2016 நீசு தாக்குதல்கள்

சூலை 14, 2016 அன்று பிரான்சின் நீஸ் நகரத்தில் பாஸ்டில் நாள் கொண்டாட்டங்களின் போது மக்கள்கூட்டம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நீஸ் புரோமானாடு டெசு ஆங்கிலேசு சாலையில் வேண்டுமென்றே மக்கள்கூட்டத்தின்மீது சுமையுந்து ஒன்றை மிக விரைவாக ஓட்டியும் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியும் குறைந்தது 84 பேர் வரை கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர் தனியாள் என்றும் வாகனம் இரண்டு கிமீ (1.25 மைல்கள்) கூட்டத்தினுள் சென்று மோதியது என்றும் காவல்துறை அறிவித்துள்ளது. இந்த சுமையுந்தின் ஓட்டுநரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.[5] இந்தத் தாக்குதலை நடத்தியவர் மொகமது லாவ்யிஜ் பூலெல் என கண்டறியப்பட்டுள்ளது.[6][7]

2016 நீசு தாக்குதல்
புரோமானாடெ சாங்கிலேசு
புரோமானாடெ சாங்கிலேசு ( 2004இல் எடுக்கப்பட்டது)
தாக்கிய வழி - மேற்கிலிருந்து கிழக்காக
இடம்புரோமானாடெ சாங்கிலேசு, நீஸ், பிரான்சு
ஆள்கூறுகள்43°41′37″N 7°15′20″E / 43.693616°N 7.255654°E / 43.693616; 7.255654
நாள்14 சூலை 2016 (2016-07-14) (பாஸ்டில் நாள்)
அண். 22:45 CEST (UTC+02:00)
தாக்குதல்
வகை
வாகனத் தாக்குதல்
ஆயுதம்A 7.5–18-டன் ரெனொ மிட்லம் சுமையுந்து, தாக்குதல் நீள் துப்பாக்கி
இறப்பு(கள்)84+[1][2][3]
காயமடைந்தோர்202 (52 மிகமோசமாக)[2]
தாக்கியோர்மொகமது லாவ்யிஜ் பூலெல், 31-அகவை பிரான்சிய-தூனிசியர்.[4]
புரோமெனாடெ சாங்கிலேசு (ஆங்கிலேயர் நடைத்தடம்)

பின்னணி தொகு

தாக்குதல் நடப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்னதாக, காலையில், பிரான்சிய குடியரசுத் தலைவர் பிரான்சுவா ஆலந்து நவம்பர் 2015 பாரிசுத் தாக்குதலுக்குப் பிறகு செயலாக்கத்தில் இருந்த நெருக்கடி நிலையை சூலை 26, 2016 அன்று தூர் த பிரான்சு முடிந்தவுடன் விலக்குவதாக உறுதியளித்தார்.[8]

தாக்குதல் தொகு

நீஸ் நகரத்தில் ஏறத்தாழ 22:40 உள்ளூர் நேரத்திற்கு பாஸ்டில் நாள் கொண்ட்டாட்டங்களின் அங்கமாக வாணவெடிக் காட்சியை காணக் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது 25-tonne (28-டன்) சரக்குந்தி ஒன்றை புரொமெனேடு டெசு ஆங்கிலேசு சாலையில் மிக விரைவாக செலுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது. சுமையுந்தி 32 முதல் 40 km/h (20 முதல் 25 mph) வேகத்தில் செலுத்தப்பட்டு மக்கள் மீது மோதுவதற்கு முன்பாக குறைந்தது 100 m (330 அடி) தொலைவு வந்துள்ளது.[9]

செபாஸ்டியன் அம்பெர்ட் என்ற உள்ளாட்சி அமைப்பு அலுவலர் "இறந்தவர் எண்ணிக்கை மிகக் கூடுதலாக உள்ளது" என்றும் துப்பாக்கிச் சீடு பரிமாற்றம் நடந்ததாகவும் சுமையுந்து ஓட்டுநர் கொல்லப்பட்டு விட்டதாகவும் கூறினார்.[10] சில நேரடி சாட்சிகளும் இதனை உறுதி செய்தனர்.[11] வண்டியைச் சோதனையிட்டதில் பல ஆயுதங்களும் கையெறி குண்டுகளும் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.[12][13][14]

