா (Hawijah), ஸாப் (Zab), ரியாத் (Riyadh) மற்றும் அப்பாஸி (Abbasi) பகுதிகளையும், மோசுல் நகரின் மேற்கே கிர்குக் (Kirkuk) நகரையும், மோசுலின் தெற்கேயுள்ள ரஷாத் (Rashad) மற்றும் யாங்கஜா (Yankaja) நகரையும் இராணுவத்தினரின் பின்வாங்கலுக்கும் பின் கைப்பற்றினர்[25]. அடுத்த நாள் ஐ.எஸ்.ஐ.எஸ் (Islamic State in Iraq and the Levant ) கிளர்ச்சியாளர்கள் 15 பாதுகாப்புப் பிரிவினரை இப்பகுதியில் நிறுத்தியுள்ளனர்.[15]

சலாதீனைக் கைப்பற்றல் தொகு

ஜூன் 11 அன்று கிளர்ச்சியாளர்கள் எண்ணெய்ச் சுத்திகரிப்பு நகரான பாய்ஜியைக் (Baiji) கைப்பற்றினர். அங்கு காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்தைத் தீ வைத்தனர். 60 வாகனங்களில் சென்ற கிளர்ச்சியாளர்கள் குழுவானது பாய்ஜி நகரிலுள்ள சிறைச்சாலையிலுள்ள சிறைக் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்தனர். மேலும் 250 உள்ளூர் கிளர்ச்சித் தலைவர்களை எண்ணெய் நிறுவனத்தின் 250 காவலர்களுடன் பேச அனுப்பி, அந்நிறுவனத்தைக் கிளர்ச்சியாளர்களிடம் கையளிக்குமாறு கேட்டுக் கொண்டதாக உள்ளூர்வாசிகள் ஊடகவியலாளர்களிடம் சொன்னார்கள். மேலும் இராணுவ வீரர்களையும், காவலர்களைவும் விரைவில் வெளியேறுமாறு கிளர்ச்சியாளர்கள் எச்சரித்தனர்.[26][27] கிளர்ச்சியாளர்களின் மிரட்டலுக்காக பாய்ஜி நகரைவிட்டு அரசுப் படைகள் தப்பி ஓடிவிட்டது[28] அல்லது ஈராக் இராணுவத்தின் நான்காவது படைப்பிரிவிற்கு வலுவூட்டுவதற்காக சென்றுவிட்டனர் என அல்-ஜஜீரா தொலைக்காட்சி தெரிவித்தது.[29]

கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதலைத் தொடர்ந்து ஜூன் 11 ஆம் தியதி மாலை திக்ரித் நகர் முழுவதையும் கிளர்ச்சியாளர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். இது ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊர் ஆகும். மேலும் கடந்த இரு நாட்களில் கைப்பற்றப்பட்ட இரண்டாவது மாகாணத் தலைநகர் ஆகும். உள்ளூர் அதிகாரிகளின் தகவலின் படி நகரைச் சுற்றிலும் தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் மேலும் தீவிரவாதச் செயல்களைச் செய்த 300 குற்றவாளிகள் சிறைச்சாலையிலிருந்து கிளர்ச்சியாளர்களால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.[29][30][31] இரண்டு காவல் நிலையங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன மேலும் இராணுவ கேந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.[32] கிளர்ச்சியாளர்கள் சமர்ரா (Samarra) நகரை அடைந்து நகரின் வடமேற்குப் பகுதியிலுள்ள அரசப் படைகளுடன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.[28]

அதே நேரத்தில் ஈராக்கிய அரசாங்கள் இந்த நடவடிக்கைகளை, திட்டமிட்ட பேரழிவு (strategic disaster) என வர்ணித்துள்ளனர்.[28]

அமெரிக்காவின் உதவி தொகு

ஈராக் அதிபர் ஐ.நா உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.[33] அதே சமயம் அமெரிக்காவும் இசிஸின் கட்டுப்பாட்டிலுள்ள நகரங்களை மீட்க ஈராக்கிற்கு உதவத் தயார் என அறிவித்தது.[34] மேலும் தனது விமானம் தாங்கிக் கப்பல் ஒன்றை வளைகுடாப் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது.[35] ஈராக்கின் தற்போதைய நிலைமை குறித்த தகவல்களை அவ்வப்போது, அமெரிக்கா திரட்டி வருவதாக ஜான் கிர்பி தெரிவித்தார். ஈராக்கில் தீவிரவாதிகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.[36] எண்ணெய் நிறுவனங்களை இஸிஸ் தீவிரவாதிகள் தாக்கிக் கைப்பற்றி வருவதைத் தொடர்ந்து அமெரிக்கா இத்தீவிரவாதிகள் மீது வான்வெளித் தாக்குதல் நடத்த வேண்டும் என 18 ஜூன் 2014 அன்று ஈராக் கேட்டுக் கொண்டது. ஆனால் அமெரிக்கா நேரடியாக எந்த பதிலையும் அளிக்கவில்லை.[37]

