2016 கொல்கத்தா மேம்பாலம் இடிபாடு

மார்ச் 31, 2016 அன்று கொல்கத்தாவின் கிரீசு பூங்காவின் அண்மையில் புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்தது. இதில் குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர்; குறைந்தது 75 பேர் காயமுற்றனர்.[1][2]

2016 கொல்கத்தா மேம்பாலம் இடிபாடு
நாள்மார்ச்சு 31, 2016 (2016-03-31)
அமைவிடம்கிரீஷ் பார்க், கொல்கத்தா, இந்தியா
இறப்புகள்குறைந்தது 25
காயமுற்றோர்குறைந்தது 75
காணாமல் போனோர்குறைந்தது 100

பின்னணி தொகு

கொல்கத்தாவின் கிரிஷ் பூங்காவில் இருந்து ஹவுரா பகுதியை இணைக்கும் வகையில் 2.2 கி.மீட்டர் தொலைவிற்கு விவேகானந்தா மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் 2008இல் கோரப்பட்டு 2009இல் பணி துவங்கியது. இதனை கட்டி முடிக்க ஐதராபாத்தைத் தலைமையகமாகக் கொண்ட ஐவிஆர்சிஎல் நிறுவனத்திற்கு பணியாணை வழங்கப்பட்டது. 2010ஆம் ஆண்டில் முடிந்திருக்க வேண்டிய இப்பணி பலமுறை முடிவுநாட்களை தள்ளிப்போட்டு முடிவுறா நிலையில் இருந்தது.[3]. மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த ஒப்பந்த நிறுவனத்துக்கு கொல்கத்தா பெருநகர மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டது. இதனால் விபத்து நிகழ்வதற்கு முன்னதாக பணிகள் வேகமாக நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இடிந்து விழுவதற்கு முதல்நாள், மார்ச் 30, 2016 அன்று, மேம்பாலத்தில் காங்கிறீட்டு ஊற்றப்பட்டது. இந்நிலையில் மார்ச் 31, 2016 வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் புரா பஜார் பகுதியில் சுமார் 250 மீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் பாலத்தின் கீழே தானுந்துகள், பேருந்துகள் உள்ளிட்ட ஊர்திகள் சென்று கொண்டிருந்தன. நடைப்பயணிகளும் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் மேம்பால இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

மேற்சான்றுகள் தொகு

  1. பிடிஐ. "கொல்கத்தா மேம்பாலம் இடிந்து 22 பேர் பலி: 78 பேர் படுகாயங்களுடன் மீட்பு, 100-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கினர்". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 1 April 2016.
  2. "கொல்கத்தா மேம்பால விபத்தில் பலி 24 ஆனது; மீட்புப் பணிகள் தீவிரம்". தி இந்து (தமிழ்). 1 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "Rush job on delayed flyover kills 21 in Kolkata, many still feared trapped under rubble". timesofindia.indiatimes.com. Times of India. பார்க்கப்பட்ட நாள் 1 April 2016.