வட்டார சட்டப்பேரவை தலைவர் கிறிஸ்டியன் எசுட்ரோசி தாக்குதலின்போது 70க்கும் கூடுதலானவர்கள் உயிரிழந்தனர் எனக் கூறியுள்ளார்.[15]

தாக்கியவர் தொகு

இந்தத் தீவிரவாதத் தாக்குதலை நடத்தியவர் 31 அகவையான பிரான்சிய- தூனிசிய இருநாட்டு குடியுரிமை பெற்ற மனிதர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்; அவரது பெயர் மொகமது லாவ்யீஜ் பூலெல்.[16] வண்டியில் இவரது அடையாள அட்டை இருந்தது.[4]

காவல்துறை அறிக்கைகளின்படி தூனிசியாயில் பிறந்த மொகமது 2005இல் குடிபெயர்ந்து பிரான்சிய குடியனுமதி பெற்று நீசு நகரில் வாழ்ந்து வந்தார்.[7] திருமணம் புரிந்து மூன்று மக்கள் உள்ளனர்; ஆனால் மணமுறிவுக்கான செயற்பாட்டில் இருந்தார். பணநெருக்கடியில் இருந்த மொகமது ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். தாக்குதலுக்கு ஓராண்டுக்கு முன்னர்தான் சுமையுந்து ஓட்டுவதற்கான அனுமதியைப் பெற்றிருந்தார்.[16]

ஊடகச் செய்திகளின்படி, ஐந்து குற்றவியல் குற்றங்களுக்காக காவல்துறையில் அறியப்பட்டிருந்தார். குறிப்பாக ஆயுதமேந்திய வன்முறைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு ஒரு மாதம் முன்புதான் போக்குவரத்து விபத்தொன்றிற்காக கைது செய்யப்பட்டார். பிரான்சில் வசிக்கும் இவரது பெற்றோரும் மணமுறிவு பெற்றவர்கள். மொகமது அடிக்கடி தூனிசியா செல்வார். தூனிசிய மண்ணில் எந்தவொரு தீவிரவாதச் செயலிலும் ஈடுபட்டதாக தூனிசிய அதிகாரிகளிடம் பதியப்படவில்லை. இருப்பினும் போதை மருந்துகள், மது தொடர்புள்ள குற்றங்களில் ஈடுபட்டிருந்ததாக தெரிகின்றது.

பாதிப்படைந்தவர் தொகு

பாதிப்படைந்தோரின் தேசியம்
நாடு இறப்பு காயம் மேற்.
  அல்ஜீரியா 3 [17]
  ஆர்மீனியா 1 [18][19]
  ஆத்திரேலியா 3 [20]
  பெல்ஜியம் 1 [21]
  சீனா 2 [22]
  எசுத்தோனியா 2 [23]
  பிரான்சு 5 [24]
  செருமனி 3 [25]
  அயர்லாந்து 1 [26]
  கசக்கஸ்தான் 1 [21]
  மொரோக்கோ 3 [27]
  போர்த்துகல் 1 [28]
  உருசியா 2 1 [17][29]
  சுவிட்சர்லாந்து 2 [18][21]
  தூனிசியா 3 [17][30]
  உக்ரைன் 1 2 [31]
  ஐக்கிய இராச்சியம் 1 [17]
  ஐக்கிய அமெரிக்கா 2 [18][32]
  போலந்து 2 [33]
அறியப்படாதவர் 56 190
மொத்தம் 84+ 202 [34]