மீளக்கைப்பற்றுதல் தொகு

சுணி கிளர்ச்சியாளர்களிடமிருந்து ஈரானிய அரசப்படைகள் இழந்த பகுதிகளை மீளக்கைப்பற்றினர்.[38] மோசுல், திக்ரித் தவிர பிற இடங்களில் பெரும்பான்மையானவற்றை அரசு இராணுவம் அவற்றுடன் இணைந்த ஷியாக் குழுவும் மீளக்கைப்பற்றினர்.[35]

இராணுவ வீரர்கள் படுகொலை தொகு

சுணி இஸ்லாமியத் தீவிரவாதிகள் அரசப் படைகளைச் சேர்ந்த 1,700 வீரர்களைப் பிடித்துப் படுகொலை செய்ததாக அறிவித்துள்ளனர். மேலும் அப்படுகொலை தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டனர். ஆனால் ஈராக்கிய அரசாங்கம் 1,700 வீரர்கள் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பிலை என தீவிரவாதிகளின் அச்செய்தியை மறுத்துள்ளது.[39]

இந்திய ஊழியர்கள் கடத்தல் தொகு

ஈராக்கின் மோசுல் நகர் அருகே இந்தியாவைச் சேர்ந்த 40 கட்டுமான ஊழியர்கள் இசிஸ் அமைப்பால் கடத்தப்பட்டனர்.[40][41] அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டது. மேலும் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த 40 செவிலியர்கள் கலவரபகுதியில் உள்ளனர்.[41] தங்களைப் பத்திரமாக மீட்கும் படி செவிலியர்கள் இந்திய அரசைக் கேட்டுக் கொண்டனர்.[42] தீவிரவாதிகள் செவிலியர்களிடம் வழக்கம் போல பணிகளைச் செய்யுங்கள் என்றும், உங்களுக்கான ஊதியம் கிடைக்கும் என்றும் கூறினர்.[42] தீவிரவாதிகள் செவிலியர்களை மரியாதையுடன் நடத்தினர்.[42]

பாய்ஜி எண்ணெய் ஆலை கைப்பற்றல் தொகு

தீவிரவாதிகள் பாக்தாத்திலிருந்து வடக்கே 210 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள பாய்ஜி (Baiji) எண்ணெய் சுத்திர்கரிப்பு ஆலையைக் கைப்பற்றினர்.[43] இதில் தீவிரவாதிகள் 40 பேர் கொல்லப்பட்டனர்.[43] ஆலையின் 75% பகுதி தீவிரவாதிகளில் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.[43] மேலும் ஈராக்கிய அரசு வான்வெளித் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. மற்றுமொரு நகரான ரமாதியிலும் (Ramadi) சண்டை நடந்து வருகிறது.[43]

