சிறப்பு எல்லைப்புறப் படை

சிறப்பு எல்லைப்புறப் படை (Special Frontier Force (SFF) இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வெளிநாட்டு உளவுப் பிரிவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் கீழ் செயல்படும் துணைநிலை இராணுவப் படையாகும்.[1] இது இந்திய சீனப் போருக்குப் பின்னர் 14 நவம்பர் 1962-இல் இமயமலையில் உள்ள இந்திய எல்லைகளை, சீனர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களின் பார்வையிலிருந்து கண்காணிப்பதற்கான அமைக்கப்பட்ட சிறப்பு எல்லைப் படையாகும்.[2] இப்படையில் 5,000 வீரர்கள் கொண்டுள்ளனர்.

சிறப்பு எல்லைப்புறப் படை
பனிச் சிங்கம், சிறப்பு எல்லைப்புறப் படையின் சின்னம்
உருவாக்கம்14 நவம்பர் 1962
நாடு இந்தியா
வகைசிறப்பு பாதுகாப்புப் படைகள்
பொறுப்புசிறப்பு உளவுப் பணி
நேரடி இராணுவ நடிவடிக்கை
பணயக் கைதிகளை மீட்டல்
எதிர்-பயங்கரவாத நடவடிக்கை
வழக்கற்ற போர் முறை
வெளிநாட்டின் உட்பாதுகாப்பில் தலையிடுதல்
இரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்தல்
அளவு5,000 - 10,000 படைவீரர்கள்
பகுதிஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு
தலைமையிடம்சக்ராதா, டேராடூன் மாவட்டம், உத்தராகண்ட், இந்தியா
சுருக்கப்பெயர்(கள்)எஸ்டாபிளிஷ்மெண்ட் 22 அல்லது 22
சண்டைகள்வங்காளதேச விடுதலைப் போர்
புளூஸ்டார் நடவடிக்கை
காக்டஸ் நடவடிக்கை
பவன் நடவடிக்கை
கார்கில் போர்
ரட்சக் நடவடிக்கை
2020 இந்தியா-சீனா எல்லை மோதல்கள்
வானூர்திகள்
உலங்கு வானூர்திசீட்டா
லான்சர்
சரக்கு
உலங்கு வானூர்தி
மில்-மி 17
பயன்பாட்டு உலங்கு வானூர்திதுருவ்
சேத்தக்
வேவுIAI Searcher II
IAI Heron
DRDO Rustom
போக்குவரத்துGulfstream III
IAI Astra 1125

இந்திய அமைச்சரவை செயலகத்தின் பாதுகாப்பு இயக்குநரின் கீழ், 5,000 வீரர்கள் கொண்ட இப்படையின் தலைமை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இந்திய இராணுவத்தின் மேஜர் ஜெனரல் இருப்பார். இப்படையின் செயல்பாடுகள் குறித்து இவர் இந்தியப் பிரதமருக்கு மட்டும் அறிக்கை அளிப்பார்.[3] இதன் தலைமையிடம் உத்தராகண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவடடத்தில் உள்ள சக்ராதா எனுமிடத்தில் உள்ளது.[4]

இந்த சிறப்பு எல்லைப்புற படை வீரர்கள் இந்திய எல்லைபுறங்களில் குறிப்பாக இமயமலைப் பகுதிகளில், சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் உளவுப் பணிகள் மேற்கொள்வதில் கைதேர்ந்தவர்கள். இப்படையின் அனைத்து வீரர்ககளும் இமயமலை பகுதியில் வாழும் திபெத்தியர்கள் மற்றும் கோர்க்காக்கள் ஆவர்.[5] இவர்களது முகம் மற்றும் உடலமைப்பு சீனர்கள் போன்று இருப்பதால் திபெத் மற்றும் லடாக் போன்ற பகுதிகளில் இப்படை வீர்ர்களால் இராணுவ உளவுப் பணிகளில் ஈடுபட வசதியாக உள்ளது.

சிறப்பு எல்லைப்புற படை இதுவரை வங்காளதேச விடுதலைப் போர், புளூஸ்டார் நடவடிக்கை[6] காக்டஸ் நடவடிக்கை, பவன் நடவடிக்கை, கார்கில் போர், ரட்சக் நடவடிக்கை மற்றும் 2020 இந்திய-சீனா எல்லை மோதல்களில் ஈடுபட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. Bollywood Sargam – Special: Tibetan faujis in Bluestar பரணிடப்பட்டது 2 மே 2013 at the வந்தவழி இயந்திரம்
  2. Ajai Shukla (2020-09-02). "Ladakh intrusions: Special Frontier Force takes first casualties". Business Standard India. https://www.business-standard.com/article/defence/ladakh-intrusions-special-frontier-force-takes-first-casualties-120090200030_1.html. 
  3. Chhina, Man Aman Singh; Kaushik, Krishn (2020-09-02). "Explained: What is the Special Frontier Force, referred to as Vikas Battalion?". The Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-02.{{cite web}}: CS1 maint: url-status (link)
  4. "Establishment 22". chushigangdruk.org. 17 திசம்பர் 1971. Archived from the original on 17 சனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 28 செப்டெம்பர் 2012.
  5. Special Frontier Force: Why is a covert group now under the spotlight?
  6. Bobb, Dilip (15 December 1980). "Special Frontier Force: More of a white elephant than an effective intelligence outfit?". India Today. https://www.indiatoday.in/magazine/indiascope/story/19801215-special-frontier-force-more-of-a-white-elephant-than-an-effective-intelligence-outfit-773611-2013-12-02.