தாக்குதலில் மொத்தம் 84 பேர் உயிரிழந்துள்ளனர்; 52 பேர் தங்கள் காயங்களுக்காக நெருக்கடி சிகிட்சை பெற்று வருகின்றனர்.[34] பல பிரான்சியக் குடிகள் இறந்துள்ள வேளையில் பல வெளிநாட்டினரும் உயிரிழந்துள்ளனர்.[18][35][36] இறந்தவர்களில் பல முசுலிம்களும் இருந்துள்ளனர்.[37][38][39]

மேற்சான்றுகள் தொகு

  1. "EN DIRECT – Attentat sur la promenade des Anglais à Nice" (in French). France: Le Figaro. http://www.lefigaro.fr/actualite-france/2016/07/14/01016-20160714LIVWWW00269-attentat-nice-promenade-des-anglais.php. 
  2. 2.0 2.1 "At Least 77 Dead After Truck Plows Into Crowd in Nice". ABC. http://abcnews.go.com/International/nice-lockdown-amid-fears-terror-attack/story?id=40590537&cid=abcn_tco. பார்த்த நாள்: 15 July 2016. 
  3. Almasy, Steve. "Live updates: Truck driver attacks crowd in Nice, killing dozens". CNN. http://www.cnn.com/2016/07/14/europe/nice-truck-attack-live-blog/index.html?sr=twcnni071516nice-truck-attack-live-blog0106AMVODtopLink&linkId=26580389. 
  4. 4.0 4.1 "'Truck attack' on Bastille Day in Nice". rt.com. Russia: Russia Today. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.
  5. "பிரான்ஸ் நாட்டில் தீவிரவாத தாக்குதலில் 75 பேர் பலி: மக்கள் கூட்டத்தில் லாரியை மோத செய்து கொடூரம்". தினகரன். 15 சூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 14 சூலை 2016.
  6. "Attentat de Nice : ce que l'on sait du chauffeur, Mohamed Lahouaiej Bouhlel" (in fr-FR). Nouvel Obs. http://tempsreel.nouvelobs.com/societe/attaque-de-nice/20160715.OBS4681/attentat-de-nice-ce-que-l-on-sait-du-chauffeur-du-camion.html. பார்த்த நாள்: 15 July 2016. 
  7. 7.0 7.1 "Attentat à Nice : le suspect a été formellement identifié". Europe1. பார்க்கப்பட்ட நாள் 15 July 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. "Hollande confirms the end of a state of emergency after the Tour de France". பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.
  9. "At least 74 killed as truck plows into crowd in Nice, France, on Bastille Day".
  10. Chrisafis, Angelique (14 July 2016). "Multiple fatalities after lorry drives into crowd in Nice – reports". தி கார்டியன். பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.
  11. "'30 dead' after truck crashes into crowd at Bastille Day celebrations in Nice 'terror attack'". The Telegraph. 14 July 2016. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.
  12. "LIVE: Scores Killed In France Truck Attack". Sky News. http://news.sky.com/story/live-scores-killed-in-france-truck-attack-10502078?dcmp=snt-sf-twitter. பார்த்த நாள்: 14 July 2016. 
  13. "Nice Bastille Day Attack". பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.
  14. "The Latest: Nice official says truck driver killed by police" (in en-US) இம் மூலத்தில் இருந்து 16 ஜூலை 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160716062054/http://bigstory.ap.org/article/3580951daa5949318dba6a06a10da584/latest-officials-expect-dozens-dead-nice. 
  15. "Driver shot dead after plowing truck into crowd in France, more than 70 believed dead".
  16. 16.0 16.1 "Attentat de Nice : ce que l'on sait du tueur du 14 juillet". Atlantico. 15 July 2016 இம் மூலத்தில் இருந்து 30 செப்டம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180930121815/http://www.atlantico.fr/pepites/attentat-nice-que-on-sait-tueur-14-juillet-2765127.html. பார்த்த நாள்: 15 July 2016. 
  17. 17.0 17.1 17.2 17.3 "Nice Terror Attack Victims' Names And Nationalities Revealed After France Bastille Day Massacre". International Business Times. பார்க்கப்பட்ட நாள் 15 July 2016.