தொடர்புடைய கட்டுரை தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Mosul Falls, Indie Oil Should Rise". Forbes. http://www.forbes.com/sites/michaellynch/2014/06/11/mosul-falls-indie-oil-should-rise. பார்த்த நாள்: 11 June 2014. 
  2. Al-Salhy, Suadad; Fahim, Kareem. "Sunni Militants Drive Iraqi Army Out of Mosul". New York Times. http://www.nytimes.com/2014/06/11/world/middleeast/militants-in-mosul.html. பார்த்த நாள்: 10 June 2014. 
  3. Insurgents in Iraq Overrun Mosul Provincial Government Headquarters
  4. "After Mosul... The fall of Tikrit and closing Baghdad". Sky News Arabia. http://www.skynewsarabia.com/web/article/667602/%D8%AA%D9%83%D8%B1%D9%8A%D8%AA-%D8%A8%D8%A7%D9%94%D9%8A%D8%AF%D9%8A-%D8%A7%D9%84%D9%85%D8%B3%D9%84%D8%AD%D9%8A%D9%86-%D9%88%D8%A7%D8%B4%D8%AA%D8%A8%D8%A7%D9%83%D8%A7%D8%AA-%D8%A8%D8%B3%D8%A7%D9%85%D8%B1%D8%A7%D8%A1. பார்த்த நாள்: 11 June 2014. 
  5. "Mosul falls to militants, Iraqi forces flee northern city". Daily Star இம் மூலத்தில் இருந்து 10 ஜூன் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140610222750/http://dailystar.com.lb/News/Lebanon-News/2014/Jun-10/259539-militants-seize-control-of-mosul.ashx. பார்த்த நாள்: 10 June 2014. 
  6. "Jihadists seize areas in Iraq's Kirkuk province: police". Daily Star இம் மூலத்தில் இருந்து 17 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140717141515/http://www.dailystar.com.lb/News/Middle-East/2014/Jun-10/259607-jihadists-seize-areas-in-iraqs-kirkuk-province-police.ashx#axzz34FqLUJ42. பார்த்த நாள்: 10 June 2014. 
  7. "Jihadists take areas in Iraq's Salaheddin province". Daily Star இம் மூலத்தில் இருந்து 10 ஜூன் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140610213836/http://dailystar.com.lb/News/Middle-East/2014/Jun-10/259629-jihadists-take-area-in-iraqs-salaheddin-province-army.ashx#axzz34GOs71Ho. பார்த்த நாள்: 10 June 2014. 
  8. Mikael, Dana. "Peshmerga forces deployed to Mosul". BASNews. பார்க்கப்பட்ட நாள் 10 June 2014.
  9. http://www.thetimes.co.uk/tto/news/world/middleeast/iraq/article4116273.ece%7Cwebsite=தி டைம்ஸ்|accessdate=11 June 2014}}
  10. 10.0 10.1 10.2 10.3 10.4 "ISIS weighs approach on Baghdad". June 11, 2014. http://www.al-monitor.com/pulse/originals/2014/06/iraq-mosul-fall-army-breakdown.html. 
  11. 11.0 11.1 "Iraq army capitulates to Isis militants in four cities". The Guardian. 11 June 2014. http://www.theguardian.com/world/2014/jun/11/mosul-isis-gunmen-middle-east-states. பார்த்த நாள்: 11 June 2014. 
  12. http://www.thetimes.co.uk/tto/news/world/middleeast/iraq/article4116273.ece
  13. Battle to Establish Islamic State Across Iraq and Syria
  14. "The number of displaced people in Mosul rises to 280,000". Alwasat. http://www.alwasatnews.com/4295/news/read/894485/1.html. பார்த்த நாள்: 11 June 2014. 
  15. 15.0 15.1 "Iraq crisis: al-Qaeda forces seize Mosul and Tikrit - as it happened". Archived from the original on 2014-06-12. பார்க்கப்பட்ட நாள் 2014-06-12.
  16. "Iraq militants control second city of Mosul". BBC News. 10 June 2014. பார்க்கப்பட்ட நாள் 10 June 2014.
  17. "Iraq crisis: Islamists force 500,000 to flee Mosul". BBC News. 11 June 2014. பார்க்கப்பட்ட நாள் 11 June 2014.
  18. "Iraq PM calls emergency after Mosul seized". Al Jazeera English. 10 June 2014. பார்க்கப்பட்ட நாள் 10 June 2014.
  19. "Iraq's Fallujah falls to 'Qaeda-linked' militants". Daily Star. 4 January 2014 இம் மூலத்தில் இருந்து 4 ஜனவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140104212909/http://www.dailystar.com.lb/News/Middle-East/2014/Jan-04/243100-fallujah-outside-iraq-government-control-security-official.ashx#axzz2oNa3sbT8. பார்த்த நாள்: 10 June 2014. 
  20. "80 killed in Iraq as security forces re-take city of Samarra". Xinhua. 5 June 2014. http://news.xinhuanet.com/english/world/2014-06/05/c_126584362.htm. 
