சிறீகாந்தலட்சுமி அருளானந்தம்

சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் (1961 - திசம்பர் 25, 2019)[1] இலங்கையைச் சேர்ந்த ஒரு நூலகவியலாளரும் எழுத்தாளரும் ஆவார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விசார் நூலகர்.

சிறீகாந்தலட்சுமி அருளானந்தம்
பிறப்பு1961
இணுவில், யாழ்ப்பாணம்
இறப்புதிசம்பர் 26, 2019 (அகவை 57–58)
யாழ்ப்பாணம்
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிநூலகர்
பணியகம்யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர், நூலகர்

இணுவிலில் பிறந்த இவர் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் கல்வி கற்றுப் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டதாரியானார். பின்னர் பெங்களூரில் தகவல் அறிவியல், ஆவணப்படுத்தலில் பட்டப்பின்படிப்பை மேற்கொண்டார்.

இவரது நூல்கள் தொகு

  • தகவல் வளங்களும் சேவைகளும் (குமரன் புத்தக நிலையம்)
  • தகவல்வள முகாமைத்துவம் (குமரன் புத்தக நிலையம்)
  • நூலக அபிவிருத்தி : ஒரு பயில்நோக்கு (சேமமடு)
  • அகரவரிசை-பகுப்பாக்கக் கலைச்சொற்தொகுதி (குமரன் புத்தக நிலையம்)
  • சொற்கருவூலம்: உருவாக்கம் பராமரிப்பு பயன்பாடு (நூலக விழிப்புணர்வு நிறுவகம்)
  • நூலகப் பகுப்பாக்கம் நூலகர் கைநூல்
  • நூலக தகவல் அறிவியல் ஆய்வுக் கோவை

மேற்கோள்கள் தொகு

தளத்தில்
சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் எழுதிய
நூல்கள் உள்ளன.