  18. 18.0 18.1 18.2 18.3 "Dozens killed during Bastille Day celebrations". BBC News. 15 July 2016.
  19. "The Latest: Truck is new dimension of attacks in Europe". 14news.com. Archived from the original on 15 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 15 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  20. "Nice attack: Julie Bishop confirms three Australians injured in 'horrific' terrorist assault". Australian Broadcasting Corporation. பார்க்கப்பட்ட நாள் 15 July 2016.
  21. 21.0 21.1 21.2 "One Belgian among the victims in Nice". De Redactie. பார்க்கப்பட்ட நாள் 15 July 2016.
  22. "Two Chinese injured in Nice attack". Xinhua News Agency. பார்க்கப்பட்ட நாள் 15 July 2016.
  23. "The Latest: Neighbors: police raided suspect's old address". WBRC. Archived from the original on 15 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 15 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  24. "Who were the Nice attack victims?". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 15 July 2016.
  25. "Terror in Nice: Details of victims emerge". WUSA. Archived from the original on 15 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 15 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  26. "Nice: 'Serious concerns' over Irishman caught up in attack". BBC News.
  27. "At Least Three Moroccans Killed in Nice Attack". Morocco World News. பார்க்கப்பட்ட நாள் 15 July 2016.
  28. "Governo confirma um português entre os feridos do atentado de Nice". Jornal de Negócios (in போர்ச்சுகீஸ்). பார்க்கப்பட்ட நாள் 15 July 2016.
  29. "Who are the victims of the Nice terror attack?". த டெயிலி டெலிகிராப். 15 July 2016.
  30. "What We Know About The Victims Of The Attack In Nice". The Huffington Post. பார்க்கப்பட்ட நாள் 15 July 2016.
  31. "The number of victims of the terrorist attack Ukrainian increased in Nice". Ukrayinska Pravda (in உக்ரைனியன்). 15 July 2016.
  32. "France reels as Bastille Day attack leaves 84 dead in Nice". Associated Press.
  33. "Dwie Polki wśród ofiar zamachu w Nicei. Znamy szczegóły". Archived from the original on 2016-07-15. பார்க்கப்பட்ட நாள் 2016-07-15.
  34. 34.0 34.1 "Nice attack: Dozens killed during Bastille Day celebrations". BBC News.
  35. "Three Germans on school trip 'among Nice terror victims'". The Local (Germany). 15 July 2016. http://www.thelocal.de/20160715/germany-at-frances-nice-terrorism-merkel-isis. 
  36. "Berlin students reportedly among dead in Nice". DW.com. 15 July 2016.
  37. Cockburn, Harry. "Nice attack: Many Muslims reportedly among 84 killed by lorry". The Independent. http://www.independent.co.uk/news/world/europe/nice-attack-latest-news-lorry-terrorism-muslim-victims-isis-a7138156.html. பார்த்த நாள்: 15 July 2016. 
  38. "Nice terror attack: Truck driver who killed 84 named as 'loner' French-Tunisian criminal who 'became depressed' when wife left him as police question estranged spouse". The Daily Telegraph. http://www.telegraph.co.uk/news/2016/07/15/nice-terror-attack-driver-who-killed-84-on-french-riviera-was-cr/. பார்த்த நாள்: 15 July 2016. 
  39. "Nice: "Ma mère est morte dans l'attentat. Elle pratiquait un vrai islam"". L'Express. http://www.lexpress.fr/actualite/societe/nice-ma-mere-est-morte-dans-l-attentat-elle-pratiquait-un-vrai-islam_1812694.html?utm_medium=Social&utm_campaign=Echobox&utm_source=Twitter&link_time=1468583711#xtor=CS3-5083. பார்த்த நாள்: 15 July 2016. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=2016_நீசு_தாக்குதல்கள்&oldid=3926869" இலிருந்து மீள்விக்கப்பட்டது