  21. "Une province irakienne entière aux mains des jihadistes". AFP. Liberation. 10 June 2014 இம் மூலத்தில் இருந்து 13 ஜூன் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140613094357/http://www.liberation.fr/monde/2014/06/10/la-deuxieme-plus-grande-ville-d-irak-aux-mains-des-insurges_1037307. பார்த்த நாள்: 10 June 2014. 
  22. "Iraq Update #42: Al-Qaeda in Iraq Patrols Fallujah; Aims for Ramadi, Mosul, Baghdad". Institute for the Study of War. http://iswiraq.blogspot.com/2014/01/iraq-update-42-al-qaeda-in-iraq-patrols.html. பார்த்த நாள்: 5 January 2014. 
  23. Fahim, Kareem; Al-Salhy, Suadad (10 June 2014). "Sunni Militants Drive Iraqi Army Out of Mosul". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2014/06/11/world/middleeast/militants-in-mosul.html. பார்த்த நாள்: 10 June 2014. 
  24. Sly, Liz; Ramadan, Ahmed (10 June 2014). "Insurgents seize Iraqi city of Mosul as troops flee". தி வாசிங்டன் போஸ்ட். http://www.washingtonpost.com/world/insurgents-seize-iraqi-city-of-mosul-as-troops-flee/2014/06/10/21061e87-8fcd-4ed3-bc94-0e309af0a674_story.html?hpid=z1. பார்த்த நாள்: 10 June 2014. 
  25. "Jihadists seize areas in Iraq's Kirkuk province, say police". Archived from the original on 2014-08-16. பார்க்கப்பட்ட நாள் 2014-06-12.
  26. "Half a million flee unrest in Iraq's Mosul". Al Jazeera. 11 June 2014. http://www.aljazeera.com/news/middleeast/2014/06/tens-thousands-flee-unrest-iraq-mosul-201461175824711415.html. பார்த்த நாள்: 11 June 2014. 
  27. "Al-Qaeda splinter group captures Iraqi oil refinery town". CBC News. 11 June 2014. http://www.cbc.ca/news/world/al-qaeda-splinter-group-captures-iraqi-oil-refinery-town-1.2671735. பார்த்த நாள்: 11 June 2014. 
  28. 28.0 28.1 28.2 Iraq army capitulates to Isis militants in 4 cities
  29. 29.0 29.1 "Iraqi city of Tikrit falls to ISIL fighters". Al Jazeera. 11 June 2014. http://www.aljazeera.com/news/middleeast/2014/06/iraqi-city-tikrit-falls-isil-fighters-2014611135333576799.html. பார்த்த நாள்: 11 June 2014. 
  30. "Insurgents overrun parts of Iraqi city of Tikrit". Trust.org via Reuters. 11 June 2014 இம் மூலத்தில் இருந்து 12 ஜூன் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140612164357/http://www.trust.org/item/20140611125744-34r69. பார்த்த நாள்: 11 June 2014. 
  31. "Iraq's Tikrit falls to militants: police". Daily Star Lebanon. 11 June 2014 இம் மூலத்தில் இருந்து 12 ஜூன் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140612023719/http://dailystar.com.lb/News/Middle-East/2014/Jun-11/259731-iraqs-tikrit-falls-to-militants-police.ashx#ixzz34L6aWB00. பார்த்த நாள்: 11 June 2014. 
  32. Fresh off Mosul victory, militants in Iraq wrest control of Tikrit
  33. http://www.bbc.com/news/world-middle-east-27823955
  34. http://www.aljazeera.com/news/middleeast/2014/06/obama-warns-us-action-against-isil-iraq-2014612221911327773.html
  35. 35.0 35.1 http://www.aljazeera.com/news/middleeast/2014/06/iraq-steps-up-offensive-against-rebels-2014615101325454832.html
  36. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-06-21. பார்க்கப்பட்ட நாள் 2014-06-18.
  37. http://www.dawn.com/news/1113660/iraq-calls-for-us-air-strikes-as-militants-enter-main-refinery
  38. http://www.bbc.co.uk/tamil/global/2014/06/140615_iraq_retake.shtml
  39. http://www.nytimes.com/2014/06/16/world/middleeast/iraq.html?_r=0
  40. http://www.firstpost.com/world/iraq-live-no-reports-of-indians-being-targetted-says-mea-1576009.html
  41. 41.0 41.1 http://timesofindia.indiatimes.com/india/40-Indians-kidnapped-in-Iraqs-Mosul/articleshow/36746485.cms
  42. 42.0 42.1 42.2 http://news.vikatan.com/article.php?module=news&aid=29186[தொடர்பிழந்த இணைப்பு]
  43. 43.0 43.1 43.2 43.3 http://www.bbc.com/news/world-middle-east-27897648
"https://ta.wikipedia.org/w/index.php?title=2014_வட_ஈராக்_தாக்குதல்&oldid=3867443" இலிருந்து மீள்விக்கப்பட்டது